இரத்த சர்க்கரையை குறைக்க உதவும் இயற்கை உணவுகள்!

Natural foods that help lower blood sugar
Natural foods that help lower blood sugar

ர்க்கரை நோயை கட்டுப்படுத்த மருந்து, மாத்திரைகளுக்கு அடுத்து, முக்கியமான பங்கு உணவிற்கு உண்டு. நாம் உண்ணும் அனைத்து உணவுகளுமே குளுக்கோஸாக மாற்றப்பட்டு பல வேலைகளை செய்ய உதவுகிறது. அப்படிப்பட்ட குளுக்கோஸை செல்களுக்குள் அனுமதிக்கும் பங்கு இன்சுலின் என்ற ஹார்மோனால் செய்யப்படுகிறது. நம்மிடம் போதுமான அளவு இன்சுலின் இல்லை என்றால் உடலில் சேர்ந்த அதிக குளுக்கோஸ் காலப்போக்கில் உயர்ந்து இரத்த சர்க்கரை அதிகரிப்பு ஏற்படுகிறது. இரத்த சர்க்கரையை அதிகரிக்கச் செய்யாத சில பொருட்கள் உள்ளன. அவற்றை நாம் எடுத்துக்கொள்ள இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும். சிட்ரஸ் பழங்கள், பச்சை இலை காய்கறிகள், கீரைகள், மூலிகை இலைகள் போன்றவை இரத்த சர்க்கரையின் அளவை குறைக்கவல்லவை.

வெண்டைக்காய்: இரண்டு வெண்டைக்காய்களை கீரி ஒரு கப் நீரில் போட்டு இரவே வைத்துவிட்டு காலையில் வெறும் வயிற்றில் அந்த நீருடன் வெண்டைக்காயையும் சாப்பிட இன்சுலின் அளவு அதிகரிக்கும்.

சுரைக்காய், பூசணிக்காய், அருகம்புல் சாறுகள் : இவற்றின் சாறை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க நல்ல பலன் கிடைக்கும்.

பாகற்காய்: நீண்ட பாகற்காய் விட, ‘மிதி பாகல்’ எனப்படும் சின்ன பாகற்காய்களை அரைத்து சாறு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். அதேபோல் பாகற்காய் இலைகள் ஒரு கைப்பிடி அளவு எடுத்து அரைத்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் கால் கப் அளவிற்கு குடிக்க நல்ல பலன் கிடைக்கும்.

வெந்தயக் கீரை:  நார்ச்சத்து மிக்க இந்தக் கீரையை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள, இன்சுலின் திறனை மேம்படுத்தும் சக்தி கொண்டது.

வேப்ப இலைகள்:  இவற்றை சிறிதளவு எடுத்து அரைத்து சாறெடுத்து பருக வயிற்றில் உள்ள புழுக்களை அகற்றுவதுடன் இரத்தத்தில் சர்க்கரையின் அளவையும் குறைக்கும்.

இதையும் படியுங்கள்:
மூங்கில் குருத்தில் இருக்கும் முத்தான நன்மைகள்!
Natural foods that help lower blood sugar

கறிவேப்பிலை, கற்பூரவள்ளி இலைகள்: கறிவேப்பிலை கணையத்தில் இன்சுலின் சுரப்பை தூண்டக் கூடியது. நார்ச்சத்துள்ள இதனை உணவில் துவையல், கறிவேப்பிலை பொடி, கருவேப்பிலை குழம்பு என அடிக்கடி செய்து சாப்பிடலாம். அதேபோல் நிறைய மருத்துவ குணம் நிறைந்த கற்பூரவல்லி இலைகளை அப்படியே கூட சாப்பிடலாம். நிறைய ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் இதில் உள்ளது. இதுவும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

துளசி இலைகள்: ஒரு கப் நீரில் பத்து துளசி இலைகளைப் போட்டு இரவே வைத்துவிட்டு காலையில் அந்த நீருடன் சேர்த்து இலைகளையும் மென்று விழுங்க இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதுடன், நம்மைப் புத்துணர்ச்சியுடன் வைக்கவும் உதவும்.

கொத்தமல்லி தழைகள்: இதனை சாலட்களிலும், சாறாகவும், உணவுகளில் நிறைய சேர்த்து வர, இரத்தத்திலுள்ள இன்சுலின் அளவை கட்டுப்படுத்தப்படும்.

பருப்பு வகைகள்: பீன்ஸ், சியா விதைகள், முழு தானியங்கள், கோதுமை, கொண்டைக்கடலை போன்ற பயறு வகைகள் சாப்பிடுவதும் இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com