50 வயதுக்கு மேல் உடல் எடையைக் குறைக்க சில டிப்ஸ்! 

Tips to lose weight over 50!
Tips to lose weight over 50!
Published on

50 வயதை கடந்த பிறகு உடல் நிலையில் சில மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு. இதில் அதிக எடை அதிகரிப்பும் ஒன்று. உடல் எடையைக் குறைப்பதற்கு இளம் வயதில் செய்த உணவுப் பழக்கங்கள் மற்றும் உடற்பயிற்சிகள் 50 வயதில் அதே அளவுக்கு பலன் தராது. இன்னும் சரியான உணவுத் திட்டம் மற்றும் உடற்பயிற்சியின் மூலம் 50 வயதிற்கு மேலும் எடையைக் குறைக்க முடியும். இந்த பதிவில் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் எடையைக் குறைக்க பின்பற்ற வேண்டிய விஷயங்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம். 

வயது அதிகரிக்கும்போது உடலில் உள்ள வளர்ச்சிதை மாற்றம் குறையத் தொடங்கும். இதன் காரணமாக இளம் வயதில் எவ்வளவு உணவு உண்டாலும் எடை அதிகரிக்காமல் இருக்கும். ஆனால் 50 வயதிற்கு மேல் சிறிதளவு உணவை உண்டாலும் எடை அதிகரிக்கத் தொடங்கும். இதற்கு காரணம் வயது அதிகரிக்கும்போது தசை நிறை குறைந்து கொழுப்பு நிறை அதிகரிப்பதே ஆகும். 

50 வயதிற்கு மேல் எடையைக் குறைப்பது மிகவும் முக்கியம். ஏனெனில், அதிக எடை இருப்பது பல நோய்களுக்கு வழிவகுக்கும். இதில் நீரிழிவு நோய், இதய நோய், உயர் ரத்த அழுத்தம், மூட்டு வலி போன்றவை அடங்கும். எடையைக் குறைப்பதன் மூலம் இந்த நோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம். மேலும், எடை குறைப்பு ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு வழிவகுக்கும். 

50 வயதிற்கு மேல் எடையைக் குறைக்க சில டிப்ஸ்: 

உணவுத் திட்டம்: பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள். இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை சீராக வைத்து, நீண்ட நேரம் பசி ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். பழுப்பு அரிசி, ஓட்ஸ் போன்ற தானியங்கள் ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்து உடலுக்குத் தேவையான நீண்ட ஆற்றலைத் தரும். 

பருப்பு வகைகளில் உள்ள புரதச்சத்து தசை வளர்ச்சிக்கு உதவுவதால், புரதச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் ஆரோக்கிய கொழுப்பு நிறைந்த ஆலிவ் எண்ணெய், அவகாடோ போன்ற உணவுகளையும் சேர்த்துக் கொள்வது நல்லது. 

சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்து, தினசரி குறைந்தது 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிப்பது உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி செரிமானத்தை சீராக வைக்கும். 

இதையும் படியுங்கள்:
50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மகிழ்ச்சியாக இருக்க தவிர்க்க வேண்டிய 9 பழக்கங்கள்!
Tips to lose weight over 50!

உடற்பயிற்சி: 50 வயதிற்கு மேல் அதிதிவிர உடற்பயிற்சிகளைக் குறைத்து, நடப்பது, ஓடுவது, நீச்சல் போன்ற ஏரோபிக் பயிற்சிகளை தினமும் செய்யவும். இது இதயத்தை வலுப்படுத்தி கலோரிகளை எரிக்க உதவும். வீட்டிலேயே யோகா செய்வதால் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும். இத்துடன் பிராணாயமும் செய்வது உடலில் ஆக்ஸிஜன் செறிவை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். 

வாழ்க்கை முறை மாற்றங்கள்: தினமும் குறைந்தது 7-8 மணி நேரம் நன்றாக தூங்கவும். போதுமான தூக்கம் இல்லாமல் போனால் உடலில் காட்டிசோல் என்ற ஹார்மோன் அதிகரித்து, எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இத்துடன் மன அழுத்தத்தைக் குறைக்க தியானம் யோகா போன்ற பயிற்சிகளை செய்யவும். எப்போதும் எதையாவது சிந்தித்துக் கொண்டு இருக்காமல் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடவும். இது மன அழுத்தத்தைக் குறைத்து அமைதியான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். 

50 வயதுக்கு மேல் எடையைக் குறைப்பது என்பது சவாலானதுதான் என்றாலும், சரியான உணவுத் திட்டம் உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களின் மூலம் எளிதாக எடையைக் குறைக்க முடியும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com