காய்கறிகளில் ஒளிந்திருக்கும் ஆரோக்கிய ரகசியங்கள்! அறிந்து அருந்துங்கள் மக்களே!

Vegetables
Vegetables
Published on

கிழங்கு, இலைகள், கொழம்புக் காய் வகைகளை பிரித்து, அவற்றின் சத்துக்கள் மற்றும் உடல்நல நன்மைகளை அறிவோம்.

1.கிழங்கு வகைகள் (Root Vegetables)

உருளைக்கிழங்கு (Potato) சத்துக்கள்: கார்போஹைட்ரேட், விட்டமின் B6, பொட்டாசியம்.

பலன்கள்: உடலுக்கு உடனடி சக்தி தரும் எடை அதிகரிக்க விரும்புபவர்களுக்கு உகந்தது. செரிமானத்திற்கு நல்லது.

சேனைக்கிழங்கு (Elephant Foot Yam) சத்துக்கள்: நார்ச்சத்து, விட்டமின் B6, கால்சியம்.

பலன்கள்: மலச்சிக்கலை சரி செய்கிறது. ஹெமொராய்டு (மூல நோய்) இருந்தால் நிவாரணம் தரும். உடல் வெப்பத்தை சமநிலைப்படுத்தும்.

வள்ளிக்கிழங்கு (Sweet Potato): சத்துக்கள்: பீட்டா-கரோட்டீன், விட்டமின் A, சத்தான கார்போஹைட்ரேட்.

பலன்கள்: கண் பார்வை மேம்பட உதவும் சர்க்கரை நோயாளிகளுக்கு மெதுவாக அசிமிலேட் (“உணவிலுள்ள சத்துக்கள் உடலால் மெதுவாக படிப்படியாக உறிஞ்சப்பட்டு, ரத்தம் மற்றும் உடல் உறுப்புகளுக்குப் பயனுள்ள சத்துகளாக மாறும்”) ஆகும் உணவு. குடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

மரவள்ளிக்கிழங்கு (Cassava/Tapioca) சத்துக்கள்: உயர் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து.

பலன்கள்: வேலை செய்யும் உழைப்பாளிகளுக்கு சக்தி தரும். செரிமானத்திற்கு உதவும். சிறுநீரை சுத்தம் செய்யும்.

2.இலைகள் (Leafy Vegetables)

முருங்கைக்கீரை (Drumstick Leaves) சத்துக்கள்: அதிக இரும்புச்சத்து, கால்சியம், புரதம்.

பலன்கள்: இரத்தசோகை தீர்க்க உதவும். எலும்புகளுக்கு பலம். பெண்களுக்கு சிறந்த ஊட்டச்சத்து.

பசலைக்கீரை (Spinach) சத்துக்கள்: இரும்பு, விட்டமின் C, K.

பலன்கள்: ரத்தத்தை சுத்திகரிக்கும், எலும்புகள் மற்றும் நரம்புகளுக்கு நன்மை, கண் பார்வையை பாதுகாக்கும்.

அரைக்கீரை, தொட்டுக்கீரை, முள்ளுக்கீரை (Amaranth types) சத்துக்கள்: இரும்புச்சத்து, கால்சியம், விட்டமின் A, C, ஃபோலேட் (Folate), நார்சத்து, மாங்கனீசு, பொட்டாசியம், பீட்டா-கரோட்டின், சிங்க், மெக்னீசியம், விட்டமின் K, ஆண்டி-ஆக்ஸிடென்ட்.

பலன்கள்: ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தும் உடலை ஆற்றல்மிக்கதாக மாற்றும். குடல் இயக்கத்தை தூண்டும்.

புதினா, கொத்தமல்லி (Mint, Coriander leaves) சத்துக்கள்: விட்டமின் A, ஆன்டி-ஆக்ஸிடென்ட், விட்டமின் C, இரும்புச்சத்து , பொட்டாசியம் மென்தால் எண்ணெய் , விட்டமின் K, ஃபோலேட்(Folate) , மாங்கனீசு, இரும்பு, கால்சியம்

பலன்கள்: செரிமானத்திற்கு சிறந்தது, வாயுக் கோளாறுகள் குறைக்கும், வாசனைத் தன்மை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி,

3.கொழம்பு காய்கள் (Curry Vegetables):

கத்தரிக்காய் (Brinjal) சத்துக்கள்: நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட், விட்டமின் B1, B6, மேங்கனீஸ், பொட்டாசியம்.

பலன்கள்: நரம்பியல் நலம், சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும், கொழுப்பை குறைக்கும், ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தும், செரிமானத்தை மேம்படுத்தும்.

இதையும் படியுங்கள்:
டெஸ்லாவின் மும்பை ஷோரூம்: மின்சார வாகன சந்தையில் புதிய அத்தியாயம்..!
Vegetables

பீர்க்கங்காய் (Ridge gourd) சத்துக்கள்: நார்ச்சத்து, விட்டமின் A, C, துத்தநாகம் (Zinc), மெக்னீசியம், மிகக் குறைந்த கலோரி.

பலன்கள்: உடல் வெப்பம் குறைக்கும் எடை குறைக்கும் உணவாக சிறந்தது. சிறுநீரக சுத்தம்.

சுரைக்காய் (Bottle gourd) சத்துக்கள்: நீர் அடர்த்தி – 90%+ விட்டமின் C, B, நார்ச்சத்து, மெக்னீசியம், கால்சியம்.

பலன்கள்: உள் உறுப்புகளுக்கு குளிர்ச்சி, இரத்த அழுத்தம் குறைக்கும், குடல் இயக்கத்தை மேம்படுத்தும்.

பூசணிக்காய் (Ash gourd) சத்துக்கள்: நீர் சத்து அதிகம், விட்டமின் B1, B2, C, நார்ச்சத்து, பொட்டாசியம்.

பலன்கள்: மூளைச் செயல்பாட்டை தூண்டும், மன அமைதி தரும், தீவிர உடல் சூட்டை தணிக்கும்.

புடலங்காய், பாகற்காய் (Snake gourd, Bitter gourd):

பாகற்காய் சத்துக்கள்: விட்டமின் C, A, இரும்புச்சத்து, நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட்.

பலன்கள்: சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்தது.

புடலங்காய் சத்துக்கள்: நீர் அடர்த்தி, விட்டமின் A, C, நார்ச்சத்து, துத்தநாகம், மெக்னீசியம்.

பலன்கள்: குடல் புழுக்களை நீக்கும். இரத்த சுத்திகரிப்பு செய்யும்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

இதையும் படியுங்கள்:
எந்தக் கிழமையில் தானம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்?
Vegetables

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com