தினமும் 3 வால்நட்ஸ் சாப்பிட்டால் போதும்.. என்ன ஆகும் தெரியுமா?

வால்நட் பயன்கள்
வால்நட் பயன்கள்

இருக்கும் நட்ஸ் வகைகளில் வால்நட்ஸ் தனித்துவமான குணம் கொண்டதாகும். இதைப் பற்றி பெரும்பாலான நபர்களுக்குத் தெரிவதில்லை. இதை தமிழில் அக்ரூட் பருப்பு என அழைக்கிறார்கள். உடலுக்குத் தேவையான புரதம், ஃபைபர், மாங்கனீஸ், மெக்னீசியம், துத்தநாகம், பாஸ்பரஸ், விட்டமின் பி, விட்டமின் ஈ, நல்ல கொழுப்பு போன்ற அனைத்துமே வால்நட்டில் நிறைந்துள்ளது. 

மேலும் இதில் அதிக அளவு ஆன்ட்டி ஆக்சிடென்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், நம் உடலுக்கு மிகவும் நல்லது. எனவே தினசரி 3 வால்நட்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து தெரிந்து கொள்வோம். 

1. மனச்சோர்வை நீக்கும்: வால்நட்டில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளது. இது மூளையின் செயல்பாட்டிற்கு பெரிதும் உதவும். மேலும் மனச்சோர்வை குறைக்கும் ஆற்றல் இதற்கு உள்ளது. 

2. குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது: வால்நட் சாப்பிடுவதால் நம்முடைய செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வளர்சிதை மாற்றம் போன்றவை ஊக்குவிக்கப்படுகிறது. இதில் உள்ள ப்ரீபயாடிக் பண்புகள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தூண்டுகிறது. 

3. உடல் எடையைக் குறைக்க உதவும்: அக்ரூட் பருப்புகள் நம்முடைய பசியை குறைப்பதால், அதிக உணவு உட்கொள்வது தடுக்கப்பட்டு, நமது உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். இவற்றை காலையில் சாப்பிடுவது நல்லது. வால்நட் பருப்புகளை வறுத்து பொடியாக்கி சாலட்களில் சேர்த்தும் சாப்பிடலாம். சில சமயங்களில் நேரடியாக சாப்பிடும்போது கசக்கும் என்பதால், சாலட்களில் சாப்பிடும்போது நன்றாக இருக்கும். 

இதையும் படியுங்கள்:
தயாராகும் சார்பட்டா 2.. தீவிர பயிற்சியில் ஆர்யா.. வைரலாகும் வீடியோ!
வால்நட் பயன்கள்

4. முடி உதிர்வைக் குறைக்கும்: வால்நட்டை தினமும் சாப்பிட்டு வந்தால் அதில் நிறைந்திருக்கும் விட்டமின் பி7 தலைமுடியின் வலிமையை அதிகரித்து முடி உதிர்வைக் குறைக்கும். எனவே உங்களுக்கு அதிகமாக முடி கொட்டும் பிரச்சனை உள்ளதென்றால், தினமும் வால்நட் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். 

5. இதயத்தை ஆரோக்கியமாக்கும்: இதில் உள்ள வீக்கத்தை குறைக்கும் பண்பு, ரத்த நாளங்களை நன்கு செயல்பட வைத்து இதய ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது. வால்நட் பருப்புகளில் உள்ள விட்டமின் ஈ இதய பாதுகாப்பிற்கு பெரிதும் உதவுகிறது. 

6. சருமத்திற்கு நல்லது: சருமத்திற்கு ஆரோக்கியம் தந்து அதில் சுருக்கங்கள் வருவதைத் தவிக்கிறது. மேலும் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் வால்நட் சாப்பிடுவதால் கணைய புற்றுநோயின் அபாயம் குறைவதாகவும் கண்டறிந்துள்ளனர். எனவே தினசரி நாம் வால்நட் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com