கோலா கொட்டை தெரியுமா?சாப்பிடலாம்... ஆனால், எச்சரிக்கை அவசியம்!

Kola nuts
Kola nuts கோலா கொட்டை
Published on

'கோலாநட்' (கோலா கொட்டை) என்பது மேற்கு ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட கோலா மரத்தின் காஃபின் நிறைந்த கசப்பான விதையாகும். 40 முதல் 60 அடி உயரத்தை எட்டும் இந்த மரங்கள் நட்சத்திர வடிவ பழத்தைத் தருகின்றன. ஒவ்வொரு பழத்திலும் இரண்டு முதல் ஐந்து கோலா கொட்டைகள் இருக்கும். இது காஃபின் மற்றும் தியோப்ரோமின் போன்ற தூண்டுதல் பொருட்களைக் கொண்டுள்ளது.

இவை பொதுவாக கசப்பாக இருக்கும். ஆனால், உள்ளிருக்கும் சதைப் பகுதி இனிப்பு சுவையுடன் இருக்கும். இவற்றை புதியதாக மென்று சாப்பிடலாம் அல்லது தேநீரில் பயன்படுத்தலாம். இதில் அதிகப்படியான காஃபின் இருப்பதால், எடுத்துக் கொள்ளும் பொழுது சிறிது கவனமுடன் கூடிய எச்சரிக்கை அவசியம்.

பாரம்பரிய மருத்துவத்தில் சளி, இருமல் மற்றும் செரிமானக் கோளாறுகளுக்கு இந்த கோலா கொட்டை சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது. இவை ஆற்றல் பானங்கள் மற்றும் மென்பானங்களில் ஒரு மூலப் பொருளாகவும், சில கலாச்சாரங்களில் மரியாதையின் அடையாளமாகவும் பயன்படுத்தப்படுகிறது.

1. கோலா கொட்டையின் சுவை

கோலா கொட்டைகள் புதிதாக இருக்கும் போது கசப்பான, துவர்ப்புச் சுவையைக் கொண்டிருக்கும். அடர்த்தியாகவும், மெல்லும் தன்மையுடனும், நார்ச்சத்துள்ள அமைப்புடனும் இருக்கும். ஆனால் அவற்றை உலர்த்தியோ அல்லது வறுத்தோ சாப்பிட சுவை சற்று மென்மையாகி ஜாதிக்காயின் வாசனையுடன் இருக்கும்.

2. கோலா கொட்டைகளின் ஆரோக்கிய நன்மைகள்

கோலாக்கொட்டைகள் ஆற்றலை அதிகரிப்பதாகவும், சோர்வை நீக்குவதாகவும், பசியைக் குறைப்பதாகவும் கூறப்படுகிறது. சாறு ஒரு மூலிகை சப்ளிமென்ட்டாகவும் சந்தைப்படுத்தப்படுகிறது. இந்த சப்ளிமெண்ட்கள் பொதுவாக FDAஆல் கண்காணிக்கப்படுவதில்லை. ஆனால், அவற்றில் காஃபின் உள்ளடக்கம் குறித்த எச்சரிக்கை இருக்கலாம். கர்ப்பிணிப் பெண்கள் அல்லது தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், 18 வயதுக்குட்பட்டவர்கள் பயன்படுத்தக் கூடாத காஃபின் கொண்ட பொருட்களின் பட்டியலில் கோலாகொட்டையும் உள்ளது.

3. கோலா கொட்டைகளின் பக்க விளைவுகள்

கோலா கொட்டையில் உள்ள காஃபின் தூக்கமின்மை, பதட்டம் மற்றும் நடுக்கங்களை ஏற்படும். தலைசுற்றல், அதிகரித்த ரத்த அழுத்தம், நெஞ்செரிச்சல் (அதிகரித்த வயிற்று அமில உற்பத்தியால்), நீர்ச்சத்து இழப்பு, வேகமான இதயத்துடிப்பு போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

இதையும் படியுங்கள்:
பல்லுக்கு இரவில் மட்டும் என்ன ஆச்சு? பகலில் இல்லாத வலி இரவில் வருவது ஏன்?
Kola nuts

கோலா கொட்டையை மெல்லுவது வாய் புற்றுநோய் மற்றும் இரப்பை குடல் புற்றுநோய்க்கான ஆபத்துடன் தொடர்புடையது என்றும், இதன் காஃபின் உள்ளடக்கம் காரணமாக தலைவலி, காதுகளில் சத்தம், எரிச்சல், தலைசுற்று, வயிற்றுப்போக்கு, கண்ணுக்குள் அழுத்தத்தை அதிகரிக்கும் கண் அழுத்த நோய் போன்றவற்றை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com