சாப்பிட்ட உடனேயே மலம் கழிக்கும் பிரச்சனை பலருக்கு அவமானமாகவும், சங்கடமாகவும் தோன்றும் ஒரு உடல்நலப் பிரச்சனை. இந்தப் பிரச்சனை பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். இது சிலருக்கு தற்காலிகமாகவோ அல்லது நீண்ட காலமாகவோ நீடிக்கலாம். இந்தப் பதிவில் சாப்பிட்ட உடன் மலம் கழிக்கும் பிரச்சினை ஏன் ஏற்படுகிறது, அதற்கான தீர்வுகள் என்ன? என்பதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
காரணங்கள்:
சில உணவுகளுக்கு ஒவ்வாமை இருப்பவர்களுக்கு அந்த உணவை சாப்பிட்ட உடனேயே வயிற்றுப்போக்கு ஏற்படலாம். குறிப்பாக பால், முட்டை, மீன், ஸ்ட்ராபெரி, நட்ஸ் போன்ற உணவுகளுக்கு ஒவ்வாமை பாதிப்பு ஏற்படும்.
பாக்டீரியா, வைரஸ் அல்லது பூஞ்சை தொற்று காரணமாகவும் வயிற்றுப்போக்கு ஏற்படலாம். இது பொதுவாக குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகளுடன் இருக்கும்.
குடலில் ஏற்படும் புண்கள், அலர்ஜி காரணமாக ரத்தக் கசிவு ஏற்பட்டு வயிற்றுப்போக்கு வழிவகுக்கும். மேலும், சிலருக்கு நீண்ட நாட்கள் மருந்து உட்கொள்வதன் பக்கவிளைவாக வயிற்றுப்போக்கு உண்டாகும்.
பார்க்கின்சன் நோய், தைராய்டு பிரச்சனை போன்ற நரம்பு மண்டலகா கோளாறுகளால் சாப்பிட்டவுடன் வயிற்றுப்போக்கு ஏற்படும் பிரச்சனை இருக்கும். சில வகையான குடல் நோய்கள் காரணமாகவும் இந்த பாதிப்பு ஏற்படலாம்.
மாசுபட்ட உணவை சாப்பிடுவதால் ஃபுட் பாய்சன் பாதிப்பு ஏற்பட்டு, உடனடியாக வயிற்றுப்போக்கை உண்டாக்கும்.
தீர்வுகள்:
சாப்பிட்டவுடன் உண்டாகும் வயிற்றுப்போக்கினால் ஏற்படும் நீரிழப்பை ஈடு செய்ய போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். வயிற்றுப்போக்கினால் உப்பு மற்றும் பொட்டாசியம் இழப்பு ஏற்படுவதால் இவை நிறைந்த உணவுகளை அதிகமாக உண்ண வேண்டும்.
பழங்கள், காய்கறிகள் போன்ற அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது செரிமானத்தை மேம்படுத்த உதவும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், காபி, ஆல்கஹால் போன்றவற்றை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இவை வயிற்றுப்போக்கை அதிகரிக்கக்கூடும்.
நீண்ட காலமாக இந்தப் பிரச்சனை உங்களுக்குத் தொடர்ந்தால், அதனுடன் வேறு ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
மேலே குறிப்பிட்ட பல காரணங்களால் சாப்பிட்டு உடன் மலம் கழிக்கும் பிரச்சனை ஏற்படலாம். இந்தப் பிரச்சனையை தீவிரமாக எடுத்துக்கொண்டு உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. சரியான சிகிச்சையை மேற்கொண்டால் இந்த பிரச்சனையில் இருந்து எளிதாக விடுபடலாம். ஆரோக்கியமான உணவு பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் இந்த பிரச்சனையை தடுக்க உதவும்.