ஊட்டச்சத்துக் குறைபாடுக்கு என்ன காரணம்?

தேசிய ஊட்டச் சத்து வாரம் – (செப்டம்பர் 01 – செப்டம்பர் 07)
ஊட்டச்சத்துக் குறைபாடுக்கு என்ன காரணம்?
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

ட்டச்சத்துக் குறைபாடுள்ளப் பெண் குழந்தைகளை இரு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று வறுமை நிலையில் இருப்பவர்கள். உண்ண உணவு இல்லாமல் சரியான ஊட்டச்சத்துள்ள உணவு கிடைக்காமல் ஒல்லியாக இருக்கும் பெண் குழந்தைகள். மற்றொன்று, பணம் இருந்தும் தேவையானச் சத்தான உணவைச் சாப்பிட முடிந்தும் சாப்பிடாமல் இருந்து உடலைக் கெடுத்துக்கொள்வது. வறுமை நிலையில் இருப்பவர்கள் விலை மதிப்புள்ள சத்தானப் பொருட்களைச் சாப்பிட்டுத்தான் உடல் நலனைக் காக்க வேண்டும் என்பதில்லை. கிடைக்கும் சிறிய வருமானத்திலும் பசிக்காக சிப்ஸ், பிஸ்கட், டீ என வயிற்றை நிறப்பாமல் தேவையான சத்தான மலிவு விலையில் கிடைக்கும் பொருட்கள் எத்தனையோ உண்டு, அதைச் சாப்பிட்டுக் கொள்ளலாம். மற்றவர்கள் எது உடலுக்கு ஆரோக்கியமானது என்பதை அறிந்து சாப்பிட வேண்டும். தேவையற்ற தின்பண்டங்களைத் தவிர்த்தாலே போதும். அதேபோல் அதிக அளவு சர்க்கரை/இனிப்பு, மைதா சேர்த்து உடல் எடையைக் கூட்டும் முயற்சியில் ஈடுபடுவது தவறு. அது தேவையில்லாத கொழுப்புச் சத்தினை அதிகரித்து உடல் உபாதைகளை ஏற்படுத்தும். அதற்குப் பதிலாக சத்தான உணவைச் சாப்பிட்டு உடல் தசை, எலும்புகளை வலுப்படுத்துவது என உடல் எடையை / ஆரோக்கியத்தைக் கூட்ட வேண்டும்.

logo
Kalki Online
kalkionline.com