ஆக்‌ஷனில் இறங்கிய உணவு பாதுகாப்புத்துறை : இனி கலப்படத்துக்கு நோ சான்ஸ்..!

FSSAI New rules
FSSAI New rulesSource:dinamalar
Published on

தற்போது கலப்பட உணவுகள் மீதான விழிப்புணர்வு பெருகி வந்தாலும் இன்னும் கடைகளில் பேக்கிங் செய்து வரும் உணவுப் பொருட்கள் பற்றி அறியாமலே வாங்குகின்றோம். காரணம் கடைகளில் தரமான பொருட்களையே விற்பார்கள் என்ற நம்பிக்கை.

ஆனால் அந்த நம்பிக்கை சில நேரங்களில் உண்ணத் தகாத உடலுக்கு தீங்கு தரக்கூடிய பொருள்களை வாங்குவதன் மூலம் தகர்க்க படலாம். இதோ சமீபத்தில் உணவு பாதுகாப்புத் துறையின் இந்த அறிவுறுத்தல் செய்தி இதற்கு சான்று.

உணவு பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் பதப்படுத்தி பொட்டலம் இட்டு விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களில் சைவ மற்றும் அசைவ குறியீடு கட்டாயம் இடம் பெற வேண்டும் என்றும் அதில் உள்ள ஊட்டச்சத்து அளவுகள் சேர்க்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள், பேட்ச் எண், தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களும் இடம்பெற வேண்டும் எனவும் குறிப்பிட்டதோடு உணவு பொட்டலங்களில் உள்ள தகவல்களை பொதுமக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

சைவ - அசைவ குறியீடு என்றால் என்ன?

இந்திய உணவு சட்டங்களின்படி சைவ (Green Dot) மற்றும் அசைவ (Brown/Red Dot) குறியீடுகள் குறிப்பிட்ட வகை உணவுப் பொருட்களுக்கு மட்டுமே கட்டாயமாக பயன்படுத்தப்பட வேண்டும்.. சைவ–அசைவ குறியீடு “Packaged/Processed Food” க்கு மட்டுமே சட்டப்படி கட்டாயம். லேபிள், packet, box, tin, bottle போன்ற packing இருந்தால் குறியீடு அவசியம் . இதையே உணவு பாதுகாப்புத் துறையும் குறிப்பிட்டுள்ளது.

அசைவ குறியீடு (Brown Dot) கட்டாயமாகப் பயன்படுத்தப்படும் பொருட்களில் சிக்கன் மட்டன் மீன் வகையறாக்கள் மட்டுமின்றி விலங்குகளிலிருந்து பெறப்பட்ட பொருட்களை உள்ளடக்கிய இறைச்சி மசாலாக்கள் , விலங்கு கொழுப்பு அடிப்படையில் ஆன பொருள்கள், முன் ஆயில் கேப்ஸ்யூல்ஸ் உள்ளிட்டவைகளுடன் Gelatin உள்ள ஜெல்லி அல்லது கமி கேண்டியும் இதில் அடங்கும்.

சைவ குறியீடு (Green Dot) பயன்படுத்தப்படும் பொருட்களாக பழங்கள், பேக்கிங் காய்கறிகள், பால், தயிர், நெய்,(animal slaughter product அல்ல; so veg)All plant-based items, 100 சதவீத இயற்கை மசாலாக்கள், பேக்கிங் அரிசி, கோதுமை மாவு, இனிப்பு உள்ளிட்ட சைவப் பொருள்கள் அடங்கும்.குறிப்பாக இவை எல்லாம் packet/box/carton வடிவில் வந்தால் குறியீடு கட்டாயம்.

அதே சமயம் ஓட்டல்களில் விற்கப்படும் உணவு, Open vegetables, fruits, சாலையோர உணவுகள் போன்ற சிலவற்றிற்கு இந்த குறியீடு அவசியம் இல்லை.

அதேபோல் எக்ஸ்பைரி தேதி (Expiry Date) என்பது ஒரு பொருள் — குறிப்பாக உணவு, மருந்து, அழகு சாதனப் பொருட்கள் — பாதுகாப்பாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும் கடைசித் தேதியை குறிக்கிறது.அந்த தேதிக்குப் பிறகு, பொருளின் பாதுகாப்பு, தரம், சத்துக்கள், செயல்பாடு குறையக்கூடும்.

சில சமயங்களில், அதற்கு பிறகு பயன்படுத்துவது உடலுக்கு கேடு தரவும் செய்யும் என்பதால் நுகர்வோருக்கு இதில் அதிக கவனம் தேவை.

உணவு பாதுகாப்புத் துறையின் அறிவுறுத்தல் பேரில் இது போன்ற விஷயங்களில் கவனம் வைப்பது நமது நலனுக்கு நல்லது தானே?

இதையும் படியுங்கள்:
ரேஷன் கார்டுக்கு தலா ₹3,000.! பொங்கலுக்கு மாஸாக பிளான் போடும் திமுக.!
FSSAI New rules

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com