கொசுக்களால் உண்டாகும் பல்வேறு நோய்களும் தடுப்பு முறைகளும்!

கொசு கடியால் உண்டாகும் டெங்கு காய்ச்சல்
கொசு கடியால் உண்டாகும் டெங்கு காய்ச்சல்https://tamil.boldsky.com
Published on

லகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்கள் கொசுக்களால் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். கொசுக்களால் பரவும் நோய்களின் அறிகுறிகள், பரவும் முறைகள் மற்றும் தடுப்பு முறைகள் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. மலேரியா: கொசுக்கள் உண்டாக்கும் நோய்களில் முதன்மையானது மலேரியா. இது பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணிகளால் ஏற்படுகிறது. இவை இரத்த ஓட்டத்தில் கலந்து கல்லீரலுக்குச் சென்று பின்னர் இரத்த சிவப்பணுக்களை பாதிக்கின்றன. காய்ச்சல், கடும் குளிர், தலைவலி, குமட்டல், வாந்தி உடல் வலி போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும். இந்த நோய் தீவிரமாகும்போது இரத்தசோகை, சுவாசக் கோளாறு, உறுப்பு செயலிழப்பு, சமயத்தில் மரணத்தை கூட ஏற்படுத்தும்.

2. டெங்கு காய்ச்சல்: டெங்கு வைரஸால் இந்த காய்ச்சல் ஏற்படுகிறது. அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, கண்களின் மேல் மற்றும் பின்னால் வலி, மூட்டு மற்றும் தசைவலி, மூக்கு அல்லது ஈறுகளில் இரத்தப்போக்கு போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும்.

3. ஜிகா வைரஸ்: இது ஏடிஸ் கொசுக்களால் பரவுகிறது. ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்ட பலரும் காய்ச்சல், மூட்டு வலி, வெண் படல அழற்சி, தசைவலி, உடல் சொறி போன்ற நோய் அறிகுறிகளை அனுபவிக்கின்றனர். கர்ப்பிணி பெண்களுக்கு ஜிகா வைரஸ் மிகவும் ஆபத்தை உண்டாக்கும். கருவிலிருக்கும் குழந்தைக்கும் இது பரவுகிறது. புதிதாகப் பிறந்த குழந்தைகளில் கடுமையான பிறப்பு குறைபாடுகளை ஏற்படுத்துகிறது. பாலியல் தொடர்பு, இரத்த தானம் செய்யும்போதும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின்போதும் இது பரவும்.

4. சிக்குன்குனியா: இது சிக்குன்குனியா வைரசால் ஏற்படுகிறது. அதிகக் காய்ச்சல், கடுமையான மூட்டுவலி, தசைவலி, தலைவலி, குமட்டல், சோர்வு மற்றும் சொறி போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும். மூட்டுவலி மாதங்கள் அல்லது வருடங்கள் வரை கூட நீடிக்கும். நோய் தொற்று உடைய கொசுக்கள் கடிப்பதன் மூலம் இந்த வைரஸ் மனிதர்களுக்குப் பரவுகிறது.

5. எல்லோ ஃபீவர்: கொசுக்களால் பரவும் மற்றொரு நோய் மஞ்சள் காய்ச்சல். காய்ச்சல், குளிர், தலைவலி, முதுகுவலி, தசைவலி, பசியின்மை, குமட்டல் மற்றும் வாந்தியை ஏற்படுத்தும். நோய் தீவிரமாகும்போது மஞ்சள் காமாலை ஏற்படும். இரத்தப்போக்கு, உறுப்பு செயலிழப்பு போன்றவை ஏற்பட்டு இறுதியில் மரணத்தை தரும். ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவின் வெப்ப மண்டல பகுதிகளில் முதன் முதலாக இந்நோய் பரவியது. இதற்கு தடுப்பூசி மிகவும் பயனுள்ள தடுப்பு முறையாகும். இந்தத் தடுப்பூசி பெரும்பாலான மக்களுக்கு வாழ்நாள் முழுவதும் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. அதேசமயம் கொசுக்கடியை தவிர்ப்பது முக்கியம்.

6. ஃபைலேரியாசிஸ்: ஃபைலேரியாசிஸ் என்பது ஒட்டுண்ணி புழுக்களால் ஏற்படுகிறது. நாள்பட்ட நோய்த்தொற்றின் அறிகுறிகளாக கை, கால் வீக்கம், யானைக்கால் நோய், சருமத்தில் கடுமையான வீக்கம் மற்றும் தடிப்பு ஏற்படும். ஒட்டுண்ணிகள் பாதிக்கப்பட்ட கொசு மனிதர்களை கடிப்பதன் மூலம் இது பரவுகின்றன. மனித உடலுக்குள் அவை நிணநீர் மண்டலத்தில் குடியேறி அடைப்பு மற்றும் வீக்கத்தை ஏற்படுத்துகின்றன.

இதையும் படியுங்கள்:
‘சுற்றுச்சூழலின் நண்பன்; மனிதர்களின் எதிரி’ எந்த உயிரினம் தெரியுமா?
கொசு கடியால் உண்டாகும் டெங்கு காய்ச்சல்

பொதுவான தடுப்பு முறைகள்:

1. கொசு விரட்டிகளை பயன்படுத்தலாம். சருமத்தின் மீது கொசு விரட்டி கிரீம்களை தடவிக் கொள்ளலாம். எலுமிச்சை அல்லது யூகலிப்டஸ் எண்ணெயை தடவிக் கொண்டால் அந்த வாசனைக்கு கொசுக்கள் அருகில் வராது.

2. கை. கால்களை மறைக்கும் வண்ணம் நீண்ட சட்டை பேண்ட் அணிந்து கொள்ளலாம்.

3. பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்ட கொசுவலைகளை பயன்படுத்தலாம். ஜன்னலுக்கு கொசுவலை அமைக்கலாம்.

4. கொசுக்கள் பெருகுவதை தடுக்க வீடுகளைச் சுற்றி தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்ற வேண்டும். சாக்கடைகளை சுத்தம் செய்ய வேண்டும். தண்ணீர் சேமிப்பு தொட்டிகளை மூட வேண்டும். தடுப்பூசிகளை முறையாக போட்டுக்கொள்ள வேண்டும். நோயின் ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுக்கவேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com