ஃபுட் பாய்சன் எனப்படும் உணவு விஷப் பிரச்சனை நாம் அனைவரும் ஒரு முறையாவது எதிர்கொண்டிருக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். மோசமான உணவை உட்கொள்வதால் ஏற்படும் இந்த பாதிப்பு வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்று வலி போன்ற அசௌகரியங்களை ஏற்படுத்தும். சில சமயங்களில் இது மிகவும் தீவிரமான நிலையை ஏற்படுத்தி மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தும். எனவே, ஃபுட் பாய்சன் பாதிப்பு ஏற்படாமல் தடுப்பது மிகவும் முக்கியம்.
ஃபுட் பாய்சன் ஏற்படுவதற்கான காரணங்கள்:
சால்மோனெல்லா, ஈகோலி போன்ற பாக்டீரியாக்கள் கெட்டுப்போன உணவின் மூலம் உடலுக்குள் நுழைந்து, உணவு விஷத்தை ஏற்படுத்தும். மேலும், நோரோ வைரஸ், ஹெபடைடிஸ் ஏ வைரஸ் போன்றவை உணவு விஷத்திற்கு முக்கிய காரணிகளாகும்.
சில வகை புஞ்சைகள் உணவில் வளர்ந்து நச்சுப் பொருட்களை உற்பத்தி செய்து, உடல் உபாதைகளை ஏற்படுத்தும். மேலும், சில பேராசைட்டுகள் மாசுபட்ட நீர் அல்லது உணவின் மூலம் உடலுக்குள் நுழைந்து, ஃபுட் பாய்சன் பாதிப்பை தீவிரப்படுத்தும்.
ஃபுட் பாய்சன் ஏற்படாமல் தடுப்பது எப்படி?
உணவை சமைக்கும்போது அதை முழுமையாக சமைப்பதால் அதில் உள்ள பாக்டீரியாக்கள் இறந்து போகும். குறிப்பாக கோழி, மாமிசம், மீன் போன்றவற்றை நன்கு சமைத்து சாப்பிட வேண்டும். உணவை ஃப்ரிட்ஜில் சரியான வெப்பநிலையில் சேமிக்க வேண்டும். அழுகிய உணவுகளை ஒருபோதும் உட்கொள்ளக்கூடாது.
உணவுகளை கையாளும்போது கைகளை நன்கு சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வெவ்வேறு வகையான உணவுகளை ஒன்றாக கலந்து சாப்பிடக்கூடாது.
பச்சை காய்கறிகளை சாப்பிடும் போது நன்கு கழுவி சுத்தம் செய்த பிறகுதான் உட்கொள்ள வேண்டும். முடிந்தவரை மாசுபட்ட நீரை குடிப்பதைத் தவிர்க்கவும். நீங்கள் வெளியே சென்று உணவுகளை வாங்குகிறீர்கள் என்றால், நல்ல தரமான நம்பிக்கை வாய்ந்த கடைகளில் இருந்து வாங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
ஃபுட் பாய்சன் ஏற்பட்டால் என்ன செய்வது?
உணவு விஷம் பாதிப்பால் உடலில் இருந்து நீர்ச்சத்து வெளியேறுவதைத் தடுக்க தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். இந்த சமயத்தில் உங்கள் உடல் நலம் அதிகம் பாதிக்கப்படுவதால் ஓய்வெடுப்பது அவசியம். உணவு விஷம் சார்ந்த பாதிப்பு தீவிரமாக இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். அரசாங்கம் உணவு விஷயத்தை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உணவுப் பொருட்கள் தரக்கட்டுப்பாடு, உணவகங்கள் மற்றும் உணவு தொழிற்சாலைகளை ஆய்வு மேற்கொள்ளுதல் போன்ற பல்வேறு செயல்பாடுகளில் அரசாங்கம் ஈடுபடுகிறது.
நாம் கவனத்துடன் இருந்தால் உணவு விஷ பாதிப்பு தவிர்க்கக்கூடிய ஒரு பிரச்சனைதான். உணவுகளை சரியாக கையால்வதும், சமைப்பதும் உணவு விஷத்தை தடுப்பதற்கான முக்கிய வழிகள். ஒருவேளை உங்களுக்கு ஃபுட் பாய்சன் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லுங்கள். நீங்களாகவே அதை சரி செய்ய முயற்சிக்க வேண்டாம்.