இதையெல்லாம் சாப்பிட்டா கூட உடல் எடை குறையுமா? யாரும் சொல்லாத உண்மை!

தைராய்டு, மன அழுத்தம், PCOS, தூக்கக் குறைவு போன்ற காரணங்களை கண்டறிந்து, சர்க்கரை-பதப்படுத்திய உணவுகளை குறைத்து, புரதம்-நார்ச்சத்து நிறைந்த உணவுகள், முழுதானியங்கள், மது-புகை விலக்கு, தினசரி உடற்பயிற்சி மற்றும் போதுமான தூக்கத்தைப் பின்பற்றினால் எடையை ஆரோக்கியமாக கட்டுப்படுத்தலாம்.
Couple Doing Exercise
Weight Management TipsImage credit: AI
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

உடல் பருமன் என்பது இன்றைய பெரும் பிரச்சனையாக உள்ளது. உடலில் பல்வேறு விதமான நோய்கள் ஏற்படவும் இது காரணமாக அமைகிறது. நம்மில் பலருக்கு உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், எந்த முயற்சி செய்தும் பலன் இல்லையே என்ற விரக்தி ஏற்படுகிறது. இதற்கு பசிக்குத் தேவையான அளவு மட்டும் உணவை எடுத்துக் கொண்டு, தேவையற்ற கொழுப்பு மற்றும் கலோரி நிறைந்ததான உணவுகளைக் குறைத்தாலே உடல் எடையை குறைக்க முடியும்.

அதிகப்படியான டயட் கட்டுப்பாடு மன அழுத்தத்தை உண்டாக்கி, மீண்டும் எடை அதிகரிக்க வழிவகுக்கும் என்பதால் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை தேர்ந்தெடுப்பதே சிறந்தது.

எடைக் குறைப்பு என்பது ஒரு நீண்ட பயணம். அதில் தோல்வி ஏற்படும் பொழுது முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வதுடன், எடை குறைப்பிற்கான முயற்சிகளில் ஈடுபடவும் வேண்டும்.

முதலில் எடை குறையாமல் இருப்பதற்கான காரணத்தைக் கண்டறியலாம். தைராய்டு, மன அழுத்தம், PCOS, முறையற்ற தூக்கம் காரணமாகக் கூட எடை குறையாமல் இருக்கலாம். எனவே முதலில் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

உடல் எடையைக் குறைக்க உடற்பயிற்சி மற்றும் யோகாசனங்கள் குறிப்பாக சூரிய நமஸ்காரம், பவனமுக்தாசனம் போன்றவை உதவும்.

அதேபோல் தொடர்ந்து ஒரே மாதிரியான உடற்பயிற்சி (cardio) செய்வதை விடுத்து, எடையுள்ள ஸ்லெட் தள்ளுதல், HIIT (High-Intensity Interval Training) போன்ற புதிய பயிற்சிகளை சேர்க்கலாம்.

இடைநிலை உண்ணாவிரதம் (Intermittent Fasting) எனப்படும் 16:8 (பதினாறு மணி நேர விரதம், 8 மணி நேரம் உணவு) போன்ற முறைகள் கொழுப்பை எரிக்க உதவும்.

அதிக சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பதும், நார்ச்சத்து நிறைந்த உணவுகள் மற்றும் புரதச்சத்து மிக்க உணவுகளை அதிகமாக சேர்ப்பதும் அவசியம்.

ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பதில் தூக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. இரவில் 7-8 மணி நேரம் தூங்குபவர்கள், குறைவான மணி நேரம் தூங்குபவர்களை விட உடல் எடையை குறைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பது உடல் பருமன் மற்றும் பிற வாழ்க்கை முறைக் கோளாறுகளை ஏற்படுத்தும். நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பதும், குறுகிய நடைபயிற்சி மேற்கொள்வதும் எடையை கட்டுப்பாட்டில் வைக்கும்.

இதையும் படியுங்கள்:
தண்ணீருக்கு பதில் இதை குடிங்க! அசால்ட்டாக உடல் எடையை குறையும்!
Couple Doing Exercise

ஆல்கஹாலில் கலோரிகள் அதிகம் உள்ளன. ஆனால் அதே சமயம் அதில் ஊட்டச்சத்துக்கள் எதுவும் இல்லை. இது உடலில் தேவையற்ற கலோரிகளை சேர்த்து ஆரோக்கியத்திற்கும் தீமை விளைவிக்கக் கூடியது. எனவே மது அருந்துவதை தவிர்ப்பது மிகவும் அவசியம். அதே போல் தான் புகைப்பிடிக்கும் பழக்கமும். உடல் நலத்திற்கு தீங்கி விளைவிக்கும், இந்த தீய பழக்கத்தை விட்டொழிப்பது நல்லது.

உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பது மிகவும் அவசியம். தேவையான அளவு தண்ணீர் குடிப்பது உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றுவதுடன், வயிறு நிறைந்த உணர்வையும் தருகிறது. இதனால் உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் அதிகமாக சாப்பிடும் பழக்கமும் குறைகிறது.

எண்ணெயில் பொரித்த உணவுகளுக்கு பதிலாக வேக வைத்த அல்லது கிரில் செய்யப்பட்ட உணவுகளை தேர்ந்தெடுக்கலாம். அதேபோல் வெள்ளை அரிசிக்கு பதிலாக கைக்குத்தல் அரிசி மற்றும் சிறு தானியங்களை எடுத்துக்கொள்ளலாம்.

முட்டை, மீன், பருப்பு வகைகள் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகள் வயிறு நிறைந்த உணர்வைத் தருவதுடன் எடை குறைப்பிற்கும் உதவும். நார்ச்சத்து மிகுந்த காய்கறிகள், பழங்கள் மற்றும் சிறுதானியங்கள் பசியை கட்டுப்படுத்தி செரிமானத்திற்கும் உதவுகின்றன.

அதிக கலோரி மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்த்து, முழு தானியங்கள், பழங்கள், சாலடுகள், கொட்டைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்வது உடலுக்கு ஊட்டமளிப்பதுடன் உடல் எடை குறைப்பிற்கும் வழி வகுக்கும்.

இம்மாதிரி சின்ன சின்ன வாழ்க்கை முறை மாற்றங்களை செயல்படுத்துவதன் மூலம் உடல் எடையைக் குறைத்து ஆரோக்கியமாக இருக்கலாம்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

logo
Kalki Online
kalkionline.com