முதியோரை பாதிக்கும் மறதி நோய்... ஜாக்கிரதை! 

Alzheimer's Disease.
Alzheimer's Disease.
Published on

மனித மூளை என்பது ஒரு அற்புதமான உறுப்பு. எண்ணங்கள், நினைவுகள், உணர்வுகள் என அனைத்தையும் நிர்வகிக்கும் இது, நம் வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் வண்ணமயமாக்குகிறது. ஆனால், இந்த அற்புதமான உருப்பும் கூட நோய்களுக்கு உள்ளாகும். அப்படி மூளையை பாதிக்கும் ஒரு கொடிய நோய்தான் அல்சைமர். குறிப்பாக இந்த நோய் முதியோரை அதிகம் பாதிக்கிறது. இந்தப் பதிவில் அல்சைமர் நோய் என்றால் என்ன? அதன் காரணங்கள், அறிகுறிகள், சிகிச்சை முறைகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

அல்சைமர் நோய் என்றால் என்ன? 

அதிசயமர் நோய் என்பது மூளையின் நரம்பு செல்களை சிதைக்கும் ஒரு நாள்பட்ட நோய். இது ஒருவரது நினைவாற்றல், சிந்தனை, நடத்தை போன்ற அறிவாற்றல் திறன்களை முற்றிலுமாக பாதிக்கிறது. முதியவர்களிடையே காணப்படும் மறதி நோய்க்கான காரணமே இதுதான். 

காரணங்கள்: 

அல்சைமர் நோய் எதனால் ஏற்படுகிறது என்பதற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இருப்பினும் சில காரணிகள் இந்த நோயை ஏற்படுத்தக்கூடும் என முன்வைக்கப்படுகின்றன. 

வயது அதிகரிக்கும் போது அல்சைமர் நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. சில மரபணு மாற்றங்கள் அல்சைமர் நோயை ஏற்படுத்தக்கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். 

உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, அதிக கொழுப்பு போன்ற நோய்கள் காரணமாகவும் அல்சைமர் ஏற்படலாம். அல்லது சிலருக்கு தலையில் அடிபட்டால்கூட அல்சைமர் நோய் ஏற்படும் வாய்ப்புள்ளது. 

இதையும் படியுங்கள்:
நீரிழிவு நோய்: கண்களில் இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை! 
Alzheimer's Disease.

அறிகுறிகள்:  

அல்சைமர் நோய் அறிகுறிகள் பொதுவாகவே மெதுவாக ஆரம்பித்து காலப்போக்கில் மோசமடையும். ஆரம்ப கால அறிகுறிகள் என்று பார்க்கும்போது, நினைவாற்றல் இழப்பு மிக முக்கிய அறிகுறியாக உள்ளது. 

அசைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்களால் சமீபத்திய நிகழ்வுகள், உரையாடல்கள் போன்றவற்றை நினைவில் வைத்திருக்க முடியாது. சாவி, பர்ஸ் போன்ற பொருட்களை அடிக்கடி தவற விடுவார்கள். 

எந்த முடிவுகளையும் அவர்களால் சரியாக எடுக்க முடியாது. திட்டமிடுவதிலும் சிரமத்தை சந்திப்பர். சரியான வார்த்தைகளை கண்டுபிடித்து பேசுவதில் சிரமம் ஏற்பட்டு பேச்சு குழற ஆரம்பிக்கும். மேலும், குழப்பம், பதட்டம், மனச்சோர்வு, ஆக்ரோஷம் போன்ற மாற்றங்கள் ஏற்படக்கூடும். 

சிகிச்சை: 

அல்சைமர் நோய்க்கு தற்போது வரை முழுமையான சிகிச்சைகள் எதுவும் இல்லை. ஆனால், நோயின் அறிகுறிகளை கட்டுப்படுத்தவும், வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும் சில சிகிச்சை முறைகள் உள்ளன. அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உணவு மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். புத்தகம் படித்தல், புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளுதல், போன்ற அறிவாற்றல் பயிற்சிகள் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நெருக்கமான உறவுகளை வைத்திருப்பது நோயாளியின் மனநலத்திற்கு நல்லது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com