உடல் எடை குறைவாக இருப்பதன் காரணங்கள் என்ன?

உடல் எடை குறைவாக இருப்பதன் காரணங்கள் என்ன?

டல் எடை மிகப் பருமனாக இருக்கும் மக்கள் தங்கள் உடல் எடையைக் குறைக்கப் பல மருத்துவர்களையும் உடற்பயிற்சி மையங்களையும், நியூட்ரிஷன்களையும் அணுகுகிறார்கள். அதற்கு பல ஆயிரங்கள் செலவிடவும் செய்கிறார்கள். இப்படிப்பட்ட மக்கள் ஒரு பக்கம் இருக்க, எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்கவில்லை என்று உடல் எடையை அதிகரிக்க வகை வகையான உணவுகளையும், மருத்துவர்களையும் சென்று பல ஆயிரங்கள் செலவிடும் மக்களும் உள்ளனர். அப்படிப்பட்ட மக்களுக்கு, உடல் எடை குறைவாக இருப்பதற்கான சில முக்கிய காரணங்களைப்  பார்ப்போம்.

உயர் வளர்சிதை மாற்றம் – சிலர் ஒல்லியானவர்களாக இருப்பார்கள். அவர்களின் வளர்சிதை மாற்றம் மிகவும் அதிகமாக இருப்பதால், அதிக கலோரிகள் நிறைந்த உணவுகளைச் சாப்பிட்டாலும், எடை அதிகரிக்கும் போக்கு குறைவாகவே இருக்கும்.

குடும்ப வரலாறு- சிலர் இயற்கையாகவே ஒல்லியானவர் களாகவும் குறைந்த, பிஎம்ஐ கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அதற்குக் காரணம் அவர்களுடைய மரபணு.

அதிக உடல் செயல்பாடு – வாக்கிங், ஜாக்கிங் அல்லது நீச்சல் போன்ற எந்த வகையான விளையாட்டுகளை விளையாடும் வீரர்களாக இருக்கட்டும், சாதாரண மக்களாக இருக்கட்டும் அவர்களின் உடல் எடை குறைவாகவே இருக்கும். இதற்குக் காரணம் அவர்கள் உண்பதை விட அதிகமாகக் கலோரிகளை எரிக்கச் செய்கிறார்கள். உடல் பருமனாக இருப்பவர்கள் உடல் எடையைக் குறைக்க இந்த முறைகளை எல்லாம் பயன்படுத்திப் பார்ப்பார்கள்.

உடல் நல பாதிப்பு – ஒரு நபருக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நோய்கள் இருந்தால், அவர் தற்காலிக எடை இழப்பை அனுபவிக்கலாம். ஹைப்பர் தைராய்டிசம், புற்றுநோய், நீரிழிவு மற்றும் காசநோய் ஆகியவை இத்தகைய சுகாதார நிலைமைகளுக்கு சில எடுத்துக்காட்டுகள்.

மனச்சோர்வு – மனச்சோர்வு உள்ளவர்கள் கடுமையான பசியின்மையை அனுபவிப்பார்கள். இதனால் கணிசமான அளவு எடையை மிக விரைவாக இழக்க நேரிடும். அத்தகையவர்களுக்கு விரைவில் மருத்துவ உதவி தேவை.

மன அழுத்தம் – குடும்ப ரீதியாகவும், வேலை ரீதியாகவும்,பிற சூழல்களாலும் வரும் மன அழுத்தத்தில் வாழும் ஒரு நபர் பொதுவாக தங்கள் எண்ணங்களில் மிகவும் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பார். ஆரோக்கியமற்று இருப்பார். இதனால் அவர்களின் எடை இழக்க நேரிடும்.

உணவுக் கோளாறுகள் – சரியான அளவு உணவு உண்ணாமல் இருப்பது, பசியின்மை அல்லது எவ்வளவு சாப்பிட்டாலும் செரித்து விடும் தன்மை உடையவர்கள். உணவு ஒவ்வாமை போன்ற காரணங்களாலும் உடல் எடை என்பது குறைவாக இருக்கும்.

உடல் எடையை அதிகரிக்க விரும்புவார்கள் இந்த காரணங்களில் ஏதேனும் ஒன்று உங்களுக்கு உள்ளதா என்பதைக் கண்டறிந்து பின் உடல் எடையை அதிகரிப்பதற்கான வழியைத் தேடவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com