Dawn Phenomenon என்றால் என்ன தெரியுமா?

Diabetics
Diabetics
Published on

அதிக சர்க்கரை இருப்பவர்கள் தங்களை அடிக்கடி சோதித்து பார்ப்பது நல்லது‌. நம் உடலில் சர்க்கரை என்பது நாம் உண்ணும் உணவிலிருந்து சேருகிறது. நம் உடல் இன்சுலின் மூலம் சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்கிறது. பிறகு அவை திசுக்களுக்குச் செல்கிறது. காலை வேளையில் சிலருக்கு சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். இது எதுவும் சாப்பிடவில்லை என்றாலும் இப்படி அதிகமாக இருக்கும் இதை morning hyperglycemia என்று கூறுவார்கள்.

ஏன் இப்படி ஆகிறது?

காலையில் நாம் கண் விழித்ததும் நம் உடல், ஹார்மோன்களான கார்டிசால் மற்றும் அடரினலீனை வெளியிடுகிறது. இந்த ஹார்மோன்கள் நீங்கள் தயாராவதற்கு வேண்டிய சக்தியை தருகிறது. இது நம் சர்க்கரை அளவையும் அதிகமாக்கி விடுகிறது. இதைத்தான் Dawn phenomenon என்று கூறுகிறார்கள்.

காலை நேரத்தில் காலை இரண்டு முதல் 8 மணி வரை அதிக சர்க்கரை இருக்கும். இது இயற்கையானது. ஆனால், நீரிழிவு உள்ளவர்களுக்கு இந்த அதிக சர்க்கரையை கையாள முடிவதில்லை. முதல் நாள் இரவு அதிக அளவு உணவு உட்கொள்வதால், அது இரவு உடலில் தங்கி சர்க்கரை அளவை ஏற்றக்கூடும்.

மற்ற காரணங்கள்

உடல்நிலை சரியில்லாமலும் , சோர்வினாலும் சர்க்கரை ஏறும். சரியான தூக்கமின்மையும் சர்க்கரை அளவை ஏற்றிவிடும் காலை நேரம் அதிக சர்க்கரை இருக்கும் நிலை தொடர்ந்தால், கண் பார்வை குறைபாடு, இதயம் மற்றும் சிறுநீரக பாதிப்புகள் ஏற்படலாம்.

இதை எப்படி கட்டுப்படுத்துவது?

நீங்கள் மருந்துகளை சரியாக எடுத்துக் கொள்ளுங்கள். சரியான நேரத்தில் எடுத்துக் கொள்வது மிக முக்கியம். உடற்பயிற்சி சர்க்கரையைக் குறைக்கும். சிறிது தூரம் நடப்பது கூட நல்ல பலன் தரும். இரவு சாப்பிட்டவுடன் சிறிது நடப்பது நல்லது. பதட்டம் சோர்வு இல்லாமல் இருங்கள். நல்ல தூக்கத்தை வழக்கமாகக் கொள்ளுங்கள். யோகா பயிற்சியில் ஈடுபடுங்கள். இவற்றில் ஈடுபட்டால் சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

இதையும் படியுங்கள்:
உலக அளவில் பெருமைகள் பல கொண்ட சென்னை மாநகரம்!
Diabetics

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com