இப்படி இருந்தால், அப்படி நடக்கும்… ஜாக்கிரதை!

Psoriasis
Psoriasis
Published on

சோரியாசிஸ் (Psoriasis) என்பது ஒரு நீண்ட கால சரும நோய். இது தோலின் மேற்பரப்பில் உள்ள செல்கள் வேகமாக வளர்ந்து, தடிமனான, வெள்ளை நிறத்தில் உள்ள செதில்கள் போன்ற தோல்களை உருவாக்கும். இந்த செதில்கள் பொதுவாக தலை, முழங்கைகள், முழங்கால்கள் மற்றும் கீழ் முதுகு ஆகிய பகுதிகளில் காணப்படும். இது நம் சருமத்தை மட்டுமல்லாமல், மூட்டுகள், நகங்கள், கண்கள் போன்ற பகுதிகளையும் பாதிக்கலாம். 

சோரியாசிஸ் ஏற்படுவதற்கான முழுமையான காரணங்கள் இன்று வரை கண்டறியப்படவில்லை என்றாலும், இது ஒரு தன்னுடல் தாக்க நோய் என்று நம்பப்படுகிறது. அதாவது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி தவறுதலாக தோல் செல்களை தாக்கும் ஒரு நிலைதான் இது. சோரியாசிஸை தூண்டும் பிற காரணிகளில், மரபணு, புகைப்பிடித்தல், மன அழுத்தம், சில வகை மருந்துகள் போன்றவை அடங்கும். 

அறிகுறிகள்: சோரியாசிஸ் நோயின் அறிகுறிகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடலாம். 

  • சருமத்தில் தடிமனான வெள்ளை நிற செதில்கள். 

  • தோல் வறட்சி மற்றும் அரிப்பு. 

  • வீக்கம் வலி. 

  • நகங்கள் தடிமனாகி நிறம் மாறுதல்.

  • மூட்டுகளில் வீக்கம், வலி. 

இந்த சரும நோயை குணப்படுத்துவதற்கு மருந்துகள் இல்லை என்றாலும், இதன் அறிகுறிகளின் தாக்கத்தை நிர்வகித்து சருமத்தை மேம்படுத்த பல சிகிச்சைகள் உள்ளன. சோரியாசிஸ் நோயைக் கண்டறிய சரும நிபுணர் தோலை பரிசோதிப்பார். சில சமயங்களில் தோல் பகுதியை எடுத்து ஆய்வு செய்ய வேண்டி இருக்கும். 

சோரியாசிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதை முறையாக நிர்வகிக்க மறுத்தவரின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதியை எப்போதும் ஈரப்பதமாக வைத்திருக்கவும். உங்களுக்கு ஏதேனும் தீய பழக்கங்கள் இருந்தால் அதை உடனடியாக நிறுத்தவும். மன அழுத்தத்தை நிர்வகித்து, ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுங்கள். குறிப்பாக, தவறாமல் தினசரி உடற்பயிற்சி செய்வது நல்லது. இது உங்களை எல்லாவிதத்திலும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். 

இதையும் படியுங்கள்:
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் லவங்கப்பட்டை! 
Psoriasis

இந்த நோயை முறையாக நிர்வகிக்க தினமும் குளித்து பாதிக்கப்பட்ட பகுதியில் மாய்ஸ்சரைசர் பயன்படுத்தவும். எப்போதும் கடுமையான சோப்புகளை பயன்படுத்தாமல், குறைந்த ரசாயனங்கள் உள்ளவற்றையே பயன்படுத்தவும். தியானம், யோகா போன்ற பயிற்சிகளை செய்யுங்கள். உங்களுக்கு புகைப் பிடிக்கும் பழக்கம் இருந்தால் அது சொரியாசிசை மோசமாக்கும். எனவே அதை நிறுத்துவது நல்லது. 

சோரியாசிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. இவர்களுக்கு நண்பர்கள், உறவினர்கள், மருத்துவர்களின் ஆதரவு மிகவும் முக்கியம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com