டிமென்ஷியா என்பது மூளையின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் நரம்பு செல்களின் சேதத்தால் உண்டாகும் ஒரு நோய். இது நினைவாற்றல், சிந்தனை, நடத்தை மற்றும், தினசரி செயல்பாடுகளை செய்யும் திறனை பாதிக்கும். வயதானவர்களில் டிமென்சியா நோய் மிகவும் பொதுவானது. இது ஒரு குறிப்பிட்ட நோயல்ல, மாறாக மூளையின் பல்வேறு நிலைகளில் அறியப்படும் அறிகுறிகளின் ஒரு தொகுப்பாகும். டிமென்சியாவின் மிகவும் பொதுவான வகை அல்சைமர் நோயாகும். இந்தப் பதிவில் டிமென்ஷியா நோய் பற்றிய முழு தகவல்களைத் தெரிந்து கொள்வோம்.
டிமென்ஷியாவின் வகைகள்
அல்சைமர் நோய்: இது மிகவும் பொதுவான வகை டிமென்சியா. இது மூலையில் பிளேக் மற்றும் டேங்கிள் எனப்படும் பாதிப்புகள் உருவாவதால் ஏற்படுகிறது.
வாஸ்குலர் டிமென்ஷியா: இது மூளைக்கு ரத்தம் செல்வது குறைவதால் ஏற்படுகிறது. தீவிர பக்கவாதம் அல்லது சிறிய அளவிலான பக்கவாதங்கள் ஏற்பட்டவர்களுக்கு இந்த வகை டிமென்ஷியா ஏற்படலாம்.
லெவி பாடி டிமென்சியா: இது மூளையில் லெவி பாடிஸ் எனப்படும் அசாதாரண புரதங்கள் உருவாவதால் ஏற்படுகிறது.
ஃப்ரான்டோ டெம்போரல் டிமென்ஷியா: மூளையின் பின்புறத்தில் உள்ள பகுதிகளை பாதிக்கும் வித்தியாசமான டிமென்ஷியா இது. இதனால், நடத்தை மாற்றுங்கள், மொழி பிரச்சனைகள் மற்றும் முடிவு எடுக்கும் திறன் குறைபாடு போன்றவை ஏற்படும்.
டிமென்ஷியாவின் அறிகுறிகள்:
டிமென்சியாவின் அறிகுறிகள் பல்வேறு வகைகளில் இருக்கும். நோயின் தீவிரத்தைப் பொறுத்து மாறுபடும். இவற்றின் பொதுவான அறிகுறிகளில் பின்வருவன அடங்கும்:
நினைவாற்றல் இழப்பு.
சிந்தனை மற்றும் முடிவு எடுக்கும் திறன் குறைதல்.
மொழி பிரச்சனைகள்.
தொடர்பு பிரச்சினைகள்.
மனநிலை மாற்றங்கள்.
நடத்தை மாற்றங்கள்.
தினசரி செயல்பாடுகளை செய்யும் திறன் குறைதல்.
டிமென்ஷியா நோயை கண்டறிவது ஒரு சிக்கலான செயல்முறையாகும். மருத்துவர் உங்கள் மருத்துவ வரலாறைப் பார்த்து, உடல் பரிசோதனை, நரம்பியல் பரிசோதனைகள் ஆகியவற்றை மேற்கொள்வர். மேலும் ரத்தப் பரிசோதனை, CT ஸ்கேன், PT ஸ்கேன்,MRI, ஸ்பைனல் டேப் போன்ற பரிசோதனைகள் செய்யப்படலாம்.
டிமென்ஷியா நோயை முழுமையாக குணப்படுத்தும் மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும், சிகிச்சை மூலம் இவற்றின் அறிகுறிகளைக் குறைத்து நோயாளிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தலாம்.