கேரட்டை மிஞ்சிய பவர்! வைட்டமின் A சத்து நிறைந்த 3 சூப்பர் ஃபுட்ஸ்!

Vitamin A rich foods
Vitamin A rich foods
Published on

வைட்டமின் A என்பது நம் கண்கள், சருமம் மற்றும் இன விருத்திக்கு உதவும் உறுப்புகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவி புரிவதுடன் நமது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

வைட்டமின் A சத்தை நம் உடல் தானாகவே உற்பத்தி செய்துகொள்ள முடியாது. நாம் உட்கொள்ளும் உணவுகளின் மூலமே நாம் அதைப் பெற முடியும். பொதுவாக கேரட்டில் வைட்டமின் A சத்து அதிகம் உண்டு என்பதை அனைவரும் அறிவோம். அதைத் தவிர்த்து வைட்டமின் A சத்து அதிகம் உள்ள மூன்று உணவுப் பொருட்கள் பற்றி இப்பதிவில் காணலாம்.

1. ஸ்வீட் பொட்டட்டோ:

தோலுடன் பேக் (bake) செய்யப்பட்ட ஒரு முழு ஸ்வீட் பொட்டட்டோவில் 1730 mcg RAE உள்ளது. இது நம் உடலின் ஒரு நாளையத் தேவையைவிடவும் சற்று கூடுதலேயாகும்.

கேரட்டில் இருப்பது போலவே, வைட்டமின் A யின் முந்தைய நிலையாகிய கரோட்டீனாய்ட் வடிவில் இச்சத்து இருப்பதால், இதன் கூடுதல் அளவு உடலுக்கு எந்த தீங்கும் விளைவிக்காது. சூப், ஃபிரை போன்ற எந்த வகையான உணவாகவும் இதை தயாரித்து உண்ணலாம்.

2. பசலைக் கீரை:

வேக வைத்த அரை கப் பசலைக் கீரையில் 573 mcg RAE உள்ளது. ஏறத்தாழ உடலின் ஒரு நாளின் செயல்பாடுகளுக்கு போதுமானது.

இதையும் படியுங்கள்:
கொடுக்காய்ப்புளி.. ஆப்பிளை விட அதிக சத்து! மறந்து போன ரகசியம்! ஆனால்...
Vitamin A rich foods

3. மஞ்சள் பூசணி:

ஒரு கப் மஞ்சள் பூசணி சூப்பில் 902 mcg RAE உள்ளது. வேக வைத்து மசித்த (pureed) பூசணி கரைசலை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் சூப்பே ஆரோக்கியமானது. ஒரு ஸ்லைஸ் பம்ப்கின் 'பை' (Pumpkin Pie) யிலும் 902 mcg RAE உள்ளது. வர்த்தக ரீதியாக தயாரிக்கப்படும் ஒரு ஸ்லைஸ் பம்ப்கின் 'பை'யில் சுமார் 488 mcg RAE மட்டுமே உள்ளது.

வைட்டமின் A அடங்கிய பிற உணவுப் பொருட்கள்:

  • வெண்ணிலா ஐஸ் கிரீம்: 185 mcg RAE per ⅔ கப்

  • செரிவூட்டப்பட்ட ஸ்கிம் மில்க்: 149 mcg RAE per கப்

  • முலாம் பழம் (cantaloupe),

  • ரிகோட்டா சீஸ் (part skim): 135 mcg RAE per ½ கப்

  • சிவப்பு குடை மிளகாய்: 117 mcg RAE per ½ கப்

  • மாம்பழம்: 112 mcg RAE per whole mango.

இதையும் படியுங்கள்:
இனிமே தண்ணிக்கு பதிலா இதை குடிங்க! உங்க ரத்த சர்க்கரை அளவு "லோ" ஆகிடும்!
Vitamin A rich foods

வைட்டமின் A அடங்கிய உணவுகள் பாலூட்டும் தாய்மார்களுக்கு சிறந்த பலனளிக்கும். ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவை. பற்கள் மற்றும் எலும்புகளை ஆரோக்கியமாக வைக்க உதவும். மேலும் கேன்சர் நோய் வரும் அபாயத்தை தடுக்கவும் உதவும்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com