Kefir தயிர் என்றால் என்ன?

Kefir curd
Kefir curd
Published on

பாலில் Lactose என்னும் சர்க்கரை இருக்கிறது. இந்த பாலில் Lacto bacillus என்னும் நல்ல பேக்டீரியாக்கள் சேரும் போது Fermentation process நடக்கும். இதனால் Lactic acid எனும் அமிலம் உருவாகிறது. இதுவே தயிராக மாறுகிறது.

Kefir என்பது தயிரைப் போன்ற ஒரு பானமாகும். இது ஐரோப்பிய நாடுகளில் அதிகம் புழக்கத்தில் இருக்கிறது. இந்த Kefir மற்றும் தயிருக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று பார்த்தால், தயிரில் Lacto bacillus என்னும் பேக்டீரியா இருக்கிறது.

ஆனால், Kefirல் 30 முதல் 50 க்கும் மேற்பட்ட நல்ல பேக்டீரியாக்கள் இருக்கின்றன. இதில்  Lacto bacillus, acetic acid bacteria, yeast போன்றவை இருக்கின்றன. இந்த Kefir தயிரை தயாரிக்க Kefir grains தேவைப்படும். அதை பாலில் போட்டு 12 முதல் 24 மணி நேரம் வைக்கும் போது Kefir தயிர் உருவாகும்.

சாதாரண தயிரை விட Kefir தயிரில் 30 முதல் 50 வகை நல்ல பேக்டீரியா இருப்பதால், இதில் உள்ள Probiotics effects அதிகமாக இருக்கும். நம் உடலில் ரத்த அழுத்தம் அதிகமாக ACE Enzymes காரணமாக உள்ளது. அதை தடுக்கக்கூடிய கெமிக்கல்ஸ் இந்த Kefir தயிரில் இருக்கிறது. Irritable bowel syndrome, inflammatory bowel disease போன்ற வயிறு சம்மந்தமான பிரச்னை உள்ளவர்கள் இந்த தயிரை பயன்படுத்தும் போது நல்ல பலன் கிடைப்பதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

Lactose intolerance பிரச்னைகள் இருப்பவர்களுக்கு பால், தயிர் போன்ற உணவுகள் சரியாக ஜீரணம் ஆகாது. அதுப்போன்ற பிரச்னை இருப்பவர்கள் இந்த Kefir தயிரை எடுத்துக்கொள்ளும் போது ஜீரணம் ஆவதாக சொல்லப்படுகிறது. சாதாரண தயிரை விட Kefirல் புளிப்புத்தன்மை சற்று அதிகமாக இருக்கும்.

Osteoporosis போன்ற எலும்பு சம்மந்தமான பிரச்னை உள்ளவர்கள் இந்த Kefir தயிரை எடுத்துக் கொள்வதால் இதில் உள்ள கேல்சியம் மற்றும் வைட்டமின் K2 விரைவில் எலும்புகளை வலுவாக்கி எலும்பு சம்மந்தமான பிரச்னையை போக்குகிறது.

இதய ஆரோக்கியத்திற்கு இந்த வகை தயிர் மிகவும் நல்லதாகும். ரத்தத்தில் உள்ள கெட்டக் கொழுப்புகளையும், கொலஸ்ட்ரால்களையும் கட்டுப்படுத்த உதவுகிறது. Kefir Grains ஐ பலமுறைக் கூட சரியான முறையில் பயன்படுத்தி kefir தயிரை உருவாக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
உங்கள் வீட்டுத்தோட்டத்தில் இந்த ஒரு செடி இருந்தால் போதுமே!
Kefir curd

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com