ஒரு மாதத்திற்கு தினசரி பூண்டு சாப்பிட்டால் என்ன ஆகும்? அச்சச்சோ!  

eat garlic
What happens if you eat garlic daily for a month?
Published on

பூண்டு பல நூற்றாண்டுகளாக உணவு மற்றும் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பிரபலமான பொருள். இதில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளதால் அவை உங்கள் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளை வழங்குகின்றன. பூண்டை தினசரி சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும், ஜீரணத்தை மேம்படுத்தவும், உடல் எடை இழக்கவும் உதவும் எனக் கூறுகின்றனர். ஆனால் உண்மையில் 1 மாதத்திற்கு தினசரி  பூண்டு சாப்பிட்டு வந்தால் என்ன ஆகும் என்பதை இப்பதிவில் பார்க்கலாம். 

தினசரி பூண்டு சாப்பிடுவதன் நன்மைகள்: 

  • பூண்டில் அல்லிசின் என்ற கலவை உள்ளது. இது ஒரு சக்தி வாய்ந்த ஆன்ட்டி ஆக்ஸிடண்ட் ஆகும். அல்லிசின், நோய்களை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை எதிர்த்து போராட உதவும் என ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன. 

  • பூண்டு ஜீரண மண்டலத்தின் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும். இது செரிமானம் மற்றும் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்தும். 

  • கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கவும், நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கவும் பூண்டு உதவும். இது ரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும். 

  • பூண்டு உங்கள் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து, கொழுப்பு எரிப்பை ஊக்குவிக்கிறது. மேலும், இது உங்கள் பசியைக் கட்டுப்படுத்துவதால் அதிகமாக சாப்பிடுவது தடுக்கப்பட்டு, உடல் எடை குறைப்புக்கு பெரிதளவில் உதவுகிறது. 

  • மேலும், புற்றுநோய், மூளை கோளாறுகள் மற்றும் விரைவில் வயதான தோற்றம் போன்றவற்றை எதிர்த்து போராட பூண்டு உதவுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இது தவிர, உங்களுக்கு சளி மற்றும் ஜலதோஷம் போன்றவை வரும் அபாயம் 63 சதவீதம் தடுப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 

கவனத்தில் கொள்ள வேண்டியவை: 

சிலருக்கு தொடர்ச்சியாக பூண்டு சாப்பிட்டால் வாய் துர்நாற்றம், வயிற்று வலி, வாயு மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பக்கவிளைவுகள் ஏற்படலாம். கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் அதிகமாக பூண்டு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். மேலும், நீங்கள் ஏற்கனவே தொடர்ச்சியாக ஏதேனும் மருந்துகளை உட்கொண்டு வந்தால் பூண்டு சாப்பிடுவதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது. 

இதையும் படியுங்கள்:
பூண்டு ஜூஸில் இருக்கும் 8 ஆரோக்கிய நன்மைகள்!
eat garlic

எவ்வளவு பூண்டு சாப்பிட வேண்டும்? 

பெரும்பாலான ஆரோக்கியமான நபர்கள் ஒரு நாளைக்கு 1 முதல் 2 பூண்டு பற்கள் சாப்பிடுவது பாதுகாப்பானது என பரிந்துரைக்கப்படுகிறது. 

ஒரு மாதத்திற்கு தொடர்ச்சியாக பூண்டு சாப்பிடுவது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் பல நன்மைகளை வழங்கக்கூடும். இருப்பினும், உங்களுக்கு ஏற்கனவே ஏதேனும் மருத்துவ நிலைமைகள் இருந்தால் மருத்துவரின் பரிந்துரை பெயரில் இதை முயற்சிக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com