வெல்லத்திலிருக்கும் வித விதமான நன்மைகள்!

Various benefits of jaggery
Various benefits of jaggery

வெல்லம் என்பது கலப்படமில்லாத, உடலுக்கு நன்மை செய்யும் ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய ஒரு இனிப்புப் உணவுப் பொருள். இதில் அடங்கியிருக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

வெல்லத்தில் இரும்புச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம், B காம்ப்ளெக்ஸ் உள்ளிட்ட பல்வேறு வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இதிலுள்ள வைட்டமின்கள், மினரல்கள், ஆன்டி ஆக்சிடன்ட்கள் போன்ற ஊட்டச் சத்துக்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து, சளி, ஃபுளு ஜுரம், வயிற்று வலி, இருமல், மூச்சுக் குழாய் பிரச்னை போன்றவற்றை குணப்படுத்துவதோடு, பல்வேறு தொற்று நோய்களிலிருந்தும் நமது உடலைப் பாதுகாக்கிறது.

இதிலுள்ள பொட்டாசியம் சத்து இரத்தத்திலுள்ள எலக்ட்ரோலைட்களை சமப்படுத்தி உயர் இரத்த அழுத்தம் வராமல் பாதுகாக்கிறது. சிறந்த முறையில் ஜீரணம் நடைபெற உதவும் என்சைம்களைப் பெருக்க உதவி புரிகிறது. சிறந்த மலமிளக்கியாகவும் வெல்லம் செயல்படுகிறது.

இதையும் படியுங்கள்:
இரத்த சர்க்கரையை குறைக்க உதவும் இயற்கை உணவுகள்!
Various benefits of jaggery

வெல்லத்தில் உள்ள இயற்கையான இனிப்பு சுவையானது உடலுக்கு துரிதமாக சக்தியை வழங்கக்கூடியது. அயன், ஃபோலேட் போன்ற சத்துக்கள் இரத்தத்தை சுத்திகரிக்கும். அனீமியா நோயை தடுக்கும். பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் உடல் நலக் குறைபாடுகளை நீக்குவதில் வெல்லம் பெரும் பங்கு வகிக்கிறது.

இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மெட்டபாலிசம் சிறப்பாக நடைபெற உதவுகின்றன. உடம்பில் இருக்க வேண்டிய ஹெவிமெட்டல் அளவை சமப்படுத்தி, தேவையற்ற கூட்டுப் பொருட்களை வெளியேற்றக்கூடியது வெல்லம். இதிலிருக்கும் வீக்கத்தைக் குறைக்கும் குணமானது, உடல் வலிகளையும் போக்கும். வெல்லத்தில்  சிறிது நெய், இஞ்சி சாறு சேர்த்து அடிக்கடி சாப்பிட, மூட்டு வலி நீங்கி, எலும்புகள் ஆரோக்கியம் பெறும்.

இத்தனை நற்பயன்கள் உள்ள வெல்லத்தை நாமும் தினசரி உணவில் பயன்படுத்தி உடல் நலம் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com