காதுகளை ஆரோக்கியமாக வைத்திருக்க சில டிப்ஸ்! 

Tips to keep your ears healthy!
Tips to keep your ears healthy!
Published on

மனித உடலில் கேட்கும் திறனை வழங்கும் ஒரு அற்புதமான உறுப்பு காது. நம்மைச் சுற்றியுள்ள உலகின் ஒலிகளை உணரவும், ஒலியை புரிந்து கொள்ளவும், இசையை ரசிக்கவும் காதுகள் அவசியம். ஆனால், அன்றாட வாழ்க்கையில் பல காரணங்களால் காதுகள் பாதிக்கப்படலாம். சரியான பராமரிப்பு இல்லாமல் காது கேளாமை, தொற்று நோய்கள் மற்றும் பிற பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. இந்தப் பதிவில் காதுகளை ஆரோக்கியமாக வைத்திருக்க சில வழிமுறைகளை பார்க்கலாம். 

காதுகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும் வழிகள்: 

காதுகளை அவ்வப்போது சுத்தம் செய்வது முக்கியம். அதே நேரம் அதிகமாக சுத்தம் செய்வதைத் தவிர்க்கவும். காது இயற்கையாகவே மெழுகை உற்பத்தி செய்வதால் அதில் தூசி மற்றும் அழுக்குகள் ஒட்டிக்கொள்ளும். எனவே அவ்வப்போது சுத்தம் செய்வதால் காது தொற்றுக்களில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.

நீண்ட நேரம் அதிகப்படியான சத்தத்தை கேட்பது காது கேளாமைக்கு வழிவகுக்கும். எனவே, அதிகப்படியான சத்தங்களில் இருந்து காதுகளை பாதுகாப்பாக வைத்திருப்பது நல்லது. இயந்திரங்கள், அதிக ஒலியில் பாடல்கள் மற்றும் பட்டாசு வெடிக்கும் சத்தம் போன்றவை காதுகளை பாதிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். 

காதுகளுக்குள் குச்சி, சேஃப்டி பின், ஹேர்பின் போன்ற பொருட்களை சொருகுவதைத் தவிர்க்கவும். இது காதுகளுக்கு சேதத்தை ஏற்படுத்தி தொற்றுகளுக்கு வழிவகுக்கும். குளிக்கும்போது காதுகளுக்குள் தண்ணீர் நுழையாமல் பார்த்துக் கொள்ளவும். ஈரமான சூழலில் காதுகளுக்குள் தொற்றுகள் எளிதில் ஏற்பட்டுவிடும். 

காதுகளில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும். நீங்களாகவே எதையும் சரி செய்ய முயற்சிக்க வேண்டாம். குறிப்பாக காது கேளாமை, வலி அல்லது தண்ணீர் வடிதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அதை புறக்கணிக்காதீர்கள். 

காதுகளுக்கு ஆரோக்கியமான உணவுகள்: 

ஆரஞ்சு, கேரட், பச்சைகளை காய்கறிகள் போன்ற வைட்டமின் ஏ சத்து நிறைந்த உணவுகள் காது ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானவை. மேலும், கொய்யா, ஆரஞ்சு, எலுமிச்சை, தக்காளி போன்ற விட்டமின் சி நிறைந்த உணவுகளும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து காது தொற்றுகளை தடுக்க உதவும். 

இதையும் படியுங்கள்:
ஒமேகா 6 கொழுப்பு அமிலம் எந்தெந்த உணவுகளில் உள்ளன தெரியுமா?
Tips to keep your ears healthy!

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிரம்பிய மீன், ஆளி விதைகள் மற்றும் வேர்க்கடலை போன்றவை காது அலர்ஜி மற்றும் பிற தொற்றுக்களை எதிர்த்து போராட உதவும். இத்தகைய உணவுகளை உங்களது உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ளுங்கள். 

காதுகள் நம் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே, அவற்றை ஆரோக்கியமாக வைத்திருப்பதும் மிகவும் முக்கியம். மேற்கூறிய விஷயங்களை முறையாக கடைப்பிடித்து, உங்களது காதுகளை ஆரோக்கியமாக பராமரித்துக் கொள்ளுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com