சூரியகாந்தி விதைகள் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? 

Sunflower Seeds
Health Benefits of Sunflower Seeds
Published on

சூரியகாந்தி விதைகள் உண்மையிலேயே உண்பதற்கு மிகவும் ஆரோக்கியமானவை. ஆனால் நாம் பெரும்பாலும் இவற்றை உணவாக உட்கொள்வதில்லை.  சூரியகாந்தி விதைகளில் தயாரிக்கப்படும் எண்ணெய்களை மட்டுமே பயன்படுத்துகிறோம். ஆனால் அது அந்த அளவுக்கு ஆரோக்கியமானது அல்ல. சூரியகாந்தி விதைகளை நேரடியாக சாப்பிடும்போது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்துமே கிடைக்கின்றன. இந்தப் பதிவில் சூரியகாந்தி விதைகளின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்க்கலாம். 

ஊட்டச்சத்துக்கள்: சூரியகாந்தி விதைகளில் விட்டமின் ஈ, மெக்னீசியம், செல்லினியம், தாமிரம் மற்றும் பல்வேறு பி வைட்டமின்கள் உள்ளிட்ட முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதிலும், செல்களின் செயல்பாட்டை ஊக்குவிப்பதிலும் முக்கிய பங்காற்றுகின்றன. 

இதய ஆரோக்கியம்: சூரியகாந்தி விதைகளில் இதயத்திற்கு ஆரோக்கியத்தைத் தரும் கொழுப்புகள் உள்ளன. இதில் மோனோ சாச்சுரேட்டட் மற்றும் பாலி அன்சாசுரேட்டட் கொழுப்புகள் இருப்பதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளின் அளவைக் குறைத்து இதய நோய் அபாயத்தை தடுக்கிறது. 

மூளை ஆரோக்கியம்: சூரியகாந்தி விதைகளில் உள்ள விட்டமின் இ, ஆக்சிஜனேற்ற அழுத்தத்திலிருந்து செல்களை பாதுகாப்பதால் மூளையின் ஆரோக்கியம் மேம்படுகிறது. மேலும் சூரியகாந்தி விதைகளில் உள்ள பிளாவனாய்டுகள் மற்றும் பினாலிக் அமிலம் போன்ற கலவைகள் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்த உதவும். 

எலும்பு ஆரோக்கியம்: சூரியகாந்தி விதைகள் மெக்னீசியத்தின் சிறந்த மூலமாகும். இது வலுவான எலும்புகளைப் பராமரிக்க தேவையான கனிமம். மெக்னீசியம் எலும்பின் ஆரோக்கியத்திற்கு உதவி எலும்பு அடர்த்திக்கு பங்களிக்கிறது. இதனால் ஆஸ்டியோபோரோசிஸ் என்ற எலும்பு வலுவிழக்கும் நோய் தடுக்கப்படுகிறது. 

செரிமான ஆரோக்கியம்: சூரியகாந்தி விதைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவித்து மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது. சூரியகாந்தி விதைகள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதால் ஆரோக்கியமான செரிமான அமைப்பை பராமரிக்கலாம். 

சரும ஆரோக்கியம்: சூரியகாந்தி விதைகளில் காணப்படும் ஆக்சிஜனேற்றிகள், விட்டமின் இ போன்றவை சுற்றுச்சூழல் காரணிகளால் ஏற்படும் சேலத்திலிருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்க உதவும். உங்களது உணவில் சூரியகாந்தி விதைகளை சேர்த்துக் கொள்வதால் சருமம் பொலிவுற்று எப்போதும் இளமையாக தோற்றமளிக்கும். 

இதையும் படியுங்கள்:
ஒருவேளை பூமி தட்டையாக இருந்தால் என்ன ஆகும்? 
Sunflower Seeds

எடை மேலாண்மை: பார்ப்பதற்கு சூரியகாந்தி விதைகள் சிறியதாக இருந்தாலும் அவற்றில் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனால் உங்களுக்கு நீண்ட நேரத்திற்கு வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுக்கும். மேலும் இதில் ஆரோக்கிய கொழுப்புகள் புரதம் மற்றும் நார்ச்சத்து ஆகியவை இருப்பதால், உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் தாராளமாக சூரியகாந்தி விதைகளைச் சாப்பிடலாம். 

சூரியகாந்தி விதைகளை நேரடியாக அப்படியே சாப்பிடாமல், நீங்கள் சாப்பிடும் உணவில் சேர்த்து கொஞ்சமாக சாப்பிடுங்கள். அதிகமாக சாப்பிடுவது உங்களுக்கு சில பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இதில் அதிக கலோரி இருப்பதால் மிதமாகவே உட்கொள்ளுங்கள். இதன் மூலமாக அதன் ஆரோக்கிய நன்மைகளை முழுமையாகப் பெற்று வளமுடன் வாழ முடியும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com