

பிரபலங்கள் எத்தனை வயதானாலும் இளமை ரகசியத்துடனும் உற்சாகத்துடனும் இருப்பதற்கான முக்கிய காரணமாக உணவுகளே இருக்கும் . அவர்கள் எந்த மாதிரியான உணவுகளை உட்கொள்கிறார்கள் என்பதை அறிய அனைவருக்கும் ஆர்வம் இருக்கும் .இதோ கிரிக்கெட்டின் முடிசூடா மன்னனாக தற்போது மக்கள் மனங்களில் சிம்மாசனம் இட்டு விளையாடிக் கொண்டிருக்கும் விராட் கோலியின் சூப்பர் உணவு ரகசியம் பற்றி இங்கு பார்ப்போமா?
தற்போதைய கலப்பட உணவு உலகில் எதை உண்டால் நலமுடன் இருப்போம் என்பதில் பலருக்கும் குழப்பம் இருந்து வருகிறது. நமது இந்திய பாரம்பரிய உணவுகளே போதும் நம் ஆரோக்கியம் காக்க. இதோ விராட் கோலியின் சூப்பர் உணவில் உள்ள இந்த 12 உணவுப் பொருட்களையும் நாமும் நமது உணவில் சேர்த்து ஆரோக்கியம் பெறுவோம்.
1. முருங்கைக்கீரை
வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். ஹார்மோன் பேலன்ஸ் க்கு உதவும்.
2. சிறுதானிய வகைகளில் ஒன்று.
சிறுதானியங்கள் (கம்பு, வரகு, தினை, சாமை, கேழ்வரகு போன்றவை) நார்ச்சத்து, புரதம், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் நிறைந்த உணவாகும். இவை சர்க்கரை நோய், ரத்தசோகை, உடல் பருமன் போன்றவற்றைத் தடுக்கவும், ஜீரண சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றன,
3. காரட்
இதிலுள்ள வைட்டமின் A (பீட்டா-கரோட்டின்), நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் K1 போன்ற சத்துக்கள் கண் ஆரோக்கியம், இதய ஆரோக்கியம், இரத்த சர்க்கரை கட்டுப்பாடு, எடை மேலாண்மை, செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் தோல் ஆரோக்கியம் எனப் பல நன்மைகளைத் தரும்.
4. பீட்ரூட்
பீட்ரூட் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி ஆரோக்கியம் மற்றும் அழகைத் தரும். இதில் உள்ள ஃபோலேட், பொட்டாசியம், இரும்பு மற்றும் வைட்டமின் சி போன்றவைகள் இதய ஆரோக்கியம், இரத்த அழுத்தம் , தடகள செயல்திறன் சரும இளமை மற்றும் இரத்த சோகை ஆகியவற்றுக்கு அவசியமாகும்.
5.மாதுளம் பழம்
இது மூளை மற்றும் எலும்புகளை வலுப்படுத்த உதவும் வைட்டமின்கள் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த ஒரு சிறந்த பழமாகும்.
6. பூசணி விதை
புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ள இது இதய ஆரோக்கியம், இரத்த சர்க்கரை கட்டுப்பாடுடன் குறிப்பாக புரோஸ்டேட் ஆரோக்கியம், தூக்கம் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துகின்றன,
7. முந்திரி
இதில் நல்ல கொழுப்புகள், புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கெட்ட கொழுப்பை குறைத்து, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, ஆற்றலை அளிக்கிறது, இதய ஆரோக்கியம், எடை கட்டுப்பாடு, எலும்பு வலிமை, தோல், முடி ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
8. தேன்
தேனின் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, , மன அழுத்தத்தைக் குறைப்பது போன்ற நன்மைகளைத் தருகிறது. சர்க்கரைக்கு மாற்றாக இதை பயன்படுத்தலாம்.
9. தயிர்
தயிரிலுள்ள புரோபயாடிக்ஸ் செரிமானத்தை மேம்படுத்துவதிலிருந்து நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவது, எலும்புகளைப் பலப்படுத்துவது (கால்சியம்), என பல நன்மைகள் தருகிறது.
10. எலுமிச்சை
எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, செரிமானம், எடை கட்டுப்பாடு, நோய் எதிர்ப்பு சக்தி, சரும ஆரோக்கியம், இதய ஆரோக்கியம், காய்ச்சல், தொண்டை வலி போன்ற பலவற்றின் நிவாரணம் ஆகும்.
11. நல்லெண்ணெய்
தலைமுடி வளர்ச்சி, உடல் சூட்டைக் குறைப்பது, எலும்புகள் பலம், இதய ஆரோக்கிய பாதுகாப்பு, மன அழுத்தத்தைக் குறைப்பது மற்றும் சரும ஆரோக்கியம் போன்ற பல நன்மைகளைக் கொண்டுள்ளது.
12. கோசாப்பழம் ( வாட்டர் மிலான்)
இதன் நீர்ச்சத்து உடல் வறட்சியைத் தடுக்கிறது, குறைந்த கலோரியுடன் வைட்டமின்கள் நிறைந்துள்ளதால் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தி, சோர்வைப் போக்கும், உடலுக்கு நீரேற்றத்தையும் புத்துணர்வையும் அளிக்கிறது.
இந்த 12 சூப்பர் உணவு பொருட்களையும் ஒன்றாக சேர்த்து ஒரே உணவாக விராட் கோலி சாப்பிடுகிறார் என்கிறது தகவல்கள். நம்மால் அப்படி சாப்பிட முடியவில்லை எனினும் இதில் இருக்கும் உணவு பொருட்களை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது நமக்கு நல்லது தானே?