2026 பிறப்பதற்குள் ஸ்லிம் ஆக வேண்டுமா? இந்த 5 விஷயங்களை மட்டும் செய்யுங்க!

Weight Loss
Weight Loss
Published on

"அடுத்த வருஷம் பிறந்தாச்சுனா போதும், கண்டிப்பா எடையைக் குறைச்சிடுவேன்" அப்படின்னு ஒவ்வொரு நியூ இயருக்கும் நாம சபதம் எடுப்போம். ஆனா, அந்த சபதம் ஜனவரி இரண்டாம் தேதியே காற்றில் பறந்துவிடும். எடை போடுவது அல்வா சாப்பிடுவது மாதிரி ஈஸி; ஆனா அதைக் குறைப்பது மலையேறுவது மாதிரி கஷ்டம்னு நாமளே நம்ம மனசைத் தேத்திக்கிறோம். 

ஆனா, பெரிய பெரிய கஷ்டங்கள் எதுவும் படாமலே, சின்ன சின்ன வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலமா நம்ம எடையைச் சூப்பரா குறைக்கலாம். இன்னும் புத்தாண்டுக்குச் சில வாரங்களே இருக்கும் நிலையில், இப்பவே இதை ஆரம்பிச்சா, நியூ இயர் அன்னைக்கு நீங்க ஸ்லிம்மா, ஸ்மார்ட்டா ஜொலிக்கலாம். 

கொழுப்பை உருக்கும் நீர்!

காலை எழுந்ததும் 'பெட் காபி' குடிக்கலனா பலருக்குப் பொழுது விடியாது. அந்தப் பழக்கத்தை மூட்டைக் கட்டி வைத்துவிட்டு, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான சுடுதண்ணீரை குடிக்கப் பழகுங்கள். இது வெறும் தண்ணி இல்லை, இது ஒரு டிடாக்ஸ். இது வயிற்றுக்குள் போனதும், தேங்கியிருக்கும் கெட்ட கொழுப்பை மெழுகு போல இளகச் செய்து வெளியேற்றும். இது ஜீரண சக்தியைத் தூண்டி, கலோரிகளை வேகமா எரிக்கும்.

அரை மணி நேர முதலீடு!

"எனக்கு நேரமே இல்லை"ங்கிறது தான் நம்ம எல்லாரும் சொல்ற முதல் பொய். ஒரு நாளைக்கு 24 மணி நேரத்துல, உங்க உடம்புக்காக ஒரு 30 நிமிஷம் ஒதுக்க முடியாதா? பெரிய ஜிம்முக்குப் போய் பளு தூக்க வேண்டாம். சாதாரண நடைப்பயிற்சி, ஜாகிங் அல்லது வீட்டுக்குள்ளேயே செய்யக்கூடிய எளிய உடற்பயிற்சிகளைச் செய்தாலே போதும். இது உடலை சுறுசுறுப்பாக்கி, தொப்பையைக் கரைய வைக்கும்.

எடை குறையணும்னா, முதல்ல நாக்கைக் கட்டுப்படுத்தணும். ஹோட்டல், பாஸ்ட் ஃபுட் உணவுகளுக்கு ஒரு பெரிய 'கும்பிடு' போட்டுட்டு, வீட்டுச் சாப்பாட்டை மட்டும் சாப்பிடுங்க. அதுலயும், தட்டுல சோறு கம்மியாகவும், காய்கறிகள், பழங்கள் அதிகமாகவும் இருக்கணும். மாவுச்சத்தைக் குறைச்சு, புரதச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிட்டா, வயிறு நிறைஞ்ச மாதிரி இருக்கும், சீக்கிரம் பசிக்காது.

பல நேரங்கள்ல நமக்குத் தாகமா இருக்கும், ஆனா நாம அதை பசினு தப்பா நினைச்சு எதையாவது எடுத்து வாயில போட்டுப்போம். அதனால, அடிக்கடி தண்ணீர் குடிங்க. இது உடம்பை நீர்ச்சத்தோட வெச்சுக்கும், கண்டதைச் சாப்பிடாமலும் தடுக்கும். அதேபோல, தினமும் 7 முதல் 8 மணி நேரம் நல்லா தூங்குங்க. தூக்கம் கெட்டுப்போனா, உடல் எடை தானாக எகிறும்.

இதையும் படியுங்கள்:
சின்ன பூச்சி பெரிய பிரச்னை: கொசுக்கடிக்கு வைத்தியம்... அறிவியல் தரும் விளக்கம்!
Weight Loss

இதெல்லாம் பார்க்க ரொம்பச் சின்ன விஷயமாத் தெரியலாம். ஆனா, இதைத் தொடர்ந்து செஞ்சு பாருங்க, ரிசல்ட் உங்களையே ஆச்சரியப்படுத்தும். புத்தாண்டு அன்னைக்கு சபதம் எடுப்பதை விட, இன்னைக்கே செயல்ல இறங்குவதுதான் புத்திசாலித்தனம். 2026-ஐ ஃபிட்டா, ஆரோக்கியமா, புதுப் பொலிவோட வரவேற்போம்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com