Say NO! டீ-காபி குடிக்கும்போது இந்த 4 உணவுகளுக்கு 'நோ' சொல்லுங்க... இல்லனா அவ்வளவுதான்!

நீண்ட காலம் வாழ வேண்டுமா? டீ, காபியை சில குறிப்பிட்ட உணவுகளுடன் (Foods) எடுத்துக் கொள்வதால் ஆரோக்கிய கேடு உண்டாகும் என்று சொல்லப்படுகிறது. தவிர்ப்போமே!
A girl drinking tea and foods to avoid with tea and coffee
Foods to avoid with tea and coffee
Published on

தினமும் காலை, மாலை என்று இருவேளைகள் டீ அல்லது காபி குடிக்காமல் நம்மால் இருக்க முடியாது. அதன் சுவைக்கு நாம்  அடிமையாகியிருக்கிறோம். இருப்பினும் டீ, காபியை சில குறிப்பிட்ட உணவுகளுடன் (Foods) எடுத்துக் கொள்வதால் ஆரோக்கிய கேடு உண்டாகும் என்று சொல்லப்படுகிறது. அந்த 4 உணவுகள் என்னென்ன என்பதைப் பற்றி விரிவாக இப்பதிவில் காண்போம்.

1. Biscuit

நம்மில் பலபேர் டீ அல்லது காபியுடன் பிஸ்கட்டை சேர்த்து சாப்பிடும் வழக்கத்தை வைத்திருக்கிறோம். நம்முடைய டீ/ காபியில் சர்க்கரை அதிகமாக போட்டு தான் குடிப்போம். அதனுடன் சேர்த்து வெறும் மைதா, சர்க்கரை சேர்த்து செய்த பிஸ்கட்டை சாப்பிடும் போது நம்முடைய ரத்த சர்க்கரை அளவு மிகவும் அதிகரிக்கும். இது உடல் எடையை அதிகாரிப்பதோடு செரிமான கோளாறையும் ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. 

2. Iron rich foods

டீ, காபியில் பாலிபீனால்ஸ் (Polyphenols) என்று சொல்லக்கூடிய ஆண்டி ஆக்ஸிடென்ட் அதிகமாக இருக்கும். அதிலும் குறிப்பாக டீயில் Tannin என்ற பாலிபீனால் இருக்கும். நீங்கள் இரும்புச்சத்து உள்ள உணவுகளை சாப்பிட்டுவிட்டு உடனனேயே ஒரு டீயை குடிக்கும் போது இரும்புச்சத்தை நம் உடலில் சேராமல் இது தடுக்கும். கிட்டத்தட்ட 60 தவீதம் நம் உடலில் இரும்புச்சத்தை சேர விடாமல் தடுக்கும். இது வெஜிட்டேரியன் இரும்புச்சத்துக்கு தான் பொருந்தும். அதில் உள்ள Non heme iron என்ற இரும்புச்சத்தை தான் டீயில் உள்ள டேனின் பாதிக்கிறது. நான் வெஜிடேரியன் உணவுகளில் உள்ள heme iron இரும்புச்சத்து உடலில் சேருவதை டீயில் உள்ள டானின் பாதிப்பதில்லை.

காபி 30 சதவீத இரும்புச்சத்து உடலில் சேர்வதை தடுக்கிறது. இந்த பிரச்னை இரும்புச்சத்து குறைப்பாடு உள்ளவர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம்.

3. Oil foods

எண்ணெய் பலகாரங்களான பஜ்ஜி, சாமோசா, போண்டா இதுப்போல கடலைமாவை வைத்து எண்ணெய்யில் பொரித்த பண்டங்களை டீயுடன் சேர்த்து சாப்பிடும் வழக்கத்தை நாம் வைத்திருப்போம். இந்த உணவுகளில் Unhealthy fats இருக்கும். இதை டீயோடு சேர்த்து சாப்பிடும் போது செரிமான கோளாறுகள் ஏற்படுமாம். 

4. Milk

கடைசி இடத்தை பிடிப்பது பால். இதை கேட்கும் போது ஆச்சர்யமாக உள்ளதா? இதற்கு ஒரு காரணம் இருக்கிறது. வெள்ளைக்காரர்கள் காலக்கட்டத்தில் டீயெல்லாம் போடும் போது டிக்காஷன் மிகவும் கசக்கும் என்று அதன் மேலே கொஞ்சம் பாலை ஊற்றுவார்களாம். ஆனால், நாம் இப்போது பாலில் தான் டிக்காஷனை கலக்கிறோம். வெறும் டிக்காஷனில் catechins மற்றும் Flavonoids ஆகிய மிக சிறந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் இருக்கும். இது இதய ரத்த குழாயை விரிவடைய செய்து ரத்த ஓட்டத்தை சீர் செய்து இதய நோயை தடுக்கவும் உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
Stress Relief: இளமைப் பொலிவுக்கான ரகசியம்: 5 சூப்பர் Anti-aging ஜூஸ்கள்!
A girl drinking tea and foods to avoid with tea and coffee

நீங்கள் டிக்காஷனுடன் பாலை சேர்க்கும் போது பாலில் உள்ள புரதம் டீயில் இருக்கிற Catechins உடன் சேர்த்து ஒரு காம்பிளக்ஸ் ஆன பிணைப்பை உருவாக்குவதால், டீயில் நமக்கு நன்மை தரக்கூடிய ஆன்டி ஆக்ஸிடன்டை நம் உடலால் முழுமையாக உறிஞ்ச முடியாமல் தடுத்துவிடும். அதாவது டீயுடைய சத்தை நமக்கு கிடைக்க விடாமல் பால் லாக் செய்து விடுகிறது என்று ஆய்வுகளில் சொல்கிறார்கள். 

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com