10 நிமிடத்தில் உங்கள் உடலை Detox செய்யும் தந்திரங்கள்! 

Detox Your Body
Tricks to Detox Your Body in 10 Minutes!

நவீன வாழ்க்கை முறையில் நம் உடல் பல்வேறு நச்சுக்களுக்கு ஆளாகிறது. மாசுபட்ட காற்று, தவறான உணவுப் பழக்க வழக்கங்கள், மன அழுத்தம் போன்றவை நம் உடலில் நச்சுக்களை சேர்க்க காரணமாகின்றன. நச்சுக்கள் நம் உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். சோர்வு, மலச்சிக்கல், தோல் பிரச்சினைகள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற பல பாதிப்புகளை அவை ஏற்படுத்தும் என்பதால் அவற்றை உடலில் இருந்து நீக்குவது அவசியம். இந்தப் பதிவில் 10 நிமிடத்தில் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் வழிமுறைகள் பற்றி பார்க்கலாம். 

10 நிமிட Detox முறைகள்: 

நீர் அருந்துதல்: போதிய அளவு தண்ணீர் குடிப்பது உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவதற்கான எளிய வழியாகும். எனவே ஒவ்வொரு நாளும் குறைந்தது 8 டம்ளர் தண்ணீர் குடித்தாலே உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கிவிடும். 

எலுமிச்சை நீர்: எலுமிச்சை சாறு குடிப்பதால் உடலில் உள்ள நச்சுக்கள் நீங்குவதாக சொல்லப்படுகிறது. தினசரி காலையில் ஒரு டம்ளரில் அரை எலுமிச்சம் பழத்தை பிழிந்து வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது. 

ஆப்பிள் சைடர் வினிகர்: ஆப்பிள் சைடர் வினிகர், ரத்தத்தின் pH அளவை சமநிலைப்படுத்தவும் மலச்சிக்கலை போக்கவும் உதவும். தினசரி காலையில் ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகர் கலந்து குடிப்பது உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவும். 

பச்சை காய்கறிகள் மற்றும் பழங்கள்: பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இவை உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்க உதவும். 

யோகா மற்றும் தியானம்: யோகா, தியான போன்ற பயிற்சிகள் மன அழுத்தத்தைக் குறைக்கவும், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. எனவே தினசரி 10 நிமிடங்கள் யோகா அல்லது தியானம் செய்வது உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவதாக சொல்லப்படுகிறது. 

இதையும் படியுங்கள்:
உடலில் அதிக ஈஸ்ட்ரோஜன் உள்ளது என்பதற்கான அறிகுறிகள்… பெண்கள் ஜாக்கிரதை! 
Detox Your Body

மேலே குறிப்பிட்ட விஷயங்களை செய்வதற்கு பத்து நிமிடத்திற்கும் குறைவாகவே நேரம் தேவைப்படும். இதன் மூலமாக உடலில் உள்ள தேவையில்லாத நச்சுக்களை நீக்கி என்றும் ஆரோக்கியத்துடன் நீங்கள் இருக்க முடியும். இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவதற்கு முன், உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் தகுந்த மருத்துவரை அணுகி ஆலோசித்த பிறகு முயற்சிப்பது நல்லது. ஏற்கனவே உடலில் சில மருத்துவ நிலைமைகள் இருப்பவர்கள், எந்த புதிய பழக்கத்தை முயற்சி செய்வதற்கு முன்பும், மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com