காது கேளாமை மூளையை பாதிக்குமா? இரு காதுகளில் நன்றாக கேட்கும் காது எது?

தாயின் கருவறையில் முதலில் தோன்றும் உறுப்பும் இறுதி வரைக்கும் புதிய செல்களை உருவாக்கி தன்னை புதுப்பித்து கொள்ளும் உறுப்பும் காது மட்டுமே.
Connection between ear and brain
hearing
Published on

காதுகள் உடலின் முக்கிய உறுப்பு மட்டுமல்ல, ஆச்சரியமான உறுப்பும் கூட. கேட்பதற்கு மட்டும் தான் காது பயன்படும் என்று நினைத்து கொண்டிருக்கிறீர்க. உண்மையில் நீங்கள் நடக்கும் போது கீழே விழாமல் இருப்பதற்கான உடல் பாலன்ஸ் மையமும் காதில் தான் இருக்கிறது. உடலின் வெப்பநிலையை சமன்படுத்தும் வேலையையும் காது செய்கிறது. உடலின் உஷ்ணம் மாறுபடும் போது முக்கியமாக குளிர் காலங்களில் காது தான் முதலில் குளிரை உணரும்.

தாயின் கருவறையில் முதலில் தோன்றும் உறுப்பும் இறுதி வரைக்கும் புதிய செல்களை உருவாக்கி தன்னை புதுப்பித்து கொள்ளும் உறுப்பும் காது மட்டுமே. ஒரு மனிதன் இறக்கும் போது முதலில் அவன் இழப்பது கேட்கும் திறனைத்தான்.

ஒருவருக்கு பேச்சும், மொழியும் வர முதற் காரணம் காதுகளே. பிறக்கும் போதே முழு வளர்ச்சி அடைந்த எலும்பு நம்முடைய காதில் இருக்கும் எலும்பு தான். நம் காதின் உள்ளே உள்ள சதை பகுதி தான் நம் உடலிலேயே மிகவும் மெல்லிய சதைப்பகுதி.

இதில் தான் காது நரம்பு உள்ளது. அது 30000 க்கும் மேற்பட்ட மின் இணைப்புத் தொடர்புகளுடன் மூளையின் ஒரு பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

நம் இரு காதுகளில் எது நன்றாக கேட்கும் தெரியுமா?

வலது காது தான். ஆனால், சிக்கலான வார்த்தைகளை கையாள்வதில் இடது காது தான் சிறப்பாக செயல்படுகிறதாம். இது இசையை நன்றாக ரசிக்குமாம்.

மனிதனுக்கு நன்றாக காது கேட்கும் நேரம் விடியற்காலையில் மூன்று மணி, நம்முடைய ஐம்புலன்களின் உறுப்புகளில் முதலில் விழிக்கும் உறுப்பும் கடைசியில் ஓய்வு எடுக்கும் உறுப்பும் காது தான் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

காது கேட்கும் திறனுக்கும்(Hearing) மூளை செயல்பாட்டிற்கும் என்ன தொடர்பு?

செவி உணர்வு செல்களில் உண்டாகும் தூண்டல் மூளைக்கு எட்டியே நாம் ஒலியை கேட்கிறோம். காது கேளாமை உங்களது வயது முதிர்வை காட்டுவது மட்டுமல்ல, அது நினைவுத் திறன் செயலாபாட்டையும் நமக்கு அறிவுறுத்துகிறது. மூன்றில் ஒரு ஞாபக மறதி நோய் உள்ளவர்களுக்கு அவர்களின் காது கேட்பதில் பிரச்சினை உள்ளதை காட்டுவதாக கொலம்பியா வான்டர் பெக்ட் மற்றும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

காது கேளாமை எப்படி மூளையை பாதிக்கிறது?

மூன்று வழிகளில் அறிந்து கொள்ளலாம். மூளை சில சப்தங்களை கண்டறிய சிரமப்படும் போது, மூளை மந்தமடையும் போது கேட்பதில் குறைபாடு ஏற்படுகிறது மற்றும் கேட்பதில் சிரமம், காதில் அடிக்கடி ரீங்காரம் இடுவதை போன்று சப்தத்தை உணர்கின்றனர் இவர்களுக்கு விரைவில் 'டிமென்சியா' வரும் வாய்ப்பு உண்டு. இதை 'டின்னிடஸ் ( Tinnitus)' என்கிறார்கள்.

