சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் லவங்கப்பட்டை! 

Cinnamon that controls diabetes!
Cinnamon that controls diabetes!
Published on

சர்க்கரை நோயை நிர்வகிக்க பல மருத்துவ முறைகள் இருந்தாலும், இயற்கை மருத்துவம் குறித்த ஆர்வம் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இவற்றில் சிலர் லவங்கப்பட்டை பயன்படுத்தினால் சர்க்கரை அளவு குறைவதாக நம்புகின்றனர். பண்டைய காலங்களில் இருந்தே லவங்கப்பட்டை அதன் மருத்துவ குணங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பதிவில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த இலவங்கப்பட்ட எவ்வாறு உதவுகிறது என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம். 

லவங்கப்பட்டையில் காணப்படும் “சினமால்டிஹைட்” என்ற சேர்மம் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முக்கிய பங்கு வகிக்கிறது. இது உடலின் செல்கள் இன்சுலினை சிறப்பாக பயன்படுத்த உதவுகிறது. இதனால் ரத்த சர்க்கரை அளவு குறைகிறது. 

லவங்கப்பட்டை கல்லீரலில் உள்ள குளுக்கோஸ் உற்பத்தியை குறைத்து, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கிறது. மேலும், அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சர்க்கரை நோயால் ஏற்படும் சிறுநீரக, நரம்பு மண்டல பாதிப்புகளை குறைக்கிறது. 

சர்க்கரை நோயாளிகள் லவங்கப்பட்டையை தொடர்ச்சியாக உணவில் சேர்த்துக் கொள்வதால், நல்ல கொழுப்பின் அளவு அதிகரித்து கெட்ட கொழுப்பின் அளவு குறைகிறது. இதனால், இதய நோய் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது.‌ 

லவங்கப்பட்டையை எவ்வாறு பயன்படுத்தலாம்? 

லவங்கப்பட்டை துண்டுகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து டீ போல குடிக்கலாம். அல்லது, லவங்கப்பட்டையை பொடியாக்கி உணவில் சேர்த்து சாப்பிடலாம். மருந்து கடைகளில் கிடைக்கும் லவங்கப்பட்டை மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுக்கலாம். 

இதையும் படியுங்கள்:
1 மாதத்திற்கு சர்க்கரை சாப்பிடவில்லை என்றால் என்ன ஆகும் தெரியுமா? 
Cinnamon that controls diabetes!

சர்க்கரை நோய் உள்ளவர்கள் லவங்கப்பட்டையை உணவில் சேர்ப்பதற்கு முன் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம். ஏனெனில், இது மற்ற மருந்துகளின் செயல்பாட்டை பாதிக்கும் என்பதால், லவங்கப்பட்டையை உணவில் சேர்த்துக்கொள்வது குறித்து மருத்துவரிடம் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். எந்த ஒரு பொருளையும் அளவுக்கு மீறி உபயோகிப்பது உடலுக்கு கேடு. எனவே, லவங்கப்பட்டையை மிதமான அளவில் உபயோகிக்க வேண்டும். 

லவங்கப்பட்டை சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் ஒரு சிறந்த இயற்கை வைத்தியம் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். இது இன்சுலின் உணர்த்திறனை அதிகரித்து, ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. மேலும், உடலில் உள்ள வீக்கத்தைத் தணித்து இதய நோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. எனவே, இதை உங்கள் உணவில் மிதமாக சேர்த்துக்கொண்டு ஆரோக்கியமாக இருக்க முற்படுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com