Food - Sleep
Food - Sleep

ஒரு நாளில் நாம் உண்ணும் உணவுக்கும் நமது தூக்க முறைமைக்கும் என்ன சம்பந்தம்?

Published on

ஒரு நல்ல, இரவு தூக்கம் என்பது ஒரு வசதியான படுக்கை அல்லது அமைதியான அறையை வைத்திருப்பது மட்டுமல்ல, நீங்கள் நாள் முழுவதும் உட்கொள்ளும் உணவுகள் அதில் முக்கிய பங்கு வகிக்கிறது. காலை முதல் இரவு வரை நீங்கள் கவனமுடன் சாப்பிடுவதன் மூலம், எப்படி உங்கள் தூக்கத்தின் தரத்தை அதிகரிக்கலாம் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

காலை உணவு: ஆற்றலின் தொடக்கம்:

கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் (Proteins) மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளின் கலவையை உள்ளடக்கிய சீரான காலை உணவோடு உங்கள் நாளை தொடங்குங்கள். முட்டை, தயிர் அல்லது ஓட்ஸ் போன்ற முழு தானியங்களைத் தேர்வு செய்து உண்ணுங்கள். இது உங்களுக்கு தேவையான ஆற்றலை கொஞ்சம் கொஞ்சமாக தேவைப்படும் நேரங்களில் வெளியிடும். அதோடு ஒரு துண்டு பழத்தை சேர்ப்பதன் மூலம் கூடுதல் வைட்டமின் ஊக்கத்தை பெறலாம். குறிப்பாக சர்க்கரை நிறைந்த தானியங்கள் மற்றும் பலகாரங்களை தவிர்க்க வேண்டும், காரணம் இது காலை வேளையில் உங்களுக்கு ஆற்றல் கிடைப்பதை தடுக்கும் மற்றும் இதுவே உங்கள் தூக்க-விழிப்பு சுழற்சியை பாதிக்கும் தொடக்க புள்ளியாக அமையும்.

மதிய உணவை இலகுவாகவும் சத்தானதாகவும் வைத்திருங்கள்:

மதிய உணவிற்கு, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள்(minerals) நிறைந்த உணவுகளைத் தேர்ந்தெடுக்கவும். ஆனால் அதற்கு ஓர் அளவு உண்டு. சிக்கன் போன்ற கம்மியான புரதங்களை(Protein) சேர்த்து சாலட்(Salad) செய்து, அதனுடன் நிறைய காய்கறிகள் உள்ளடக்கிய உணவு, உங்களை மதிய நேரங்களில் மந்தமாக வைக்காமல் சுறுசுறுப்பாக இருக்க செய்யும். பின் அஜீரணத்திற்கு வழிவகுக்கும் மற்றும் பின்னர் உங்கள் தூக்க சுழற்சியை சீர்குலைக்கும் அதிக அளவிலான உணவு உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.

இதையும் படியுங்கள்:
தூக்கம் ஏன் ஏற்படுகிறது தெரியுமா?
Food - Sleep

மதியம்: ஆற்றலைத் தக்க வைக்ககூடிய ஆரோக்கியமான தின்பண்டங்கள்:

மதியம், உங்கள் ஆற்றலை நிலையாக வைத்திருக்கும் தின்பண்டங்களை தேர்ந்தெடுங்கள். அதற்கு நட்ஸ், பயிர் வகைகள் மற்றும் ஒரு துண்டு பழம் ஆகியவை சிறந்த தேர்வுக்களாகும். காரணம் அவை தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன மற்றும் உங்கள் இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கின்றன. பிற்பகல் நேரங்களில் ஆற்றல் சரிவைத் தடுக்கின்றன. இதனால் உங்கள் துக்கம் நேரம் இரவு, சரியாக பராமரிக்க படும்.

படுக்கைக்கு முன்:

இரவு உணவு இலகுவாக இருக்க வேண்டும் மற்றும் படுக்கைக்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு முன் சாப்பிட்டு சீக்கிரம் ஜீரணம் ஆகும் படி இருக்க வேண்டும். படுக்கைக்கு முன், கனமான அல்லது காரமான உணவுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும், ஏனெனில் அவை அசௌகரியத்தை ஏற்படுத்தும் மற்றும் உங்கள் தூக்கத்தை முற்றிலுமாக சீர்குலைக்கும்.

இதையும் படியுங்கள்:
3-2-1 Rule: இந்த விதியைப் பின்பற்றினால் விரைவாக தூக்கம் வரும்! 
Food - Sleep

இப்படி நன்கு திட்டமிடப்பட்ட உணவு உட்கொள்ளும் போது உங்கள் தூக்கத்தின் தரத்தை ஒவ்வொரு நாளும் கணிசமாக மேம்படுத்தும். சரியான நேரத்தில் சீரான உணவு மற்றும் ஆரோக்கியமான பலகாரங்களை உண்பதன் மூலம், நீங்கள் ஒரு நாளுக்கு தேவையான சரியான ஆற்றலை பராமரிக்கலாம். உங்கள் உடலின் இயற்கையான தூக்கம்-விழிப்பு சுழற்சியும் ஆதரிக்கலாம். எனவே நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் மற்றும் எப்போது சாப்பிடுகிறீர்கள் என்பதில் முழு கவனம் செலுத்துவது உங்கள் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துவதற்கான ஓர் சக்திவாய்ந்த வழியாகும்.

logo
Kalki Online
kalkionline.com