Sepsis என்பது உடலில் ஏற்படும் ஒரு தீவிரமான எதிர்வினை. ஒரு தொற்று காரணமாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக செயல்பட்டு உடலில் பல்வேறு உறுப்புகளுக்கு சேதம் விளைவிக்குமபோது செப்சிஸ் ஏற்படுகிறது. இது மிகவும் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் உயிரையே பறித்துவிடும்.
Sepsis: பொதுவாக, சிறிய காயம் அல்லது தொற்றுநோய் கூட செப்சிஸ் பாதிப்புக்கு வழிவகுக்கும். பாக்டீரியா, வைரஸ், புஞ்சை அல்லது நுண்ணுயிரிகள் ரத்த ஓட்டத்தில் பரவி உடலின் பல்வேறு பகுதிகளுக்கு தாக்குதல் நடத்தும்போது செப்சிஸ் உண்டாகிறது. இதன் விளைவாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக செயல்பட்டு, உடலில் சொந்த செல்கள் மற்றும் திசுக்களை சேதப்படுத்தும். இதில் மொத்தம் மூன்று வகைகள் உண்டு.
Sepsis: இது தொற்று காரணமாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக செயல்பட்டு உள்ளேன் பல்வேறு உறுப்புகளுக்கு சேதம் விளைவிக்கும் நிலை.
Severe Sepsis: இது செப்சிஸ் பாதிப்பின் மேம்பட்ட நிலை. இதில் உடலின் பல்வேறு உறுப்புகள் செயலிழக்கும்.
Septic Shock: இது மிகவும் மோசமான நிலை. இதில் ரத்த அழுத்தம் மிகவும் குறைந்து, உடலின் உறுப்புகளுக்கு போதுமான ரத்தம் கிடைக்காமல் போகிறது.
அறிகுறிகள்: செப்சிஸ் அறிகுறிகள் நபருக்கு நபர் மாறுபடலாம். இதன் பொதுவான அறிகுறிகளாக காய்ச்சல், குளிர், மூச்சு வாங்குதல், அதிக இதயத்துடிப்பு, குழப்பம், தோல் சிவந்து போதல், குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் உடல் வலி ஆகியவை அடங்கும்.
இந்த பாதிப்பைக் கண்டறிய மருத்துவர் உடல் பரிசோதனை, ரத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் போன்றவற்றை மேற்கொள்வார். இதற்கான சிகிச்சை மிகவும் தீவிரமாக இருக்கும். சிகிச்சையின் ஆண்டிபயாட்டிகள், திரவங்கள், ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் மருந்துகள், உறுப்பு செயல்பாட்டை அதிகரிக்கும் மருந்துகள் ஆகியவை கொடுக்கப்படும். சில நேரங்களில் செயற்கை சுவாசம், ரத்த சுத்திகரிப்பு போன்ற செயல்முறைகள் தேவைப்படலாம்.
இதனை முறையாகக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் பல தீவிரமான சிக்கல்களுக்கு வழிவகுக்கும். இதனால், உறுப்பு செயல் இழப்பு, ரத்த உறைதல், மரணம் போன்றவை ஏற்படலாம். Sepsis என்பது மிகவும் தீவிரமான உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலை என்பதால், இதன் அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.