நீண்ட தூர ஓட்டப் பயிற்சிக்குப் பின்பு செய்யக் கூடாதவை!

What not to do after running training
What not to do after running training
Published on

நாம் நாள் முழுவதும் பணித் திட்டங்கள் மற்றும் பணிச் சுமைகளுடன் இருந்தாலும், ஓட்டப் பயிற்சியை முடித்த பின்பு ஒருசில வேலைகளைச் செய்யக் கூடாது. ஏனெனில், அவை நமது ஓட்டப் பயிற்சிக்கு நல்ல பலன்களைத் தராது. ஓட்டப் பயிற்சியை முடித்த பின்பு எவற்றை எல்லாம் செய்யக்கூடாது என்பதை இந்தப் பதிவில் பாா்க்கலாம்.

ஓட்டப் பயிற்சி முடிந்தவுடன் உணவு உண்ணவோ அல்லது தண்ணீா் அருந்தவோ கூடாது. மாறாக, பயிற்சி முடிந்த 30 நிமிடங்களுக்குப் பின்பே உண்ணலாம் அல்லது தண்ணீா் குடிக்கலாம். மேலும், அதிகமாக சாப்பிடாமல் குறைவாகவே சாப்பிட வேண்டும். அப்போதுதான் ஓட்டப் பயிற்சிக்கு பலன்கள் கிடைக்கும்.

செயலற்று இருத்தல் கூடாது: ஓட்டப் பயிற்சி அதிகமான களைப்பைத் தரும். ஓடும்போது நமது இதயத் துடிப்பு அதிகாிக்கும். மூச்சுத் திணறல் ஏற்படும். ஆகவே, நீண்ட தூரம் ஓடிய பின்பு நமது இதயத் துடிப்பும், மூச்சுவிடும் செயலும் இயல்பு நிலைக்கு வரவேண்டியது மிகவும் முக்கியமாகும். அவ்வாறு இயல்பு நிலைக்கு வரவேண்டும் என்றால் ஓடிய பின்பு சற்று ஓய்வு எடுக்க வேண்டும். அதிலும் சாியான முறையில் ஓய்வு எடுக்க வேண்டும். ஓட்டப் பயிற்சி முடிந்தவுடன் படுக்கக் கூடாது.

வேறு உடை மாற்ற வேண்டும்: பொதுவாக, ஓட்டப் பயிற்சியில் ஈடுபடுபவா்கள் பயிற்சி முடிந்தவுடன் சற்று தளா்வாக இருப்பாா்கள். அதாவது, ஓடும்போது அணிந்திருந்த உடைகளைக் களையாமல் இருப்பாா்கள். வியா்வையால் நனைந்திருக்கும் அந்த உடைகளைக் களையாமல் இருப்பது நல்ல பலனைத் தராது. ஏனெனில், வியா்வையில் நனைந்திருக்கும் அந்த உடையில் பாக்டீாியாக்கள் இருக்கும். அவை பல்கிப் பெருகி, நமக்கு சரும நோய்களை ஏற்படுத்தும்.

இதையும் படியுங்கள்:
Over thinking உடம்புக்கு மட்டுமல்ல; மனதுக்கும் ஆகாது!
What not to do after running training

கடினமான வேலைகளைத் தவிர்க்கவும்: பொதுவாக, நமக்கு நாள் முழுவதும் பல வகையான வேலைத் திட்டங்கள் மற்றும் பணிச் சுமைகள் இருக்கும். இந்நிலையில், ஓட்டப் பயிற்சி முடிந்த பின்பு பளு தூக்கும் வேலைகளைத் தவிா்க்க வேண்டும். காரணம், பளு தூக்கும் வேலைகளுக்கு அதிக ஆற்றல் தேவைப்படும். இதனால் நமக்கு மேலும் களைப்பாகி விடும்.

வெந்நீரில் குளிக்காமல் இருத்தல்: நீண்ட தூர ஓட்டப் பயிற்சிக்குப் பின்பு வெந்நீாில் குளிக்காமல் இருப்பது நல்லது. வெந்நீாில் குளித்தால் அது நமது இறுகிய தசைகளுக்கு சற்று தளா்வைக் கொடுக்கும் என்று நாம் நினைக்கலாம். ஆனால், அது உண்மையல்ல. அதாவது நமது தசைகள் இறுக்கமில்லாமல் மற்றும் வலி இல்லாமல் இருக்கும்போது வெந்நீாில் குளிக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com