இரும்புச்சத்து குறைபாடு இருப்பதற்கான அறிகுறிகள்... ஜாக்கிரதை! 

Sad Girl
Understanding Iron Deficiency

இரும்புச்சத்து குறைபாடு என்பது உங்கள் உடல் போதுமான அளவு ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய தேவையான இரும்புச்சத்து இல்லாதபோது ஏற்படும் ஒரு பொதுவான நிலை. நமது உடலுக்கு இரும்பு என்பது ஒரு அத்தியாவசிய கனிமமாகும் இது உடல் முழுவதும் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்வதிலும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பதிவில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள் பற்றி முழுமையாகப் பார்க்கலாம். 

இரும்புச்சத்து குறைபாட்டிற்கான காரணங்கள்: 

இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. இதில் மிகவும் பொதுவானது இரும்பு சத்து நிறைந்த உணவுகளை நம் சாப்பிடாமல் போவதுதான். மேலும் மாதவிடாய், அதிக ரத்தப்போக்கு, இரைப்பை குடல் பிரச்சனை மற்றும் கர்ப்ப காலம் போன்ற தருணங்களில் அதிக இரும்புச்சத்து தேவைப்படுவதால் இந்த குறைபாடு ஏற்படலாம். 

இரும்புச்சத்து குறைபாட்டின் அறிகுறிகள்:  

ஒருவருக்கு இரும்புச்சத்து குறைபாடு இருக்கிறது என்பதை பல வழிகளில் தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொருவருக்கும் அதன் அறிகுறிகள் லேசானது முதல் கடுமையானது வரை மாறுபடும். இரும்புச்சத்து குறைபாட்டின் சில பொதுவான அறிகுறிகள் சோர்வு, பலவீனம், வெளிர் சருமம், மூச்சுத் திணறல், தலைச்சுற்றல், தலைவலி, குளிர் ஆகியவை ஏற்படலாம். இது சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் ரத்த சோகைக்கு வழிவகுத்து உங்கள் உடலில் உள்ள ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையைக் குறைத்து, உடல் நிலையை மோசமாக்கும். 

உங்களுக்கு இரும்புச் சத்து குறைபாடு இருப்பதாக நீங்கள் சந்தேகித்தால், உடனடியாக ஒரு சுகாதார நிபுணருடன் கலந்தாலோசிப்பது முக்கியம். ரத்த பரிசோதனை செய்து உங்கள் உடலில் உள்ள இரும்பின் அளவை தெரிந்து கொள்ளலாம். உங்களுக்கு இரும்புச் சத்து குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டால் அதை நிர்வகிக்க சில நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டி இருக்கும். 

  • முதலில் உங்களது உணவில் மாற்றங்களைக் கொண்டு வாருங்கள். இரும்புச்சத்து அதிகம் நிறைந்த கீரைகள், பீன்ஸ் கடல் உணவுகள் காய்கறிகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். மேலும் விட்டமின் சி நிறைந்த உணவுகளையும் எடுத்துக் கொள்வது, இரும்புச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்தும். 

  • இரும்புச்சத்து குறைபாட்டை சரி செய்ய மருத்துவர் இரும்புச்சத்து மாத்திரைகளை பரிந்துரைக்கலாம். அவற்றை முறையாகப் பின்பற்றி, தொடர்ச்சியாக மாத்திரைகளை எடுத்து வாருங்கள். இரும்பு பாத்திரங்களில் சமையல் செய்வது உங்களது உணவில் இரும்புச் சத்தின் அளவை அதிகரிக்கும். 

  • இரும்புச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளும்போது கால்சியம் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் ஏனெனில் கால்சியம் இரும்பு உறிஞ்சுதலைத் தடுக்கலாம். 

இதையும் படியுங்கள்:
புடவை கட்டினால் ஒல்லியாகத் தெரிவதற்கு சில டிப்ஸ்! 
Sad Girl

இரும்பு சத்து குறைபாட்டை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனடியாக அதை சரி செய்வதற்கு ஏதுவான விஷயங்கள் அனைத்தையும் கடைபிடித்து, ஆரோக்கியமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com