தொப்புள் பகுதியை சுத்தம் செய்யும் முறைகளும், அதன் முக்கியத்துவங்களும்! 

Belly Button
Tips to Clean Belly Button and Its Importance

சுகாதாரம் சார்ந்த விஷயங்களில் தொப்புளை நாம் என்றுமே கவனிப்பதில்லை. ஆனால் அதை நாம் முறையாக சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். தொப்புளை முறையாக சுத்தப்படுத்துவதால் நோய் தொற்றுக்களின் அபாயத்திலிருந்து நாம் விலகி இருக்க முடியும். இந்தப் பதிவில் தொப்புளை சுத்தம் செய்வதன் முக்கியத்துவத்தையும், அதை எப்படி முறையாக சுத்தம் செய்ய வேண்டும் என்பது பற்றியும் முழுமையாகப் பார்க்கலாம். 

தொப்புளை சுத்தம் செய்வதன் முக்கியத்துவம்: தொப்புள் நமது உடலில் உள்ள ஒரு சிறிய பகுதியாகும். அது ஈரமான பகுதி என்பதால், அழுக்கு, வியர்வை, இறந்த சரும செல்கள் மற்றும் பாக்டீரியாக்கள் போன்றவை அங்கு இருக்கலாம். எனவே அந்த பகுதியில் சுகாதாரத்தை புறக்கணிப்பது என்பது பல சிக்கல்களுக்கு வழி வகுக்கும். 

அழுக்கு நிறைந்த தொப்புள் என்பது பாக்டீரியாக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடமாகும். இது பாக்டீரியா அல்லது ஈஸ்ட் தொற்று போன்றவற்றிற்கு வழிவகுக்கும். இதனால் அரிப்பு, தொப்புள் சிவத்தல் மற்றும் மோசமான வாசனை போன்றவை ஏற்படலாம். கேண்டிடா போன்ற பூஞ்சைகள் சூடான மற்றும் ஈரமான சூழலில் செழித்து வளரக்கூடியவை. இந்த பூஞ்சைத் தொற்றால் தொப்புள் பகுதி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. 

மோசமான சுகாதாரம் வியர்வை, பாக்டீரியா மற்றும் இறந்த செல்கள் தொப்புளில் சேர்ந்து விரும்பத்தகாத வாசனையை ஏற்படுத்தும். எனவே தொப்புளை முறையாக சுத்தம் செய்வது அவசியமானதாகும். 

தொப்புளை எப்படி சுத்தம் செய்வது? 

நீங்கள் குளிக்கும்போது அந்த சோப்பை பயன்படுத்திய தொப்புளை எளிதாக சுத்தம் செய்யலாம். இந்த பகுதி மிகவும் மென்மையானது என்பதால், அதிக ரசாயனங்கள் இல்லாத சோப்பை பயன்படுத்தவும். 

தொப்புளில் இருக்கும் அழுக்குகளை நீக்குவதற்கு மென்மையான பருத்தி துணியை பயன்படுத்தவும். இதனால் எந்த அசௌகர்யமும், காயமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். 

தொப்புளை சுத்தம் செய்த பிறகு, அந்தப் பகுதியில் ஈரம் இல்லாமல் துணி வைத்து துடைக்கவும். ஏனெனில் ஈரப்பதம், பாக்டீரியா அல்லது பூஞ்சை வளர்ச்சிக்கு வழி வகுக்கலாம். தொப்புள் பகுதியில் காயங்கள் இருந்தால், அதை விரைவாக உளர்த்துவதில் கவனம் செலுத்துங்கள். ஏனெனில் ஈரப்பதம், காயத்தின் அளவை மோசமாக்கும். 

தொப்புளில் வீக்கம், சிவந்து போதல் அல்லது அசாதாரண வாசனைகள் போன்ற ஏதேனும் அறிகுறிகள் தென்படுகிறதா என்பதை பரிசோதிக்க நேரம் ஒதுக்குங்கள். ஏதேனும் மோசமான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சுகாதார நிபுணரை அணுகுவது நல்லது. 

இதையும் படியுங்கள்:
AI குறித்த அச்சத்தைத் தூண்டிவிட்ட எலான் மஸ்க்... இனி எல்லாம் காலி! 
Belly Button

தொப்புளை சுத்தம் செய்யும்போது, நீங்களே காயம் உண்டாக்கிக் கொள்ளும் வாய்ப்புள்ளது. எனவே மிகவும் கடினமாக தொப்புளை சுத்தம் செய்ய வேண்டாம். குறிப்பாக தொப்புளின் உள்ளே சுத்தம் செய்யும் போது கூர்மையான பொருட்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். துணியை வைத்து அதிகமாக தேய்த்துக் கொண்டிருந்தால் அது காயத்தை ஏற்படுத்தும் என்பதால், மென்மையாக கையாளுங்கள். 

இந்த வழிகளைப் பின்பற்றி தொப்புளை என்றும் சுத்தமாக வைத்திருப்பதில் கவனம் செலுத்துங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com