குழந்தைகளின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் வைட்டமின் சி சத்து மிகவும் அவசியம். வைட்டமின் சி என்பது அப்சார்டிக் அமிலம் ஆகும். வைட்டமின் சி சத்து நிறைந்த உணவுகளின் மூலமாக குழந்தைகளுக்கு சில தனிப்பட்ட பலன்கள் கிடைக்கின்றன. குழந்தையின் உடலால் வைட்டமின் சி சத்தை சுயமாக உற்பத்தி செய்ய இயலாது. குழந்தை சாப்பிடும் உணவுகளில் இருந்துதான் வைட்டமின் சி சத்தை அவர்கள் பெற முடியும்.
வைட்டமின் சி சத்து நிறைந்த உணவு வகைகள்: ஸ்ட்ராபெர்ரி, கிவி, ப்ராக்கோலி, பப்பாளி, சிட்ரஸ் பழங்கள், கேப்சியம் போன்றவை ஆகும். இவை குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி நோய் தொற்றுகளிலிருந்து பாதுகாக்கும். கொய்யா, தக்காளியில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. ஃபோலேட், ஃபிளேவனாயட்ஸ் ஆகிய சத்துக்களும், உயர் தரமான ஆண்டி ஆக்ஸிடன்ட் போன்றவையும் உள்ளன.
குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் உடல் நல ஆரோக்கியத்தைத் தக்க வைக்க ஜிங்க் சத்து உடலுக்கு அவசியத் தேவையாகும். இது கோதுமை, முழு தானியங்கள், பட்டாணி, பீன்ஸ், பருப்புகள், வெண்ணெய், தயிர், நட்ஸ், முட்டை, கீரைகள் போன்றவற்றில் அதிகம் உள்ளன.
வைட்டமின் சி சத்தால் குழந்தைகளுக்குக் கிடைக்கும் பலன்கள்: இரத்த செல்கள், எலும்புகள், திசுக்களை சரிசெய்கிறது. இரத்தக் குழாய்களை பலப்படுத்துகிறது. வெட்டுக் காயங்கள், புண்களை குணமடைய வேகத்தை அதிகரிக்கச் செய்கிறது. குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்றுகளிலிருந்து பாதுகாக்கிறது. மேலும், இது உணவுகளில் இருந்து இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கும் உதவுகிறது.
ஒட்டு மொத்தமாக குழந்தைகளின் உடல் நலனுக்கும் வளர்ச்சிக்கும் வைட்டமின் சி சத்து பெரும் உதவிகரமாக இருக்கிறது.