மாயம் இல்லே… மந்திரம் இல்லே… கழுத்து வலியைப் போக்கும் எண்ணெய்கள்! 

Neck pain
Neck Pain
Published on

இன்றைய காலத்தில் நீண்ட நேரம் கணினி முன் உட்கார்ந்து வேலை செய்வது, தவறான தோரணையில் தூங்குவது, மன அழுத்தம் போன்ற பல காரணங்களால் கழுத்து வலி ஏற்படலாம். இந்த வலியைப் போக்க பல வழிகள் இருந்தாலும், பாரம்பரிய மருத்துவ முறைகளில் எண்ணெய்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பல்வேறு வகையான எண்ணெய்கள், அவற்றின் சிறப்பு பண்புகளால் கழுத்து வலியைப் போக்கி, தசைகளைத் தளர்த்தி, ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகின்றன.‌ இந்தப் பதிவில் கழுத்து வலியை போக்க உதவும் பல்வேறு வகையான எண்ணெய்கள் பற்றி பார்க்கலாம். 

கழுத்து வலிக்கு பயன்படும் எண்ணெய்கள்: 

தேங்காய் எண்ணெய்: தேங்காய் எண்ணெய் பல ஆண்டுகளாக பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது வீக்கம் மற்றும் வலியைக் குறைக்க உதவும் பல சத்துக்களையும், ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட்களையும் கொண்டுள்ளது. தேங்காய் எண்ணெயை கழுத்து பகுதியில் மசாஜ் செய்வதால் தசைகள் தளர்ந்து வலி விரைவில் குறையும். 

எள் எண்ணெய்: எள் எண்ணெய் சூடு மற்றும் வறட்சியால் ஏற்படும் வலியைக் குறைக்க உதவுகிறது. இது தசைகளில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, தசைப்பிடிப்பைத் தடுக்கிறது. 

ஆலிவ் எண்ணெய்: ஆலிவ் எண்ணெய் வீக்கம் மற்றும் வளர்ச்சியைக் குறைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. இது சருமத்தை மென்மையாக்கி, தசைகளுக்குள் ஊடுருவி அதைத் தளர்த்துகிறது. 

கடுகு எண்ணெய்: கடுகு எண்ணெய் சூடு தன்மை கொண்டது. இது தசைப்பிடிப்பைப் போக்கி ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இருப்பினும் சென்சிடிவ் சருமம் கொண்டவர்கள் கடுகு எண்ணெய் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். 

லாவண்டர் எண்ணெய்: லாவண்டர் எண்ணெய் ஒரு சிறந்த இயற்கை வலி நிவாரணி. இது மன அழுத்தத்தைக் குறைத்து தூக்கத்தை மேம்படுத்துகிறது. லாவண்டர் எண்ணெயை தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயுடன் கலந்து பயன்படுத்துவது கழுத்து வலிக்கு நல்ல நிவாரணம் கொடுக்கும். 

இதையும் படியுங்கள்:
நல்லெண்ணெய் Vs தேங்காய் எண்ணெய்: ஆரோக்கியத்திற்கு சிறந்தது எது?
Neck pain

எண்ணெய்களை எவ்வாறு பயன்படுத்துவது? 

கழுத்து வலியைப் போக்குவதற்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள எண்ணெயை லேசாக சூடுபடுத்தி வெதுவெதுப்பாக இருக்கும்போது பயன்படுத்துவது நல்லது.‌ சூடு படுத்திய எண்ணெயை மெதுவாக கழுத்து பகுதியில் மசாஜ் செய்யவும். வட்ட வடிவில் லேசாகத் தேய்த்து மசாஜ் செய்வது நல்ல பலனைத் தரும்.‌ 

எண்ணெய் மசாஜ் செய்த பிறகு ஒரு சூடான துணியை கழுத்துப் பகுதியில் வைக்கவும். இது வலியைக் குறைத்து தசைகளைத் தளர்த்தும். சில எண்ணெய்களை சுவாசிப்பதன் மூலம் மன அழுத்தம் குறைந்து தூக்கம் மேம்படக்கூடும். இது கழுத்து வலி விரைவில் குணமடைய உதவும். 

மேலே, குறிப்பிட்ட எண்ணெய்களை சரியான முறையில் பயன்படுத்தும்போது கழுத்து வலியிலிருந்து விரைவில் நிவாரணம் பெறலாம்.‌

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com