யூரிக் அமில அளவைக் குறைக்கும் ஜூஸ் வகைகள்! 

Uric Acid Issues
Uric Acid.
Published on

யூரிக் அமில பாதிப்பு என்றால் என்ன தெரியுமா? அதாவது உடலில் உற்பத்தியாகும் அதிகப்படியான யூரிக் அமிலம், கைகள், கால்கள், விரல்களின் மூட்டுப் பகுதியில் அப்படியே தேங்கிவிடுவதாகும். இதனால் கடுமையான வலி உண்டாகும். இன்றைய காலத்தில் மோசமான உணவுமுறைப் பழக்கங்களால் யூரிக் அமில பாதிப்பு பெரும் பிரச்சனையாக மாறி வருகிறது. இளையவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே இதனால் பாதிக்கப்படுகின்றனர். 

யூரிக் அமில பாதிப்பு தீவிரமாக இருக்கும்போது நடப்பது, உட்காருவது போன்ற செயல்பாடுகள் கடினமாகிறது. உடற்பயிற்சியின்மை, மோசமான உணவுப் பழக்கங்கள் காரணமாக உடலில் பியூரின் என்ற தனிமம் அதிகரித்து, யூரிக் அமிலத்தை உருவாக்குகிறது. இந்த யூரிக் அமிலமானது மூட்டுப் பகுதிகளில் படிந்து இடைவெளிகளை உருவாக்குவதால், வலி, வீக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். 

யூரிக் அமில பாதிப்பை முறையான உணவு உட்கொள்ளல் மூலமாகவே கட்டுப்படுத்த முடியும். குறிப்பாக இந்த பதிவில் நான் சொல்லப்போகும் ஜூஸ் வகைகளைப் பருகினால் யூரிக் அமில பாதிப்பிலிருந்து விடுபடலாம். 

  1. இஞ்சி ஜூஸ்: இஞ்சி அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு மிகவும் பிரபலமாகும். இது யூரிக் அமிலத்தை குறைத்து வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. எனவே யூரிக் அமில பாதிப்பு இருப்பவர்கள் தினசரி இஞ்சியை வெந்நீரில் காய்ச்சி குடிப்பது நல்லது. 

  2. ஆப்பிள் சைடர் வினிகர் ஜூஸ்: பொதுவாகவே ஆப்பிள் சைடர் வினிகர் உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக செரிமானத்திற்கு உதவி வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இதில் இருக்கும் விட்டமின் சி, யூரிக் அமிலத்தை உடலில் இருந்து வெளியேற்றுகிறது. இதனால் எலும்புகள் ஆரோக்கியமாகவும் உறுதியுடனும் இருக்கும். தினசரி ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை தண்ணீரில் சேர்த்து குடித்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும். நீங்கள் விருப்பப்பட்டால் தேனையும் இதில் கலந்து கொள்ளலாம். 

  3. எலுமிச்சை ஜூஸ்: எலுமிச்சை ஜூஸில் உள்ள சிட்ரிக் அமிலம் நமது உடலின் pH அளவை சமன் செய்ய உதவுகிறது. மேலும், இது உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருவது மட்டுமின்றி, யூரிக் அமிலத்தால் ஏற்பட்டுள்ள படிகங்களைக் கரைத்து நீக்குகிறது. எனவே தினசரி காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை ஜூஸ் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். 

  4. வெள்ளரி ஜூஸ்: வெள்ளரிக்காய் பொதுவாகவே அதிக நீர்ச்சத்து கொண்ட காயாகும். இதை ஜூஸ் வடிவில் பருகுவது மூலமாக, உடலில் உள்ள யூரிக் அமிலம் உள்ளிட்ட பல்வேறு நச்சுக்களும் வெளியேறுகிறது. எனவே நீங்கள் யூரிக் அமில பாதிப்பை எதிர்கொண்டு வந்தால், வெள்ளரி ஜூஸ் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். குறிப்பாக இந்த கோடைகாலத்தில் நீர்ச்சத்து பானமான இந்த ஜூஸ் உங்களுக்கு பெரிதளவில் உதவும். 

இதையும் படியுங்கள்:
AC வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்!
Uric Acid Issues

மேலே குறிப்பிட்டுள்ள எல்லா ஜூஸ் வகைகளும், உடலுக்கு ஆரோக்கியம் தருவது மட்டுமின்றி, யூரிக் அமில பாதிப்பிலிருந்து நீங்கள் விரைவில் விடுபட உதவும். எனவே தகுந்த மருத்துவரின் ஆலோசனை பேரில், இவற்றை நீங்கள் முயற்சித்துப் பாருங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com