மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா? ஜாக்கிரதை! 

foods
What foods should not be reheated?

நம்மில் பலருக்கு மதியம் மீதமான உணவுகளை இரவு உணவாகவோ அல்லது மறுநாள் காலையிலோ சூடுபடுத்தி சாப்பிடும் பழக்கம் உள்ளது. சமைத்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவது நேரத்தை மிச்சப்படுத்தும் ஒரு வசதியான வழி என்றாலும், எல்லா உணவுகளையும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல. சில உணவுகளை மீண்டும் சூடுபடுத்தினால் அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அழிந்து தீங்கு விளைவிக்கும் சேர்மங்கள் உருவாகலாம். அந்த வகையில் இப்பதிவில் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம். 

மீண்டும் சூடுபடுத்தக்கூடாத உணவுகள்: 

  • முட்டை: முட்டைகளை ஒருபோதும் மீண்டும் சூடுபடுத்தக் கூடாது. சமைத்த முட்டையை மீண்டும் சூடு படுத்தும்போது அதில் உள்ள புரதச்சத்து சிதைந்து செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். 

  • அரிசி: ஒருமுறை வேகவைத்த அரிசியை மீண்டும் சூடு படுத்தும்போது அதில் உள்ள நைட்ரேட்டுகள் நைட்ரைட்டுகளாக மாறும். இது புற்றுநோய் ஏற்படுத்தும் அபாயத்தை அதிகரிக்கும். 

  • உருளைக்கிழங்கு: வேகவைத்த உருளைக்கிழங்கை மீண்டும் சூடு படுத்தும்போது அதில் உள்ள பாசிலஸ் செரியஸ் என்கிற பாக்டீரியாக்கள் பெருகும். இந்த பாக்டீரியாக்கள் உணவு விஷத்தன்மைக்கு காரணமாகும். 

  • பச்சை காய்கறிகள்: பச்சை காய்கறிகளை மீண்டும் சூடு படுத்தும்போது அதில் உள்ள விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் முற்றிலுமாக அழிந்துவிடும். மேலும் நைட்ரேட்டுகள் நைட்ரைட்டுகளாக மாறி, அரிசியைப் போலவே புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும். 

  • மீன் மற்றும் இறைச்சி: மீன் மற்றும் இறைச்சியை மீண்டும் சூடுபடுத்தினால் அதில் உள்ள புரதச்சத்து சிதைந்து செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். மேலும் அவற்றின் ஊட்டச்சத்து மதிப்பு முற்றிலுமாக குறைந்துவிடும். 

  • காளான்கள்: ஒருமுறை வேக வைத்த காலானை மீண்டும் வேக வைத்தால் அதில் உள்ள அத்தனை சத்துக்களும் சிதைந்து செரிமானத்தை பாதிக்கலாம். குறிப்பாக காளான்களில் உள்ள சில சேர்மங்கள் மீண்டும் சூடுபடுத்தினால் தீங்கு விளைவிக்கும் சேர்மங்களாக மாறி, உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும். 

இதையும் படியுங்கள்:
இனிமே காய்கறி தோல்களை இப்படி சமைச்சுப் பாருங்க, சூப்பரா இருக்கும்!
foods

மேலே, குறிப்பிட்டுள்ள உணவுகளை முடிந்தவரை சமைத்ததும் சாப்பிட்டு விடுங்கள். மீதமானால் குளிர்சாதன பெட்டியில் வைத்து இரண்டு நாட்களுக்குள் சாப்பிட்டுவிடவும். சூடு படுத்தும்போது லேசாக சூடுபடுத்தாமல், நன்கு சூடாக்கவும். இது அதில் வளர்ந்திருக்கும் பாக்டீரியாக்களை கொல்ல உதவும். மீண்டும் சூடுபடுத்திய உணவை விரைவில் சாப்பிட்டு விடவும். அதை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவதைத் தவிர்ப்பது உடல் நலத்திற்கு நல்லது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com