தினசரி உடலுக்குத் தேவைப்படும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் என்னென்ன தெரியுமா? 

what essential nutrients the body needs on a daily basis?
what essential nutrients the body needs on a daily basis?
Published on

நமது உடல் ஒரு அற்புதமான இயந்திரம் போன்றது. இது சிறந்த முறையில் செயல்பட பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றன. இந்த ஊட்டச்சத்துக்கள், நமது உடல் முக்கிய செயல்முறைகளை மேற்கொள்ளவும், ஆரோக்கியத்தை பராமரிக்கவும், நோய்களைத் தடுக்கவும் உதவுகின்றன. நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை முறையாக பராமரிக்க விரும்பும் நபராக இருந்தால் இந்த சக்தி வாய்ந்த அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைப் பற்றி புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது. இந்தப் பதிவில் உங்கள் உடலுக்கு தினசரி தேவைப்படும் முக்கிய ஊட்டச்சத்துக்கள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம். 

புரதங்கள்: புரதங்கள் உடலில் மிக முக்கிய ஊட்டச்சத்து. திசுக்களின் வளர்ச்சி, பழுது பார்ப்பு மற்றும் பராமரிப்புக்கு அவை அவசியம். எனவே, உங்கள் உணவில் புரதங்கள் அதிகம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். கோழி, மீன், முட்டை பருப்பு வகைகள் மற்றும் நட்ஸ் ஆகியவற்றில் போதுமான அளவு புரதச்சத்து இருப்பதால், அவற்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். 

கார்போஹைட்ரேட்: கார்போஹைட்ரேட்கள் நமது உடலுக்கான ஆற்றலின் முக்கிய ஊட்டச்சத்தாகும். முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் பீன்ஸ் ஆகியவற்றில், உங்களுக்கு நாள் முழுவதும் தேவைப்படும் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. இது உங்கள் உடலுக்கு நீடித்த ஆற்றலை வழங்கும். 

ஆரோக்கிய கொழுப்புகள்: வெண்ணெய், நட்ஸ், விதைகள் மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்றவற்றில் நிறைந்துள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் மூளையின் செயல்பாடு, ஹார்மோன் உற்பத்தி மற்றும் கொழுப்பில் கரையக்கூடிய விட்டமின்களை உறிஞ்சுவதற்கு மிகவும் முக்கியம். எனவே, இந்த ஆரோக்கியமான கொழுப்பை உங்கள் உணவில் மிதமாக சேர்த்துக் கொள்ளுங்கள். 

வைட்டமின்கள்: நம் உடலின் பல்வேறு விதமான செயல்பாடுகளுக்கு பல விட்டமின்கள் அவசியம். வைட்டமின் சி நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது, வைட்டமின் டி எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இந்த இரண்டு விட்டமின்களும் தினசரி உங்களுக்கு கிடைக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். 

தாதுக்கள்: கால்சியம் இரும்பு மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் எலும்புகளை ஆரோக்கியமாக பராமரிக்கவும், ரத்தத்தில் ஆக்சிஜனை எடுத்துச் செல்லவும், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் மிகவும் முக்கியமானவை. உங்கள் தினசரி கனிம தேவைகளை பூர்த்தி செய்ய கீரைகள், பால் பொருட்கள் மற்றும் லீன் புரதங்களை உணவாக எடுத்துக்கொள்வது நல்லது. 

இதையும் படியுங்கள்:
அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுகளை நாம் ஏன் சாப்பிட வேண்டும்?.. வாங்க தெரிஞ்சுக்கலாம்!
what essential nutrients the body needs on a daily basis?

நார்ச்சத்து: நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவி மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது. இது எதை ஆரம்பித்ததையும், ரத்த சர்க்கரை அளவையும் ஒழுங்கு படுத்துகிறது. எனவே, தினசரி நார்ச்சத்துக்கள் நிரம்பிய பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகளை உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். 

தண்ணீர்: தண்ணீர் ஒரு ஊட்டச்சத்து இல்லை என்றாலும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் தண்ணீர் அவசியம். இது ஊட்டச்சத்துக்களை கொண்டு செல்லவும், உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்தவும் நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது. நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம், உடலை நீரேற்றத்துடன் வைத்திருந்து ஆரோக்கியம் காக்கலாம். 

மேலே குறிப்பிட்ட எல்லா வகையான ஊட்டச்சத்துக்களும் தினசரி உங்களுக்கு கிடைக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இவற்றை பூர்த்தி செய்வதற்கு சில சப்ளிமெண்ட்ஸ் உங்களுக்கு உதவும் என்றாலும், முடிந்தவரை உணவுகளில் இருந்து இத்தகைய ஊட்டச்சத்துக்களை பெறுவது நல்லது. இதுகுறித்து உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருப்பின், ஒரு சுகாதார நிபுணரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com