தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக விரல் நுனியால் நாம் அனைத்து விஷயங்களையும் சாதித்துக் கொள்ள முடிகிறது. நெட் கனெக்ஷனுடன் கூடிய நம் போனிலிருந்து 48 மணி நேரம் நெட் கனெக்ஷனை கட் பண்ணி விட்டால், நாம் அனுபவிக்கக் கூடிய 10 வித நன்மைகள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1. போனில் வரும், பலவகையான நிகழ்வுகள், செய்திகள், அப்டேட்கள் பற்றின அறிவிப்புகளைப் (notification) பார்க்காமல் இருப்பது ஸ்ட்ரெஸ்ஸையும் கவலைகளையும் குறைத்து நம்மை அமைதியாய் இருக்க உதவும். பிறரது வாழ்க்கை முறையைப் பார்த்து நம் வாழ்க்கையுடன் ஒப்பிட்டு வருந்தும் வாய்ப்பு இருக்காது.
2. ஆன்லைன் வலைத்தளத்தின் தகவல்கள் மற்றும் சோசியல் மீடியாக்கள் எதிர்மறை உணர்வுகளை அதிகரிக்கச் செய்யும். இதிலிருந்து விலகியிருத்தல், நம்மை வாழ்க்கையின் நேர்மறையான அம்சங்களில் கவனம் செலுத்த உதவும்.
3. படுக்கச் செல்லும் முன் அதிக நேரத்தை கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் முன் செலவிடுதல் நம் உடலின் சர்காடியன் ரிதத்தை (Circadian rhythm) தொந்தரவு செய்து தூக்கத்தின் தன்மையை குறையச் செய்யும். எனவே இன்டர்நெட் உபயோகம் இல்லாமல் சீக்கிரமே உறங்கச் செல்வது , ஆழ்ந்த அமைதியான உறக்கம் பெற உதவும்.
4. இன்டர்நெட் உபயோகிக்கையில் ஒரே ஸ்கிரீனில் ஒன்றுக்கு மேற்பட்ட ஃபைல்களை திறந்துவைத்துக் கொண்டு பல வேலைகளை(multi task) ஒரே நேரத்தில் செய்வது வழக்கம். நெட் இல்லையெனில் ஒரு வேலையில் மட்டும் கவனம் செலுத்தி அந்த வேலையை சிறப்பாகவும் சீக்கிரமாகவும் செய்து முடிக்கலாம்.
5. இன்டர்நெட் இல்லையென்றால் நம் மூளைக்கு நிறைய ஓய்வு கிடைக்கும். சோர்வு நீங்கும். பிறகு நாம் புத்துணர்ச்சி பெற்று அதிக கவனத்துடன் அடுத்த வேலையைப் பார்க்க முடியும்.
6. ஆன்லைனில் அதிக நேரம் செலவிடுவது தவிர்க்கப்படும்போது, உடற்பயிற்சி செய்யவும், நடைப்பயிற்சி செல்லவும் நமக்கு நேரம் கிடைக்கும். இதனால் நம் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும்.
7. ஆன் லைன் ஈர்ப்பிலிருந்து விலகி வரும்போது, நம் படைப்பாற்றல் வெளிவரும். மனதிற்குள் புதுப் புது ஐடியாக்களும் தீர்வுகளும் தோன்றும். ஏற்கெனவே திட்டமிடப்பட்டு கைவசம் வைத்துள்ள வேலையை (Project) சிறப்பாகவும் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாகவுமே செய்து முடிக்க முடியும்.
8. இன்டர்நெட்டிலிருந்து வெளிவருவது நம்மை, நாம் இழந்துவிட்ட உறவுகளுக்குள் இழுத்துச் சென்று உண்மையான சந்தோஷத்தை மீட்டெடுத்துத் தர உதவும்.
9. சோசியல் மீடியாவிலிருந்து விலகுவது, நம் தோற்றத்தை மெருகேற்றிக் காட்ட வேண்டிய அழுத்தத்திலிருந்து விடுபடவும், நம் தனிப்பட்ட இலக்கை அடைய நாம் கவனமுடன் செயல்பட வேண்டிய அவசியத்தை நமக்கு உணர்த்தவும் உதவும்.
10. நேர மேலாண்மையின் அவசியத்தை அறியவும், முன்னுரிமை கொடுத்து செய்ய வேண்டிய வேலைகளில் கவனம் செலுத்தி அவற்றை சிறப்பாக செய்து முடிக்கவும், இன்டர்நெட்டிற்கு இது போன்று 48 மணி நேர இடைவெளி அவ்வப்போது கொடுப்பது அத்யாவசியம் என்றே தோன்றுகிறது.