பல நோய்களுக்கு பயன்தரும் அற்புத மூலிகை திப்பிலி!

திப்பிலி
திப்பிலி

திப்பிலியின் வேரை, ‘திப்பிலி மூலம்’ என்று அழைப்பார்கள். திப்பிலி என்றும், மாதவி என்றும் இதற்குப் பெயர். ‘கணா’ என்றும் சொல்வதுண்டு. உலர்ந்தால் இது உஷ்ண வீர்யமாக மாறும். இருமல், சளி, கபம், அதிகரித்த மூட்டு வாதம் போன்றவற்றுக்கு இது சிறந்தது.

திப்பிலியினால் செய்யப்படும் தைலம் மூல நோய்களுக்கும், குடலில் வாய்வு சேர்ந்த நிலைகளிலும் வஸ்தி (இனிமா) செய்யவும் பயன்படுகிறது. இதை 15 நாட்களுக்கு மேல் அதிகமாகப் பயன்படுத்துவது இல்லை.

திப்பிலியின் காய்களில் வெற்றிலை போன்ற காரத்தன்மை அடங்கி உள்ளதால் வாசனை இருக்கும். கருமிளகை காட்டிலும் திப்பிலியின் காய்களில் காரத்தன்மை மிகுந்து இருக்கும். வெற்றிலை வகையைச் சார்ந்த இது, ‘பைப்பா லாங்கம்’ என்ற தாவரப் பெயரால் அழைக்கப்படுகிறது.

திப்பிலி 10 கிராம், தேற்றான் விதை 5 கிராம் சேர்த்துப் பொடியாக்கி அரிசி கழுவிய நீரில் 5 கிராம் போட்டு ஏழு நாளைக்கு காலையில் குடித்து வர வெள்ளைப்படுதல் நீங்கும். மேலும், திப்பிலி பழத்தில் தயார் செய்யப்படும் பேஸ்ட் பயன்படுத்தி வந்தால் பல் வலி பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

திப்பிலியில் பைபர் உள்ளதால் அவை கொழுப்பை குறைக்கும் திறனை கொண்டுள்ளது. மலச்சிக்கல், வாய்வு மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பல செரிமான சிக்கல்களை தடுக்கும் ப்ரீபயாட்டிக் ஆற்றலை திப்பிலி கொண்டுள்ளது. இதன் நோய் எதிர்ப்புப் பண்பு காரணமாக வயிற்றுப் புண் போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் பாதுகாக்க உதவுகிறது. மேலும், புற்றுநோயின் வளர்ச்சியை தடுக்கிறது.

தோல் நீக்கிய சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றையும் சம அளவு எடுத்து வறுத்து பொடி செய்து அரை கிராம் அளவு தேனில் கலந்து மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், நீர் கோவை, தொண்டைக் கமறல் ஆகியவை குணமாகும்.

திப்பிலி, சித்தரத்தை, அதிமதுரம், பனங்கற்கண்டு நான்கையும் தலா 100 கிராம் அளவு எடுத்து அரைத்து தினமும் 2 கிராம் அளவு தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் சைனஸ், தும்மல், தலைபாரம் போன்றவை குணமாகும்.

எலுமிச்சை சாறில் திப்பிலியை ஊற வைத்து காய வைத்து பொடி செய்து தினமும் 2 கிராம் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் நெஞ்செரிச்சல், ஏப்பம் போன்ற பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
எந்த நேரமும் காதில் இயர் போனுடன் இருப்பவரா நீங்கள்? காது பாத்திரம்!
திப்பிலி

உடலில் ஏற்படும் தசைவலி, வயிற்றுப்போக்கு, இருமல், கபம், சுவாசக் குழல் அடைப்பு, மார்புச்சளி ஆகியவற்றிற்கு சிறந்த மருந்தாக இது பயன்படுகிறது.

திப்பிலி, கடுக்காய் பொடி இரண்டையும் சம அளவு எடுத்து தேனில் கலந்து அரை டீஸ்பூன் அளவு காலை, மாலை என இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் இளைப்பு நோய் நீங்கும்.

பசும்பாலில் திப்பிலி பொடியை போட்டு காய்ச்சி அருந்தி வந்தால் இருமல், வாய்வு தொல்லை நீங்கும். திப்பிலியை நெய்யுடன் கலந்து சாப்பிட்டால் ஆண்மை பெருகும். திப்பிலியை வறுத்து பொடியாக்கி அதில் அரை கிராம் எடுத்து தேனில் கலந்து இரு வேளை சாப்பிட்டு வந்தால் தொண்டை கமறல், பசியின்மை குணமாகும்.

சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவ முறைகளில் திப்பிலி அதிகமாகப் பயன்படுத்தப்படும் மூலிகை ஆகும். எனவே, நாம் சிறு சிறு பிரச்னைகளுக்கு தகுந்த மருத்துவர் ஆலோசனையுடன் திப்பிலியை பயன்படுத்தி நலமுடன் வாழ்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com