பால் குடிக்க சிறந்த நேரம் எது? அறிவியல் சொல்லும் உண்மைகள்! 

drink milk
Best time to drink milk.

பால் எல்லாவிதமான ஊட்டச்சத்துக்களும் நிறைந்த ஒரு உணவாகும். இதில் அத்தியாவசிய விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் புரதங்கள் நிரம்பியுள்ளதால் நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பால் பெரிதளவில் உதவுகிறது.‌ ஆனால், நீங்கள் எப்போது பால் குடிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து அதில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை உங்கள் உடல் எவ்வாறு பயன்படுத்துகிறது என்பது நிர்ணயிக்கப்படுகிறது. இந்தப் பதிவில் எந்த நேரத்தில் பால் குடிப்பதால் அதிக பலன்களைப் பெறலாம் என்பது பற்றி பார்க்கலாம். 

பால் குடிக்க உகந்த நேரம்: அறிவியல் ரீதியாக தூங்குவதற்கு முன் பால் குடிப்பதுதான் நல்லது என சொல்லப்படுகிறது. நாள் முழுவதும் எந்த நேரத்திலும் பாலைக் குடிக்கலாம் என்றாலும் பல நிபுணர்கள் படுக்கைக்கு முன் அதைக் குடிப்பதை பரிந்துரைக்கின்றனர். ஏனென்றால், பாலில் ட்ரிப்டோப்பான் என்ற அமினோ அமிலம் உள்ளது. இது தூக்கத்திற்கு உதவும் மெலடோனின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். எனவே படுக்கைக்கு முன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பால் குடிப்பது நீங்கள் வேகமாக தூங்குவதற்கு உதவும். 

மேலும், பாலில் உள்ள கால்சியம் மற்றும் விட்டமின் டி ஆரோக்கியமான எலும்பு வளர்ச்சியை ஊக்குவிக்கத் தேவையானவை. படுக்கைக்கு முன் பால் குடிப்பதால் நீங்கள் ஓய்வெடுக்கும்போது உங்கள் உடல் இந்த ஊட்டச்சத்துக்களை சிறப்பாக உறிஞ்சி எலும்புகளை வலுப்படுத்தும். 

பகலில் பால் குடிக்கலாமா?

பகலில் பால் குடிப்பதும் சில தனித்துவமான நன்மைகளை வழங்குகிறது. பாலில் உள்ள புரதம் உங்களை முழுமையாகவும், திருப்தியாகவும் உணர வைக்கிறது. இது அதிகப்படியான உணவு உட்கொள்வதை தடுத்து, எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்கிறது. பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடலின் ஆற்றல், வளர்ச்சிதை மாற்றம் மற்றும் நோய் எதிர்ப்பு செயல்பாட்டை அதிகரிக்கிறது. 

இதையும் படியுங்கள்:
Milk Burfi Recipe: குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பால் பர்பி வீட்டிலேயே செய்யலாமே! 
drink milk

பாலில் இருந்து அதிக பலன்களைப் பெற சர்க்கரைக்கு பதிலாக, தேன், லவங்கப்பட்டை போன்ற இயற்கையான சுவையூட்டிகளை சேர்க்க முயற்சிக்கவும். கூடுதல் ஊட்டச்சத்திற்காக பழங்களை அதில் சேர்த்து சாப்பிடலாம். பாலில் மூலிகை டீயை கலந்து உட்கொள்வதால், உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். 

எனவே இனி தினசரி தூங்குவதற்கு முன் ஒரு டம்ளர் பால் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இது உங்களை ஆரோக்கியத்துடன் வைத்திருக்கும் எளிய வழியாகும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com