வேகமாக உடல் எடையைக் கூட்டணுமா? அப்போ இந்த உணவுகளை சாப்பிடுங்க! 

Fast Weight Gain Foods.
Fast Weight Gain Foods.

நம்மில் பலர் உடல் எடையைக் குறைப்பது தான் சவாலானது என நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் சிலருக்கு உடல் எடையைக் கூட்டுவதும் சவாலானதாகவே இருக்கும். உடல் எடையை வேகமாக அதிகரிக்க அதிக கலோரிகள் உள்ள உணவுகளை நாம் எடுத்துக் கொண்டாலே போதும். ஆனால் இப்படி சாப்பிடும்போது கொழுப்பு அதிகரிக்காமல் தசை அதிகரிக்கச் செய்ய வேண்டும். இப்படி வேகமாக உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் உணவுகள் என்னென்ன என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். 

வாழைப்பழம்: அனைவருக்கும் எளிதாகவும் குறைந்த விலையிலும் கிடைக்கும் உடல் எடையை கூட்ட உதவும் சிறந்த உணவு எதுவென்றால், அது வாழைப்பழம் தான். இதில் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, பொட்டாசியம், புரதம், விட்டமின் சி, ஏ போன்ற அனைத்தும் அடங்கியுள்ளது. சராசரி அளவில் இருக்கும் ஒரு வாழைப்பழத்தில் சுமார் 100 கலோரி ஆற்றல் அடங்கியுள்ளது. அதில் 27 கிராம் கார்போஹைட்ரேட் ஆகும். இது உடலுக்குத் தேவையான ஆற்றலை விரைவாக வழங்குகிறது. எனவே தினசரி காலையில் வாழைப்பழம் உட்கொள்வது உடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும். 

அரிசி: உடலில் அதிக கலோரிகள் சேர்க்க விரும்புபவர்களுக்கு அரிசி சிறந்த தேர்வாகும். வெறும் 10 கிராம் அரிசியில் 130 கலோரி ஆற்றல் நிறைந்துள்ளது. கார்போஹைட்ரேட்டின் சிறந்த மூலமாக அரிசி உள்ளது. எனவே தினசரி வெள்ளை அரிசி உட்கொண்டு வந்தால் அது உடல் எடையை கணிசமாக அதிகரிக்க உதவும். 

பால்: பாலை பயன்படுத்தி ஒருவர் உடல் எடையைக் குறைக்கவும் முடியும் கூட்டவும் முடியும். உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்கள் கொழுப்பு அதிகம் நிறைந்த பாலை எடுத்துக் கொள்ளலாம். இதில் நிறைந்துள்ள உடலுக்குத் தேவையான புரதங்கள், தாதுக்கள், ஆரோக்கிய கொழுப்புகள் உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது. ஒரு கப் கொழுப்பு நிறைந்த பாலில் 150 கலோரி ஆற்றலும், 8 கிராம் கொழுப்பும், 8 கிராம் புரதமும் உள்ளது. 

பீனட் பட்டர்: உடல் எடையை அதிகரிக்கும் உணவுகளில் பீனட் பட்டர் சிறந்தது. இரண்டு ஸ்பூன் பீனட் பட்டரில், 200 கலோரி ஆற்றல், 15 கிராம் கொழுப்பு, 7 கிராம் புரதம் மற்றும் 7 கிராம் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. வேர்க்கடலை பயன்படுத்தி செய்யப்படும் பீனட் பட்டரில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் உள்ளது. ஆனால் வேர்க்கடலை ஒவ்வாமை இருப்பவர்கள் இதைத் தவிர்க்க வேண்டும். வீட்டிலேயே ஆரோக்கியமாக பீனட் பட்டர் எப்படி செய்யலாம்? என ஏற்கனவே நமது தளத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளோம். அதைப் பயன்படுத்தி வீட்டிலேயே ஆரோக்கியமாக செய்து உடல் எடையைக் கூட்டலாம்.

இதையும் படியுங்கள்:
வீட்டிலேயே Peanut Butter செய்யலாம்!
Fast Weight Gain Foods.

சீஸ்: சீஸ் என்பது அதிக கலோரி நிறைந்த பால் பொருளாகும். குறிப்பாக இதில் அதிக அளவு புரதம் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. ஒல்லியாக இருப்பவர் தனது உணவில் சீஸ் சேர்த்துக் கொண்டால் எலும்புகளை வலுப்படுத்தி விரைவாக உடல் எடையைக் கூட்ட முடியும். 

இப்படி உடல் எடையை கூட்டுவதற்கு பல உணவுகள் உள்ளது. ஆனால் மேலே குறிப்பிட்டுள்ள உணவுகளை நீங்கள் தொடர்ந்து சாப்பிடும்போது, உங்களின் உடல் எடையை வேகமாகக் கூட்டலாம். அத்துடன் நீங்கள் எந்த உணவு முறையை பின்பற்றுவதற்கு முன்பும், அதற்கான வல்லுனர்களிடம் தகுந்த ஆலோசனையைப் பெற்று பின்பற்றுவது நல்லது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com