CCF டீ: வெறும் ஒரு டீ இல்ல! செரிமானத்தை சீராக்கும் ஆயுர்வேத அற்புதம்!

CCF Tea
CCF Tea
Published on

நம்ம சமையலறையில இருக்கிற சில பொருட்கள், வெறும் உணவுப் பொருட்கள் மட்டும் இல்ல. அதுக்குள்ள பல மருத்துவ குணங்களும் இருக்கு. அதுல ஒன்னுதான் சீரகம், தனியா, சோம்பு (Cumin, Coriander, Fennel) இந்த மூணு பொருட்களையும் கலந்து செய்யுற CCF டீ. செரிமான பிரச்சனை, வாய்வு, வயிறு உப்பசம்னு எல்லாத்துக்கும் இது ஒரு நல்ல தீர்வு. ஏன் இந்த டீ இவ்வளவு சக்தி வாய்ந்தது, ஏன் இதை ஒரு ஆயுர்வேத மருந்தா சொல்றாங்கன்னு பார்க்கலாம் வாங்க.

1. செரிமான நெருப்பை தூண்டுகிறது: ஆயுர்வேதத்துல 'அக்னி' (Agni) அப்படின்னு ஒரு விஷயம் சொல்லுவாங்க. இது நம்ம செரிமான நெருப்பு. இந்த நெருப்பு நல்லா இருந்தா தான், நம்ம சாப்பிடுற சாப்பாடு நல்லா செரிமானம் ஆகும். CCF டீல இருக்கிற சீரகம், இந்த அக்னியை தூண்டுறதுக்கு ரொம்பவே உதவும். இதனால சாப்பிட்ட சாப்பாடு சீக்கிரம் செரிமானம் ஆகி, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராது.

2. வாய்வு, உப்பசத்தை குறைக்கும்: சீரகமும், சோம்பும் வாயுவை நீக்கக்கூடிய பண்புகளை கொண்டிருக்கு. சாப்பிட்டதுக்கு அப்புறம் வயிறு உப்பிசம், வாய்வு பிரச்சனை இதெல்லாம் இருந்தா, ஒரு கப் CCF டீ குடிச்சா போதும், உடனே ஒரு நிவாரணம் கிடைக்கும். இது செரிமான மண்டலத்தை அமைதியா வச்சுக்கும்.

3. நச்சுக்களை நீக்கும்: நம்ம உடம்புல 'ஆமா' (Ama) அப்படின்னு ஒருவித நச்சுப் பொருட்கள் சேரும்னு ஆயுர்வேதம் சொல்லுது. இந்த ஆமா சேர்ந்தா, பல நோய்கள் வரும். CCF டீல இருக்கிற தனியா இந்த நச்சுக்களை வெளியேற்ற உதவுது. இது உடலை சுத்தமா வச்சுக்க ஒரு நல்ல வழி.

4. சமநிலைப்படுத்துதல்: ஆயுர்வேதத்துல வாதம், பித்தம், கபம் அப்படின்னு மூணு தோஷங்கள் இருக்கு. இந்த மூணு தோஷங்களும் சமநிலையில இருந்தா தான், உடம்பு ஆரோக்கியமா இருக்கும். CCF டீல இருக்கிற சீரகம், தனியா, சோம்பு மூணுமே வாதம், பித்தம், கபம் இந்த மூணு தோஷங்களையும் சமநிலைப்படுத்த உதவும். குறிப்பா, பித்த தோஷத்தை அமைதியா வச்சுக்கும்.

இதையும் படியுங்கள்:
மினரல் வாட்டர் VS வீட்டுத் தண்ணீர்: எதுல இருக்கு அதிக சத்து? உடனே தெரிஞ்சுக்கோங்க!
CCF Tea

5. சத்துக்களை உறிஞ்ச உதவும்: நம்ம சாப்பிடுற சாப்பாடு செரிமானம் ஆனா மட்டும் போதாது. அதுல இருக்கிற சத்துக்கள் உடம்புல உறிஞ்சப்படணும். CCF டீ, செரிமான மண்டலத்தை ஆரோக்கியமா வச்சுக்கிட்டு, சத்துக்களை உடம்பு உறிஞ்சுக்க உதவுது.

CCF டீ ஒரு சாதாரண டீ இல்ல. இது செரிமானத்துக்கு ஒரு ஆயுர்வேத மருந்து. ஒருவேளை நீங்க செரிமான பிரச்சனையால கஷ்டப்பட்டுட்டு இருந்தா, இந்த டீயை ஒரு முறை முயற்சி செஞ்சு பாருங்க. வாரத்துல சில நாட்கள் குடிச்சா கூட நல்ல பலன் கிடைக்கும். இது ஒரு சிம்பிளான, ஆனா ரொம்ப சக்திவாய்ந்த தீர்வு.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com