முகத்தில் வடியும் எண்ணெய் பசை பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெற…

Oily face
எண்ணெய் பசை முகம்https://thebathessence.com
Published on

ண்ணெய் பசை சருமம் என்பது ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானது. முகத்தில் எண்ணெய் பசையையும், அசெளகரியத்தையும் தருவது பெரிய பிரச்னையாக இருக்கும். பிசபிசுப்பான சருமம், சோர்வான தோற்றம், மேக்கப் போட்டால் வழிவது போன்ற பிரச்னைகள் பரு, மங்கு போன்றவற்றை ஏற்படுத்தும்.

முகத்தில் உள்ள சீபம் அதிகமாக சுரப்பதுதான் எண்ணெய் பசை சருமத்திற்குக் காரணம். இதற்கு பாரம்பரியம் உள்ளிட்ட சில முக்கியமான காரணங்கள் இருந்தாலும், சில பழக்கங்களை மாற்றிக்கொள்ள எண்ணெய் பசை சருமத்தை அழகாகப் பராமரிக்கலாம்.

எண்ணெய் பசை உள்ள சருமத்திற்கு முகப்பருவால் பாக்டீரியா உண்டாகும். நம் கைகளால் முகத்தைத் தொடும்போது ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அந்தத் தொற்று பரவிக்கொண்டே இருக்கும். எனவே, முகத்தைத் தொடாமல் இருப்பது நல்லது.

பொதுவாக, எண்ணெய் பசை சருமத்திற்கு முகத்தை அடிக்கடி கழுவச் சொல்வார்கள். இது தவறு. இப்படிச் செய்தால் சரும செல் பாதிக்கப்படும். ஒரு நாளுக்கு இரண்டு முறைக்கு மேல் முகத்தை கழுவாமல் இருப்பதே நல்லது. டிஷ்யூ பேப்பர் அல்லது வெட் டிஷ்யூ கொண்டு முகத்தைத் துடைக்க முகம் சுத்தமாக இருக்கும்.

ஆயில் ஸ்கின் கொண்டவர்கள் மாய்ஸ்சரைசர், கிரீம்களைப் பயன்படுத்த மாட்டார்கள். முகத்தில் வழியும் சீபத்துக்கும் மாய்ஸ்சரைசர் க்ரீமுக்கும் சம்பந்தம் இல்லை. எண்ணைய் பசை சருமத்திற்கான பிரத்யேக மாய்ஸ்சரைசர் கிரீம்களை பயன்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்:
Signs Of True Love: உண்மையான காதலின் 6 அறிகுறிகள்! 
Oily face

சில வகை சோப்புகள் மற்றும் கிளென்சர்கள் காரத்தன்மை அதிகம் உள்ளவைகளாக, கடினமானவையாக இருக்கும். இவற்றைப் பயன்படுத்துவதால் சருமம் மிகவும் உலர்வாகி, மீண்டும் சீபம் அதிகமாக சுரக்கும். எனவே எண்ணெய் பசை சருமத்திற்கு ஏற்ற பிரத்யேக சோப்புகள் மற்றும் கிளென்சர்களை பயன்படுத்தலாம்.

தேன், எலுமிச்சை, ஆலிவ் ஆயில் முட்டையின் வெள்ளைக் கரு, ஆப்பிள் போன்ற இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பேஷியல் மாஸ்க்கை மாதம் இரு முறை பயன்படுத்தலாம். இது சருமத்தில் நுண்ணிய துவாரங்களை சுத்தமாக்கி முகப்பரு ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com