உடலுக்கு வைட்டமின்-ஏ கட்டாயம் தேவை! ஏன் தெரியுமா?

Vitamin-A is essential for the body! Do you know why?
Vitamin-A is essential for the body! Do you know why?

ண்களின் ஆரோக்கியத்தில் வைட்டமின்-ஏ முக்கியப் பங்காற்றுகிறது. உடலில் ஏற்படும் 50 சதவிகித சருமப் பிரச்னைகளுக்கு வைட்டமின்-ஏ தீர்வைத் தருவதாக அமைந்துள்ளது. சிறு வயதில் ஏற்படக்கூடிய உடல் பிரச்னைகள் முதல் வயதானவர்களின் உடல் பிரச்னைகள் வரை வைட்டமின்-ஏ ஆதிக்கம் செலுத்துகின்றது. உடலுக்கு ஊட்டமளிக்கும் மிக முக்கியமான வைட்டமின்களில் ஒன்றாக விளங்கும் வைட்டமின்-ஏ எந்த உணவுகளில் அதிகமாகக் கிடைக்கின்றது என்பது குறித்தும் இதனால் உடல் பெறும் நன்மைகள் குறித்தும் இந்தப் பதிவில் பார்க்கலாம்.

வைட்டமின்-ஏ நோயெதிர்ப்பு சக்தி, இனப்பெருக்கம், கண் பார்வை மேம்படுதல், இதயம், நுரையீரல், சிறுநீரகம் மற்றும் பிற உறுப்புகளின் செயல்பாட்டிற்கு பெரிதும் உதவுகிறது. சரும ஆரோக்கியம், உடல் வளர்ச்சி மற்றும் உடல் செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாத வைட்டமினாக இது கருதப்படுகின்றது.

பொதுவாகவே, அனைவருக்கும் புரியும்படியாகச் சொல்ல வேண்டும் என்றால் சிவப்பு, பச்சை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறங்களில் காணப்படும் காய்கறிகள் மற்றும் பழங்களில் வைட்டமின்-ஏ சத்து செறிந்து காணப்படுகின்றது. இப்படி நினைவில் வைத்துக்கொள்வதன் மூலம் வைட்டமின்-ஏ அடங்கிய உணவுகளை அனைவரும் இலகுவில் அடையாளம் காண முடியும். முட்டையின் மஞ்சள் கரு, கல்லீரல், பால், சீஸ், மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற பழங்கள், காய்கறிகள் மஞ்சள் மக்காச்சோளம் போன்றவை நிறமி கரோட்டின் கொண்டுள்ளன. சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கேரட், ப்ரக்கோலி, கீரைகள், மா, பூசணி, தக்காளி, ஓட்மீல், ஆப்ரிகாட், பட்டாணி, பப்பாளி மற்றும் காலே கீரைகள் போன்றவற்றில் வைட்டமின்-ஏ நிறைந்து காணப்படுகின்றது. வைட்டமின் ஏ நோய்களை உருவாக்கும் ஆண்டிஜென்களுக்கு எதிரான லிம்போசைடிக் அதிகரிப்பதன் மூலம் நோய்த்தொற்றுகளுக்கு எதிராக உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றது.

பார்வை திறனை மேம்படுத்த வைட்டமின்-ஏ உதவுகிறது. கண்களின் வறட்சியைத் தடுத்து, கண்களை ஈரப்பதமாக வைத்திருக்கிறது. இரவு நேரத்தில் பார்வைத் திறனில் குறைபாட்டை உண்டாக்கும் மாலை கண் நோயைத் தடுக்கின்றது. மேலும், கண்புரை, மாகுலர் சிதைவு அபாயத்தையும் இந்த வைட்டமின் கணிசமாகக் குறைக்க வல்லது. இந்த வைட்டமின் நிறைவாக இருந்தால் கிளைகோமா பாதிப்பு அதிகமாகாமல் தடுக்கலாம்.

வைட்டமின்-எ எலும்பு ஆரோக்கியத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருப்பதன் மூலம், குழந்தைகள் வளரும் பருவத்தில் சரியான தசை வளர்ச்சியைப் பெறுவார்கள். குழந்தைகள் மற்றும் இளம் வயதினரின் சரியான தசை வளர்ச்சியை உறுதி செய்வதில் வைட்டமின் ஏ முக்கியப் பங்கு வகிக்கிறது. வைட்டமின்-ஏ அதிகப்படியான முகப்பரு அபாயத்தை குறைக்க உதவுகிறது. இது சருமத்தின் பாதுகாப்பு திசுக்களை வலுப்படுத்துவதோடு, சரும மேற்பரப்பின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. சருமத்தில் இருக்கும் அழுக்குகளை வெளியேற்றி அதன் ஆக்ஸிஜனேற்ற பண்புகளால் சருமத்தை சுத்தப்படுத்துகிறது. இதனால் முகப்பரு அபாயம் குறைகிறது. சருமத்தை ஈரப்பதமாகவும் மென்மையாகவும் வைத்திருக்கச் செய்கிறது. வைட்டமின் ஏ குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு அம்மை நோயை ஏற்பட வாய்ப்புண்டு.

இதையும் படியுங்கள்:
பச்சிளம் குழந்தையின் டயப்பர் ரேஷை சரிசெய்வது எப்படி?
Vitamin-A is essential for the body! Do you know why?

உடல் கொழுப்பின் அளவைக் குறைக்க வைட்டமின்-ஏ உதவுகிறது. இது கொழுப்பில் கரையக்கூடிய ஒரு வைட்டமின் ஆகும். உடலில் கொழுப்பு குறைவதால் இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் போன்ற ஆபத்துகளிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

சருமச் சுருக்கங்களை நீக்கும் குணங்களை வைட்டமின்-ஏ அதிகமாகக் கொண்டுள்ளது. என்றும் இளமையாக இருக்க விரும்புபவர்கள் வைட்டமின்-ஏ நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். தினசரி செயற்பாடுகளுக்கு தேவையான மன மற்றும் உடல் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கு வைட்டமின்-ஏ பெரிதும் துணைபுரிகின்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com