Jackfruit Seeds: பலாக் கொட்டையின் பற்பல நன்மைகள்!

Benefits of Jackfruit Seeds
Benefits of Jackfruit Seeds

பலாப்பழம் அதன் சூப்பரான சுவைக்கு பலரால் விரும்பி உண்ணப்படும் பழமாகும். இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருந்தாலும், பெரும்பாலானவர்கள் பலாப்பழத்தை சாப்பிட்டு விட்டு அதன் கொட்டைகளை அப்படியே விட்டு விடுகின்றனர். ஆனால் பலாக்கொட்டைகளிலும் ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. இந்தப் பதிவில் பலாக்கொட்டைகள் வழங்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

பலாக் கொட்டையில் கார்போஹைட்ரேட்டுகள், புரதம், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் ரிபோஃப்ளேவின், தயமின், இரும்பு, மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சில முக்கிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.

பலாக் கொட்டையில் நார்சத்து அதிகம் இருப்பதால் செரிமான பிரச்சனை ஏற்படாமல் பாதுகாத்து கொள்கிறது. மேலும் மலச் சிக்கல் பிரச்சனை வராமலும் தடுக்கிறது.  

பலாக் கொட்டைகளில் நிறைந்துள்ள இரும்புச்சத்து ஹீமோகுளோபின் ஆரோக்கித்திற்கு இன்றியமையாததாகும்.

பலாப்பழ கொட்டைகளை குளிர்ந்த பாலுடன் அரைத்து உங்கள் சருமத்தில் தொடர்ந்து அப்ளை செய்து வந்தால், தோல் சுருக்கங்கள் நீங்கி, இளமையான தோற்றம் கிடைக்கும்.

பலாக் கொட்டையில் வைட்டமின் ஏ நிறைந்துருப்பதால் பார்வை திறனை மேம்படுத்த உதவுகிறது. மேலும் மாலைக்கண், கண்புரை, மாகுலர் போன்ற பிரச்சனை வராமல் தடுக்கிறது.

வயிற்றுப் பொருமலால் அவதிப்படுவர். அதற்கு ஒரு பலாக் கொட்டையை மென்று சாறை மட்டும் விழுங்கினால் உடனே வயிற்றுப் பொருமல் நீங்கும்.

பலா விதையில் உள்ள புரத சத்து, தசைகளை வலிமையாக வைத்து கொள்ள உதவுகிறது.

குழந்தை பெற்றவர்கள் பலாக்கொட்டை சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

பலாக் கொட்டையில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள் முதுமை ஏற்படாமல் தடுக்கிறது. முகத்தில் ஏற்படும் பிரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடி முகத்தில் சுருக்கங்கள் வராமல் பாதுகாக்கிறது.

பலா கொட்டையில் உள்ள வைட்டமின் ஏ முடி உதிர்வதை தடுக்கிறது.

இதையும் படியுங்கள்:
நரை முடி ஏற்படுவதைத் தள்ளிப்போட உதவும் 7 வழிகள்!
Benefits of Jackfruit Seeds

இதில் உள்ள  புரதச்சத்து முடி ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. இரும்பு சத்து உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி ஆரோக்கியமான கூந்தலுக்கு வழி வகுக்கிறது.

மேலும் இந்த விதைகளில் புரதங்கள் மற்றும் பிற நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் மன அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது. மன அழுத்தம் முடி உதிர்வுக்கு மற்றொரு காரணம் ஆகும்.

பலாக் கொட்டையில் நார்ச் சத்து, கரோட்டினாய்டுகள், பீனாலிக் அமிலம் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்திருப்பதால் கொலட்ஸ்ரால் அளவை குறைக்கிறது. மேலும் இதய பிரச்சனைகள் வராமலும் பாதுகாக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com