எந்த நேரத்தில் டீ, காபி குடிக்கக்கூடாது தெரியுமா? மீறி குடித்தால்? 

What time not to drink tea and coffee?
What time not to drink tea and coffee?
Updated on

டீ மற்றும் காபி உலகெங்கிலும் பலரால் விரும்பி குடிக்கப்படும் பானங்கள். அவை சுவையாக இருப்பது மட்டுமின்றி புத்துணர்ச்சியையும் கொடுக்கக் கூடியவை. ஆனால், எந்த நேரத்தில் டீ, காபி குடிக்க வேண்டும், எந்த நேரத்தில் அவற்றை தவிர்க்க வேண்டும் என்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா?. தவறான நேரத்தில் டீ, காபி குடிப்பது செரிமான பிரச்சனைகள், தூக்கமின்மை, பதட்டம் போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இந்தப் பதிவில் டீ, காபி குடிக்க சிறந்த நேரம் மற்றும் தவிக்க வேண்டிய நேரங்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம். 

சிறந்த நேரங்கள்: 

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் டீ, காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். காலையில் எழுந்தவுடன் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து 30 நிமிடங்கள் கழித்து டீ காபி குடிக்கலாம். இது உங்கள் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து செரிமானத்தை மேம்படுத்த உதவும்.‌ 

உணவு அருந்துவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு டீ காபி குடிப்பது நல்லது. 

உடற்பயிற்சிக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு டீ அல்லது காபி குடிப்பதால் உங்கள் ஆற்றலை அதிகரித்து உடற்பயிற்சியின் போது சிறப்பாக செயல்பட உதவும். 

மதிய உணவிற்கு பிறகு ஒரு டம்ளர் டீ அல்லது காபி குடிப்பது செரிமானத்திற்கு உதவும். 

தவிர்க்க வேண்டிய நேரங்கள்: 

மேலே குறிப்பிட்டபடி காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் டீ அல்லது காபியை குடிக்காதீர்கள். மேலும் உணவுடன் சேர்த்து டீ காபி குடிப்பது செரிமானத்தை பாதிக்கக்கூடும். 

மாலை 4 மணிக்கு பிறகு டீ காபி குடிப்பது உங்கள் தூக்கத்தை பாதிக்கலாம். குறிப்பாக, படுக்கைக்கு செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் டீ காபி குடிப்பதை தவிர்க்கவும்.‌

இதையும் படியுங்கள்:
உலகில் உள்ள 5 விலை உயர்ந்த டீ வகைகள் பற்றிப் பார்க்கலாம் வாங்க!
What time not to drink tea and coffee?

மீறினால் ஏற்படும் விளைவுகள்: 

தவறான நேரத்தில் டீ காபி குடிப்பது வயிற்றுவலி, அஜீரணம், மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். டீ காபியில் உள்ள காஃபின் தூக்கத்தை பாதிக்கும். குறிப்பாக, தூங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு டீ, காபி குடிப்பது தூக்கமின்மை, இரவு நேர விழிப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.‌ 

அதிக அளவு காஃபின் உட்கொள்வது பதட்டம், படபடப்பு போன்ற உணர்வுகளை அதிகரிக்கக் கூடும். டீ காபியின் டைரியூரிக் விளைவுகள் சிறுநீர் கழிப்பதை அதிகரிக்கும். மேலும், போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால், நீரிழப்பை அவை ஏற்படுத்தலாம். 

logo
Kalki Online
kalkionline.com