Hives எனப்படும் தோல் அரிப்பின் காரணங்கள் இவைதான்!

Hives  allergy
Hives allergy
Published on

Hives ஹைவ்ஸ், தோல் அரிப்பு அல்லது தடிப்புச்சொரி எனப்படும் இந்த அரிப்பு சருமத்தில் சிவப்பு நிற தடிப்புகளை ஏற்படுத்தும். பொதுவாக இது சில நாட்களிலேயே சரியாகிவிடும். அதிகமான அரிப்பு ஏற்பட்டால் அதிகப்பட்சம் ஆறு வாரங்களுக்குள் சரியாகிவிடும்.

அறிகுறிகள்:

இந்த அரிப்புக்கான அறிகுறிகள் தோல் வீங்குவது போல் காணப்படும். அந்த வீக்கத்தில் சிவப்பாகவோ அல்லது இளஞ்சிவப்பாகவோ சிலசமயம் தோலின் நிறத்திலே காணப்படும். சில சமயம் அரிப்பு ஏற்பட்ட இடத்தின் தோல், வெளிறியது போல் காணப்படும்.

காரணங்கள்:

சிலருக்கு இது அலர்ஜி காரணமாக ஏற்படுகிறது. அதாவது அவர்களுக்கு ஒத்துக்கொள்ளாத ஒரு உணவை எடுத்துக்கொண்டாலோ அல்லது ஒத்துக்கொள்ளாத காலநிலை காரணமாகவோ இதுபோன்ற அலர்ஜி ஏற்படும். சூர்ய ஒளி, சூடு மற்றும் பனியும் இதற்கு காரணம். மேலும் பூச்சி கடிகளும் தோல் அரிப்பு உருவாக காரணமாகிறது. அதேபோல் சிலருக்கு மூச்சு தூசிகள், பூக்களின் மகரந்த தூள்கள், வீட்டு செல்லப்பிராணிகளின் முடிகள் போன்றவை சுவாசத்துடன் இணைந்து உள்ளே செல்லும்போது தோல் அலர்ஜி ஏற்படும். இன்னும் சிலருடையே கையை அழுத்தமாக இறுக்கிப் பிடித்தால் அவர்களுக்கும் இந்த அலர்ஜி ஏற்படும்.

கண்டறியப்படும் வழிகள்:

இந்த அரிப்பு நோயைக் கண்டறிவதற்கு தனியாக பரிசோதனை எதுவும் இல்லை. ரத்தத்தின் மூலமே கண்டறியப்படும். ஆதலால், ரத்த பரிசோதனை செய்துபார்க்கலாம். மருத்துவர்கள் உங்கள் சமீபத்திய உணவுமுறைகள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றிலிருந்து கண்டறிந்துக்கொள்வார்கள்.

இதற்கு உங்கள் உணவுமுறைகளில் எது ஒத்துக்கொள்ளவில்லை என்பதைக் கண்டறிந்துக்கொள்வது அவசியம். ஏனெனில் இந்த தோல் அரிப்பு வந்தவுடன் உங்களுக்கு ஒத்துக்கொள்ளாத உணவுகளைத் தவிர்ப்பது முக்கியம். அதேபோல் அது எந்த வகையான அரிப்பு என்று ஆராய்வதில் நேரம் கழிக்காமல் உடனே மருத்துவரை அனுகுவது நல்லது.

முதலில் ஒத்துக்கொள்ளாத உணவுமுறைகளிலிருந்தும் காலநிலைகளிலிருந்தும் விலகியே இருக்க வேண்டும். மேலும் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள், புளித்த உணவுகள், உப்பு அதிகம் இருக்கும் உணவுகள், காரமான உணவுகள், மது போன்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக குளிர் சார்ந்த பானங்கள் குடிப்பதை குறைப்பது நல்லது.

சிகிச்சை:

நெல்லிக்காய், வேம்பு, மஞ்சள் சேர்த்த உணவுகளை எடுத்துக்கொள்வது, அரிப்புக் குறைவதற்கு காரணமாக அமையும்.

சுடு நீரில் வேம்பு சேர்த்து குளிப்பதால் தோல் அரிப்பு படிப்படியாக அகலும்.

சருமத்தில் ஏற்படும் இந்த தோல் அரிப்பு பிரச்சனைகள் மிகவும் சாதாரணமே. இந்த அரிப்பு ஆறு மாதக் காலம் இருப்பதே அதிகம். ஆனால் அரிப்பு ஏற்பட்ட உடனே மருத்துவரிடம் ஆலோசனைக் கேட்பது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com