உலகில் 3 நிமிடங்களுக்கு ஒருவர் 'டிமென்சியா' எனும் ஞாபக மறதி நோய்க்கு ஆளாகிறார்கள் என்கிறது உலக சுகாதார மையம். இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்ட 8 மில்லியன் பேர் டிமென்சியாவில் துன்பப்படுகிறார்கள் என்கிறது ஆய்வு. அது 17 மில்லியனாக 2026 ல் மாறும் என்கிறார்கள்.

காதுகளின் முக்கிய எதிரி அன்றாடம் நாம் கேட்கும் சப்தங்கள் தான் என்கிறார்கள். நம்மை சுற்றி அன்றாட வாழ்வில் எண்ணற்ற சப்தங்களை கேட்கிறோம். வீடுகளில் மிக்சி, கிரைண்டர், வாஷிங் மெஷின் எழுப்பும் சப்தங்கள், சாலைகளில் செல்லும் வாகனங்கள் எழுப்பும் சப்தங்கள், தொழில் பகுதிகளில் எழும் சப்தங்கள் வரை அனைத்தையும் கேட்டு வருகிறோம்.

இதில் 70 டெசிபல் சப்தங்கள் வரை நம் காதுகளை பாதிப்பதில்லை. இதற்கு மேல் அதிகரிக்கும் போது அது நம் காது கேட்கும் திறனை பாதிக்கும் என்கிறார்கள். அதிகப்படியான சப்தங்களை தொடர்ந்து கேட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு ஹார்ட் அட்டாக் மற்றும் பக்கவாதம் வரும் வாய்ப்பு அதிகம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

சப்தம் அதிகமாக இருக்கும் இடங்களுக்கு செல்லும் போது காது அடைப்பை பயன்படுத்துங்கள். காதில் பஞ்சு வைத்துக் கொள்ளலாம். அதிக சப்தங்களை அதிகம் கேட்பவர்கள்1-3 வருடங்களுக்கு ஒருமுறை உங்கள் காதுகளை மருத்துவ பரிசோதனை செய்யுங்கள். காதில் பிரச்சினை இருப்பவர்கள் தயங்காமல் 'ஹியரிங் எய்டை' பயன்படுத்துங்கள்.

இதையும் படியுங்கள்:
நம் உடலில் உள்ள 'பத்தாவது மண்டை நரம்பு'! மூளையையும் உடலையும் இணைக்கும் நெடுஞ்சாலை!
Connection between ear and brain

காதுகள் பாதுகாக்கப்பட வேண்டிய நுட்பமான உறுப்பு என்பதால் அதை கண்காணித்து வந்தாலே காது கேளாமையை (Hearing problem) தவிர்க்க முடியும். இதயம், மூளை, கண்கள் மற்றும் உடல் எடை பராமரிக்க என நாம் சாப்பிடும் அனைத்து சத்தான உணவுகளும் நமது காதுகள் நன்றாக கேட்கவும் உதவுகிறது என்பதை அமெரிக்க மருத்துவ ஆய்வில் கண்டறிந்துள்ளனர். அதே வேளையில் இதய பாதிப்பு, அதிக உடல் எடை, சர்க்கரை நோய் போன்றவைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 67 சதவீதம் காது கேட்பதில் குறைபாடு எற்படுவதாகவும் கண்டறிந்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
ஒழுங்கற்ற மாதவிடாயா? பெண்களே உஷார்! காரணம் இதுவாகவும் இருக்கலாம்!
Connection between ear and brain

சர்க்கரை நோய் காது கேட்கும் ஆற்றலை குறைக்கிறது என்றும் நாள்பட்ட சர்க்கரை நோய் கேட்கும் தன்மையை பாழ்படுத்துகிறது என்றும் ஆய்வில் கண்டறிந்துள்ளனர் . டைப் 2 சர்க்கரை நோயுடன் இருப்பவர்கள் அவசியம் காது கேட்கும் சோதனையை செய்து பார்க்க வேண்டும் என்கிறார்கள் அமெரிக்க சன்னி டவுன் மெடிக்கல் சென்டர் ஆய்வாளர்கள்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com