
பயணம் என்பது அனைவருக்கும் பிடித்த ஒரு விஷயமாகும். சிலர் பொழுதுபோக்கிற்காக பயணம் செய்வார்கள். சிலர் மன அமைதிக்காக பயணம் செய்வார்கள். நம் மனதில் அதிகப்படியான கவலை வரும்பொழுது நமக்கு முதலில் உதிக்கும் சிந்தனை பயணம் தான். பொதுவாக பயணத்தை இரு வகைகளாக பிரிக்கலாம்.
குறுகியகால பயணம்
நெடுந்தூர பயணம்
குறுகிய கால பயணம் என்பது நம் கவலைகளை யாரிடமாவது கொட்டி தீர்க்க வேண்டும் என்பதற்காக நம் நன்பர்களையோ, உறவினர்களையோ சந்திப்பதாகும்.
நெடுந்தூர பயணம் என்பது வேறு இடங்கள், மக்கள், கலாச்சாரங்களை பார்த்து ரசித்து தன் கவலைகளை மறப்பது.
பொதுவாக ஓர் புதிய நிலப்பரப்பிற்கு செல்லும் போதும், அங்குள்ள கற்றை சுவாசிக்கும் போதும் அது நமக்கு மிக பெரிய ஆறுதலை அளிக்காமல் நம் ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகளை தருகிறது.
நீங்கள் ஒரு புதிய நகரத்தையோ, இயற்கை சார்ந்த இடத்தையோ அறிய விரும்பும் போது ஒரு நாளைக்கு சுமார் 1000 அடிகளுக்கு மேல் நடக்க கூடும். அவ்வாறு நடப்பது ஒரு நல்ல உடற்பயிற்சியாக மாறுகிறது. அப்படி நடக்கும் போது நீங்கள் இயற்கையை ரசித்து கொண்டே நடப்பதால் இதயத்திற்கு பெரும் நன்மை ஏற்படுகிறது.
அதிக மன அழுத்தம் உள்ளவர்கள் சீக்கிரம் வயதான தோற்றத்தை உடையவர்களாக மாறுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த மன அழுத்தத்தை போக்க இரண்டு, மூன்று நாட்கள் பயணம் மேற்கொள்ளும் போது அது புத்துணர்வு தருவது மட்டுமல்லாமல் வாழ்வில் அவர்களை மிகவும் மகிழ்ச்சியாக இருக்க வைக்கவும் உதவுகிறது.
பயணம் நமது மூளை திறனை துண்டுவதற்கான ஒரு வாய்ப்பாக உள்ளது. ஒரு புதிய இடத்திற்கு செல்லும் பொழுது அங்குள்ள உணவு பழக்கவழக்கம், சிறந்த சூழல் மற்றும் பலவிதமான மொழிகள் அனைத்தும் நமது முளையே சிறப்பாக செயல் பட தூண்டுகிறது. புதிய இடங்கள் மற்றும் மொழிகள் பற்றி அறிந்து கொள்வது நமது புத்தியை கூர்மைப்படுத்துவது மட்டுமல்லாமல் மன அழுத்தத்தையும் குறைக்கிறது.
மன அழுத்தம் என்பது தொற்று நோய் போன்றது. இதனால் மூளை நரம்புகள் பாதிப்பு, விபத்து நேர்வது போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படலாம். மூளைக்கு சரியான ஓய்வு கொடுப்பதன் மூலம் இதுமாதிரியான அசம்பாவிதங்களை தடுப்பது மட்டுமல்லாமல் உற்பத்தி திறனையும் அதிகரிக்கலாம். இதற்கு பயணம் ஒரு சிறந்த வழி வகையை ஏற்படுத்தி தருகிறது. அதனால் வீடு விட்டால் அலுவலகம், அலுவலகம் விட்டால் வீடு என்று இல்லாமல் வருடத்தில் இரண்டு முறையாவது பயணம் மேற்கொள்வது நமக்கும் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் நன்மையை ஏற்படுத்தும்.