இந்த பழங்களை தோலுடன் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?

fruits
fruits
Published on

ழங்களை சாப்பிடுவதால் நமக்கு நிறைய சத்துக்கள் கிடைக்கின்றன என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். ஆனால், சில பழங்களை தோலுடன் சாப்பிடும் போது அதனுடைய முழுமையான சத்துக்களும், வைட்டமின், ஆன்டி ஆக்ஸிடென்ட், நார்ச்சத்து போன்றவை நமக்கு அதிகம் கிடைக்கிறது. இதனால் செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவை மேம்படுவதால் ஆரோக்கியமாக வாழலாம். அத்தகைய பழங்கள் என்னென்ன என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

1.கொய்யாப்பழம் (Guava)

அதிக ஊட்டச்சத்துக் கொண்ட கொய்யாப்பழத்தை தோலுடன் சாப்பிடுவதால், நார்ச்சத்து, வைட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் கிடைக்கிறது.

2. மாம்பழம் (Mango)

மாம்பழத்தில் 1.7 கிராம் நார்ச்சத்தும் 36 சதவீதம் வைட்டமின் சி உள்ளது. இதை தோலுடன் சாப்பிடுவதால், செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி, சரும ஆரோக்கியம் மேம்படுகிறது.

3. பீச் பழம் (Peach)

பீச் பழத்தை தோலோடு சாப்பிடுவதால் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, ஆன்டி ஆக்ஸிடென்ட் கிடைக்கிறது. 100 கிராம் பீச் பழத்தில் 2 முதல் 3 கிராம் வரை நார்ச்சத்து உள்ளது. 10 முதல் 15 சதவீதம் வைட்டமின் சி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
உணவு அருந்துவதற்கு முன் வாழை இலையில் தண்ணீர் தெளிப்பதன் காரணம் தெரியுமா?
fruits

4. ப்ளம்ஸ் (Plums)

ப்ளம்ஸ் பழத்தில் உள்ள தோலில் அதிக அளவிலான ஆன்டி ஆக்ஸிடென்ட் மற்றும் Anthocyanins உள்ளது. இது உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் நோய்த்தொற்றை சரிசெய்து செல்கள் சேதமடையாமல் ஆரோக்கியமாக பாதுகாக்க உதவுகிறது.

5. திராட்சை (Grapes)

திராட்சை பழத்தின் தோலில் 1.4 கிராம் நார்ச்சத்து உள்ளது. நம் உடலுக்கு தினமும் தேவைப்படும் வைட்டமின் சி யில் 20 சதவீதம் இந்த பழத்தை எடுத்துக்கொள்வதால் கிடைத்துவிடும். மேலும் இதில் Resveratrol இருப்பதால், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி நோய்த்தொற்று, வீக்கம் ஆகியவற்றை குணமாக்க உதவுகிறது.

6. ஆப்பிள் (Apple)

ஆப்பிளின் தோலில் ஆன்டி ஆக்ஸிடென்ட், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் உள்ளது. இதில் 2.4 கிராம் நார்ச்சத்து, 5 முதல் 7 சதவீதம் வைட்டமின் சி உள்ளது. இதை தினமும் எடுத்துக்கொள்வதால் செரிமானம், இதய ஆரோக்கியம், உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது.

இதையும் படியுங்கள்:
உட்கார்ந்திருக்கும் போது காலாட்டும் பழக்கம் உங்களுக்கு இருக்கா? போச்சு!
fruits

7. பேரிக்காய் (Pear)

பேரிக்காயில் அதிகமாக வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து உள்ளது. இதில் 3.1 கிராம் நார்ச்சத்தும், 5 முதல் 6 சதவீதம் வைட்டமின் சி உள்ளது. பேரிக்காயை தோலுடன் சாப்பிடுவதால், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை ஆரோக்கியமாக வைக்கவும் உதவுகிறது.

இந்த பழங்களில் உங்களுக்கு எந்த பழத்தை தோலுடன் சாப்பிட பிடிக்கும்? என்று சொல்லுங்க பார்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com